நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களை சுவாமி விவேகானந்தருடன் மானசீகமாக இணைத்துக் கொள்வது இன்றளவும் நடந்து வருகிறது. அவர்கள் எல்லாம் வெவ்வேறு விதமான பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களின் மாநிலங்கள், மொழிகள், தொழில்கள், படிப்புகள் எனப் பலவும் வேறு. ஆனால் அவர்கள் அனைவருமே சுவாமி விவேகானந்தரின் கருத்துகள், செயல்பாடுகள் அல்லது அவரது ஆளுமை ஆகியவற்றால் கவரப்பட்டவர்கள். எனவே நாடு முழுவதும் அதிகம் பேரால் பரவலாக அறியப்பட்ட உதாரண புருஷராக அவர் இன்றளவும் விளங்கி வருகிறார்....
Tag: விவேக மலர்
சுவாமி விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள்
லட்சியத்தில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும் சாதிக்க நினைப்பவர்களுக்கும் – சேவை செய்ய ஏங்குபவர்களுக்கும் – இறைவனுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பவர்களுக்கும் – அறியாமை, சோம்பல், பொறாமை போன்றவற்றை விட்டுச் சிறகடிக்கத் துடிக்கும் அனைவருக்கும் சுவாமிஜியின் சிந்தனைகள் என்றும் உதவத் தயாராக உள்ளன. தனிமனித, சமுதாய முன்னேற்றத்திற்குமான பல அற்புதக் கருத்துகளை சுவாமிஜி கூறியுள்ளார். அவரது சிந்தனைகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டாலே- அவை நம்முள் கிளர்ந்தெழச்செய்யும் சக்தியைக் கொண்டே – நாம் பல சாதனைகளை நிகழ்த்திவிடலாம்.
ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்
கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்றான். இதன் உட்பொருளை நாம் அறிந்துகொள்வது அவசியம். நான்கு யுகங்களுள் கடையாயது கலியுகம். அதில் அறம் மிகக் குறைந்துள்ளது. ஆதலால் தெய்வத்தை அறிந்துகொள்ளவும், தெய்வத்தைத் தொழவும் முயலுபவர் கலியுகத்தில் மிகக் குறைந்திருக்கின்றனர். இனி, தெய்வம் எனும் சொல் எப்பொருளைக் குறிக்கிறது என அறிந்துகொள்வது அவசியம். இயற்கை வேறு, தெய்வம் வேறு அல்ல. ஒரே பொருள் இரண்டு விதங்களில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐம்பொறிகள் வாயிலாக நுகர்கின்றவிடத்து அது இயற்கை. ஞானக்கண் கொண்டு காணுமிடத்து அதே பொருள் கடவுள் எனப் பெயர்பெறுகிறது. கடவுள் காட்சி மெய்க் காட்சி. இயற்கைக் காட்சி பொய்யானது, நிலையற்றது. ஆதலால்தான் இயற்கையாகக் காணும் காட்சியைக் கடந்து மெய்ப்பொருளை உள்ளவாறு காணுதல் வேண்டும். அதை உள்ளவாறு அறிகின்றவிடத்து வாழ்க்கைச் சிக்கல்களெல்லாம் தாமாக அடிபட்டுப் போய்விடுகின்றன. விவேகானந்தரிடத்து மிளிர்கின்ற மகிமைகளுள் சில கந்தனிடமிருந்து பெற்றுள்ள மகிமைகளாகத் தென்படுகின்றன. ஆதலால் முருகக் கடவுளது மகிமைகளையும் மானுடருள் மேலோனாகிய விவேகானந்தரது விபூதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்போம்....
விவேகானந்தரும் அம்பேத்கரும்
சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுடத் துன்பத்தைக் கண்டு ரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுடத் துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையைத் துறந்து அதற்காக உழைத்தனர்...ன்றானது அதிசயமல்லவே.... (நமது தளத்தில் அம்பேத்கர் குறித்த 4வது கட்டுரை இது... ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன் எழுதியது)...
கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் ‘திருக்குறள்’ என்ற ஒப்பற்ற நூலைத் தந்திருக்கிறார். இன்றும் திருக்குறளின் மூலம் வாழ்ந்து, திருவள்ளுவர் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்....சுவாமி விவேகானந்தர் தாம் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு தன் சொந்தக் கல்வியை இழந்து, அறியாமையிலும் வறுமையிலும் சிக்கித் தவித்த எண்ணற்ற மக்களின் உள்ளத்தில் தன் சாகாவரம் பெற்ற சொற்களின் மூலம் எழுச்சி தீபம் ஏற்றியவர்....மகான்கள் வாழ்ந்த காலம் வேறாக இருக்கலாம். அவர்களது மொழி வேறாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்துக்களில் காணப்படும் ஒற்றுமை என்றும் உய்த்து உணரத்தக்கதாகும்.... (பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காராநந்தரின் கட்டுரை)...