அடல்ஜி என்னும் மாமனிதர்

வாஜ்பாயின் இனிய குரலும், கவிதை போன்ற ஹிந்தி மொழிநடையும் கேட்டு, அதனாலேயே ஜனசங்க உறுப்பினர் (பாஜகவின் முந்தைய வடிவம்) ஆனவர்கள் பலருண்டு. ஹிந்தி மொழிக்கு எதிராகப் போராடிய திமுக தலைவர் அண்ணா துரை கூட, “வாஜ்பாய் பேசும்போது ஹிந்தியும்கூட இனிக்கிறது” என்று கூறினார் என்றால், அவரது பேச்சாற்றலின் சிறப்பு புரியும்.

மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி…

ஒருவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இம்மூவரும் ஒரே குறிக்கோளுக்காக வெவ்வேறு முறைகளில் போராடினர். இவர்களுக்கு என்ன ஒற்றுமை? இந்தியாவின் மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி இவர்களை நடக்கச் செய்த சக்தி எது? ஜூலை 23 என்ற நாள் இம்மூவரின் வாழ்வில் பெற்ற இடம் தான் இவர்களை இன்று நினைத்துப் பார்க்க வைக்கிறது. தேசபக்தியே இவர்களை இணைத்தது; வழிநடத்தியது.