சாலை விபத்துகளில் உலக நாடுகள் வரிசையில் இந்தியா முதலாவதாக உள்ளது. உலகில் பாதுகாப்பற்ற சாலைகள் இந்தியாவில் தான் அதிகம் என்கிறது ஜெனீவாவில் உள்ள உலக சாலை கூட்டமைப்பு. இந்தியாவின் விபத்துப் பட்டியலில் முன்னணியில் உள்ளது தமிழகம். அதுவும், குறிப்பாக 18 வயதுக்கு மேல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள்தான் அதிகம் உயிா் இழப்பவா்கள். இவா்கள் அனைவருமே குடி போதையில் வாகனம் ஓட்டியவா்கள்.