இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாகக் கருதப்படுவது, இவர் எழுதிய ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று, உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. இது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.