பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்: நூல் மதிப்புரை 

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரின்  72 கடிதங்கள்  இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 1000 கடிதங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தேர்ந்தெடுத்த கடிதங்களின் தொகுப்பானது 1964 இல் தமிழில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்  நூற்றாண்டுக் காலத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது.

களா ஈசனை  வாழ்த்தவே  நூல்: சிறப்புப் பார்வை

திரு. கருவாபுரிச் சிறுவன் வெளியிட்ட ‘களா ஈசனை வாழ்த்தவே’ என்ற நூள் குறித்த மதிப்புரை இது...

வேதம் புதுமை செய்த பாரதி- நூல் மதிப்புரை

பாரதி ஆய்வாளர் திரு. ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய ‘வேதம் புதுமை செய்த பாரதி’ நூலுக்கான மிகவும் சிறந்த மதிப்புரை இது. ஆய்வாளரின் நுண்மான் நுழைபுலமும், எழுத்தாளர் ஜடாயுவின் தேர்ந்த ரசனை உணர்வும் இதில் வெளிப்படுகின்றன...

அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி: நூல் மதிப்புரை

பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய நூல் குறித்த மதிப்புரை இது... மகாகவி பாரதி வாழ்வில் ஒரு சில ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருந்தார். அது ஏன் என்று ஆராய்கிறது இந்த நூல்.

நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்: நூல் மதிப்புரை

தமிழகத்தில் சைவம் காத்த சான்றோர் திருநாவுக்கரசரையும், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் பயிர் வளர்த்த சுதேசி வீரர் வ.உ.சி. அவர்களையும் ஒப்பிட்டு அரிய நூலை அன்பர் ஒருவர் எழுதி இருக்கிறார். அந்த நூல் குறித்த மதிப்புரை இது....

ஸ்ரீ ராமாநுஜரும் சமத்துவமும்: நூல் மதிப்புரை

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள ஸ்ரீராமானுஜரும் சமத்துவமும் (2023) பல விதங்களில் ஒரு முக்கியமான நூல். நூலாசிரியர் சிறந்த கவிஞர், சிந்தனையாளர். தத்துவம், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் ஆழ்ந்து சஞ்சரிப்பவர். இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான காரணமாக அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குரிய விஷயம்.

வேத காலம்- நூல் மதிப்புரை

பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ் ஒரு வேத விற்பனர்.  ‘வேதகால வாழ்வியல்’ என்ற அவரது புகழ் பெற்ற மராட்டிய நூல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. அந்த நூலின் சுருக்கப்பட்ட பதிப்பாக இந்த நூலை சென்னையில் உள்ள சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது....

திராவிட கேள்வியும் தேசிய பதிலும் – நூல் மதிப்புரை

தமிழகத்தில் வெகுஜன ஊடகங்களில் பணிபுரிவோர் பலரும் திராவிட அரசியல் கருத்தாக்கங்களுக்கு தங்களை அடியாட்களாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் ஊடகவெளியில் விதைக்கும் பலவிதமான நச்சுக் கருத்துகளுக்கு தனது நூலில் எளிய பதில்களை தர்க்கரீதியாகவும், சில இடங்களில் புரிய வேண்டியவர்களுக்குப் புரியவைக்கும் விதமாக குதர்க்கரீதியாகவும் கூறுகிறார் இந்நூலாசிரியர் திரு. பா.பிரபாகரன்....

வீர சாவர்க்கர் ஒரு தீர்க்கதரிசி

திருவாளர்கள் உதய் மஹூர்கர், சிராயு பண்டிட் ஆகியோர் எழுதிய ‘Savarkkar: The man who could have prevented partition’ என்ற நூலுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ப.பூ. மோகன் பாகவத் அளித்துள்ள அணிந்துரையே இக்கட்டுரை….

சங்கரநயினார் கோயில் தலபுராணம் – நூல் மதிப்புரை

இந்த நூல் இதுவரை பல பதிப்புகள் கண்டிருந்தாலும் செம்மையான பதிப்புக் காணவில்லை என்ற குறையை நீக்கி இருக்கிறது குகபதி பதிப்பகம். கீழவயலி அம்பிகைதாசன் அளித்த உரையுடன் சங்கரநயினார் கோயில் புராணத்தை மீளாக்கம் செய்திருக்கும் நண்பர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுபோலவே ஒவ்வொரு தலபுராணமும் முழுமையாக அச்சிடப்பட்டால், நமது தமிழ் மொழி, மாநில வரலாறு செழுமையுறும் என்பதில் ஐயமில்லை.

அர்ச்சகக்குடி காத்த ஆசானின் வரலாறு

ஆலய வழிபாட்டின் அருமை பெருமை உணர்ந்தவர்களுக்கு அர்ச்சகக் குடியின் சிரமங்கள் தெரியும்; அர்ச்சகர்களுக்கு அவர்களும் உடனிருந்து உதவுவார்கள். அதற்கு பழனி ஈசான சிவாசாரியார் போன்றவர்களின் சரிதங்கள் இன்றைய தலைமுறைக்கு சொல்லப்பட  வேண்டும். இவரைப் போன்றவர்களின் அரும் முயற்சியால்தான் அர்ச்சகக் குடிகளுக்குத் தேவையான சிவாகமப் பயிற்சியும் அதற்குத் தேவையான அச்சிட்ட நூல்களும் வாழையடி வாழையாகத் தொடர்கின்றன.

ஆத்ம ஞான ரத்தினமும் சில சிந்தனைகளும்…

அன்றாட வாழ்வில் நமக்கு வழிகாட்டக் கூடிய, துணை நிற்கக்கூடிய வகையில், சின்ன சின்னதாக சுவாமிஜியின் 1004 உபதேச மொழிகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து வெளியிட்டுள்ளார் சுப்பிரமணிய சிவா. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1922இல் இந்த நூலைப் பிரசுரித்தவர் சை.ந.பாலசுந்தரம் என்பவர். ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, பார்க் டவுன்,  சென்னையில் அச்சிடப்பட்டு வெளியாகி உள்ளது.

பாரதி கருவூலத்தின் அரிய வைரம்

39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த ஓர் அதியற்புத உயர் மானுடர் மகாகவி பாரதி. அதுவும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராளியாக இருந்ததால் அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகி, கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆட்பட்டு, வாழ்க்கையுடன் போராடியே குறுகிய காலத்தில் அமரரானவர் அவர். அவரது போராட்ட வாழ்வுக்கு சான்று பகர்பவையாக அவரது கடிதங்கள் விளங்குகின்றன. இந்நூலில் 23 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. காசியில் இருந்து தனது இளம் மனைவி செல்லம்மாளுக்கு 1901இல் பாரதி எழுதிய கடிதம், ஒரு சாமானியனாக வாழத் துடித்த ஒரு சுதந்திரப் பறவையை இனம் காட்டுகிறது.

பாஸ்கர் ராவ்  என்னும் அற்புத ஆளுமை – நூல் மதிப்புரை

திரு. தி.ச.வைகுண்டம் எழுதியுள்ள ‘ஸ்ரீ B.பாஸ்கர் ராவ்: சங்கமென்னும் நந்தவனத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர்’ என்ற நூல் குறித்த மதிப்புரை இது. திருநின்றவூர் ரவிகுமார் தனக்கே உரிய பாணியில் இந்நூலின் அவசியத்தை விளக்கி இருக்கிறார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும் – நூல் மதிப்புரை

இந்திய சமூக வாழ்வில் பசுக்களுக்கு பிரதான இடமுண்டு. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த அடிப்படை ஆதாரத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமுதாயம் கடுமையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து போராடியிருக்கிறது. அதற்கான சான்றாவணமே  ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்’ என்னும் இந்நூல்.