பாரதி புலவன் மட்டுமல்ல

மகாகவி பாரதியின் நினைவுதின (செப். 11) பதிவு இது.

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 2

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி, அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது இரண்டாம் பகுதி…

ஆபரேஷன் சிந்தூர் – இரு பதிவுகள்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றில் இரு பதிவுகள் இங்கே…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 1

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

ராம சரிதமும் தமிழ்ச்சுவையும்

தமிழின் சிறப்புக்கு சிகரமான கம்ப ராமாயணத்தில் இரு திவலைகளை எடுத்து முகநூலில் விதந்தோதுகின்றனர், திருவாளர்கள் பெங்களூர் ச.சண்முகநாதனும், சேலம் முரளி சீதாராமனும். நீங்களும் இந்தத் தமிழ்ச் சுவையில் திளையுங்கள். அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்!

கல்வி அமைச்சரின் உளறலும், உணர்வாளர்களின் சாட்டை அடிகளும்…

வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாடு தலை வணங்கியதில்லை” என்று தமிழக சட்டப்சபையில் பேசி இருக்கிறார் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு. இவரது பேச்சிலுள்ள முட்டாள்தனமான வாதங்களையும், பொய்மையையும், கேவலமான ஹிந்து வெறுப்புணர்வையும் சாட்டையால் அடிப்பது போல முகநூலில் விளாசி இருக்கின்றனர், சில தேசபக்த உணர்வாளர்கள். அவற்றில் சில இதோ, நமது தளத்தின் பதிவாக….

பிரிவின் துயரம்: கம்பனும் பாரதியும்

அன்புக்குரியவள் பிரியும்போது பிரிவாற்றாமை புலம்பச் செய்கிறது. இதோ, கவிச் சக்கரவர்த்தி கம்பரும், மகாகவி பாரதியும் பிரிவின் துயரை இங்கு எப்படி வெளிப்படுத்தி இருக்கின்றனர், பாருங்கள்!

இளையராஜாவெனும் இசைப்பெருவெளி

மேற்கத்திய செவ்வியல் இசைக்கோர்வை வடிவமான ‘சிம்பொனி’யை லண்டனில் அரங்கேற்றி இருக்கிறார் தமிழகத்தின் தவப்புதல்வரும் இசைமேதையுமான இளையராஜா. இதுகுறைத்த இரு முகநூல் பதிவுகள் இங்கே, மீள்பதிவாக முன்வைக்கப்படுகின்றன...

ராமனின் அணியில் யார் சேர முடியும்?

கம்ப ராமாயணத்தை இலகுவாக முகநூலில் பாடமாக்கும் திரு. ச.சண்முகநாதன் எழுதிய இனிய பதிவு இது….

ஆண்டாள் – தமிழின் பக்தி அவதாரம்

திருவாடிப்புரத்தை முன்னிட்டு, முகநூலில் திரு. ச.சண்முகநாதன் எழுதிய கவிதை இங்கு மீள்பதிவாகிறது....

குழமணி தூரம்

பெங்களூரில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான திரு. ச.சண்முகநாதன், கம்பனிலும் பக்தி இலக்கியங்களிலும் தோய்ந்தவர். அவரது சுவையான பதிவு இது...

கம்பன் ஏமாந்தானா?

பெண்களின் கண்களை வேல்விழி, மலர்விழி, மைவிழி, மான்விழி, மீன்விழி, சேல்விழி, சுடர்விழி என்று கொண்டாடுவது கவிஞர்களின் இயல்பு. மலர் போன்ற மென்மையைக் கொண்டிருந்தாலும், வேல் போன்ற கூர்மையை உடையவை இக்கண்கள். கவியரசர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் நாயகியின் கண்களை அம்புவிழி என்று நாயகன் பாடுவதாக எழுதி இருக்கிறார். அதையொட்டிய சிறு ஆய்வுப் பதிவு இது…. மனம் கனிய, இலக்கியம் பயில்வோம்.

இதுவெல்லாம் ஒரு பிழைப்பா?

நாடாளுமன்ற மக்களவையில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பாரம்பரியச் சின்னமான செங்கோல் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கிறுக்குத்தனமாக உளறியதற்கு தகுந்த பதிலடி அளிக்கிறார் திரு. ச.சண்முகநாதன்.  ‘சீ, சீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு’ என்று வெகுண்டு மகாகவி பாரதி பாடியது இத்தகைய ஈனப் பிறவிகளை நினைந்து தானோ?

இசை ஆழ்வார் இளையராஜா

இசையுணர்வுடன் இறையுணர்வை வழங்கியிருக்கிறார் இளையராஜா, திவ்ய பாசுரம் தொகுப்பின் மூலம். கேட்டது முதல் இன்பத்தின் உச்சத்தில் மனம். சமீப காலமாக இப்படியொரு உன்னதமான நிலையை அடைந்ததில்லை. ஆழ்வார் தமிழை, அரங்கன் மீதான காதலை, நாராயணன் மீதான பக்தியை இப்படியொரு இசை வடிவத்தில் கேட்க என்ன தவம் செய்து விட்டோம் நாம்!

கம்பரும் தியாகராஜரும்

ராமனாய் இருப்பது எவ்வளவு கடினம்? அவன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது, அவனை நம்பியவர்களுக்கு. அது தாமதமாவதால், நம்பியோர் பெறும் ஏமாற்றம், அதனால் ராமனுக்கு கிடைக்கும் வசை அதிகம். இதுவும் ஒருவகை திருவிளையாடலின் பகுதியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.