பாரதி எழுதிய ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில், பாரதி விரும்பிய சுதேசிப் பள்ளியின் இலக்கணமும், அங்கு பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்களும், ஒரு தேர்ந்த கல்வியாளர் போல திட்டமிட்டு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு உவக்கிறோம்.
Tag: சேக்கிழான்
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 2
திருவள்ளுவரையும் சுவாமி விவேகானந்தரையும் தனது ஆதர்ஷ நாயகர்களாகக் கருதியவர் மகாகவி பாரதி. இது, அவரது படைப்புகளில், சிந்தனைகளில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. பாரதியின் கல்விச் சிந்தனைகள் பலவும் வள்ளுவரும் விவேகானந்தரும் கூறியவையே. வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட நாயகரான பாரதி, இக்கருத்துகளையே தனது பாணியில் முன்வைக்கிறார்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 1
வைரத்தின் ஒவ்வொரு முகப்பும் ஒளியுடன் திகழ்வது போல, மகாகவி பாரதியின் கவிதைகளும் கட்டுரைகளும் தேசநலனை மட்டுமே ஒளியாக உமிழ்கின்றன. அவற்றில் கல்விக்கு அவர் அளிக்கும் இன்றியமையாமையை மட்டும் இங்கு நாம் தொடராகத் தொகுத்துக் காணலாம்....
அமெரிக்கப் பெண்ணின் ஆங்கிலக் கவிதையை தமிழில் தந்த மகாகவி
இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் செயல்பட்ட மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற பெண்மணியின் ஆங்கிலக் கவிதையை ‘இந்தியாவின் அழைப்பு’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார் மகாகவி பாரதி. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதுவே மகாகவியின் கடைசிக் கவிதையாக இருக்கலாம் என்பது தான்....
பொது உரிமையியல் சட்டம்: காலத்தின் தேவை
ஒருவர் பூணூல் அணிகிறாரா, திருநீறு பூசுகிறாரா, நாமம் தரிக்கிறாரா, தொப்பி அணிகிறாரா, சிலுவையை அணிகிறாரா, டர்பன் அணிகிறாரா என்பதல்ல பிரச்னை. அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படுகின்றனரா என்பதே கேள்வி. குறிப்பாக அனைத்து சமயங்களிலும் சரிபாதியாக இருக்கும் மகளிருக்கு சமுதாய வாழ்வில் சமமான நீதியை வழங்குவது அரசியல் சாசனத்தின் கடமை.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 21
காலந்தோறும் நமது தாய்மொழி எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான நிகழ் சாட்சியமாகவே, நமது ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ என்ற தேடலைக் கூற முடியும். நாட்டு மக்கள் நலம் பெற உதவும் மன்னரின் செங்கோலுக்கு நமது இலக்கியங்கள் சுமார் 2,500 ஆண்டுகளாக அளித்த முக்கியத்துவம் கடந்துபோன அத்தியாயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் நிறைவாக, நல்லாட்சி, செங்கோல் குறித்து, தமிழ்த்தாயின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் கருத்து என்னவாக இருந்தது என்று அறிவோம்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 20
தமிழ் இலக்கிய- இலக்கணங்களில் செங்கோலைத் தேடும் நமது இலக்கிய யாத்திரையின் நிறைவுப் பகுதி மகாகவி பாரதியே. எனினும் அவருக்கு முன்னோடியாக விளங்கியவர், தமிழகத்தின் தவச்செம்மல், சநாதனம் காக்க உதித்த அறச்செம்மலான வள்ளலாரே.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 19
நமது நாட்டில், நல்லரசன் ஆளும் நாட்டில் மாதம் மும்மாரி பொழியும் என்ற நம்பிக்கை பாரம்பரியமாக நிலவுகிறது. செங்கோலாட்சியின் அடையாளமே மாதம் மும்மாரி மழை தான் என்கிறது ‘விவேக சிந்தாமணி’ என்னும் பிற்கால நீதிநூல்....
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 18
தமிழ் இலக்கியத்தின் என்றுமுள சீரிளமைக்கு அடையாளமான இனிய பாசுரங்கள் வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் காணப்படுகின்றன. அவற்றில் செங்கோல் ஏந்தி வரும் பாசுரங்கள் சிலவற்றை இங்கே நாம் காணலாம்...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -17
நமது தமிழ் மொழியின் வனப்பை மெருகேற்றிய இனிய பாடல்களை சைவர்களின் பன்னிரு திருமுறையும், வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தமும் அளித்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனைப் போற்றுவதுடன், அக்கால மக்களின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளன. இவற்றில் பன்னிரு திருமுறைகள் குறித்தும், அதில் செங்கோல், நல்லாட்சி தொடர்பான செய்திகள் பயிலும் சில பாடல்களையும் முதலில் காண்போம்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 16
அகப்பாடல்களிலும் கூட செங்கோலையும், செங்கோன்மையையும் வலியுறுத்தும் தமிழ்ப் புலவர்களின் பாங்கு எண்ணி மகிழத் தக்கதாகும். மூவேந்தரைப் புகழும் வகையில் அமைந்த, இலக்கியச் சுவை மிகுந்த சில முத்தொள்ளாயிரம் அகப்பாடல்கள் இங்கே...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 15
பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகையில் அடங்கிய 11 நீதிநூல்களில் அரசு அறநெறிச் செய்திகள் 9 நூல்களிற் காணப்படுகின்றன. இவற்றில் திருக்குறள் தொடர்பான விரிவான செய்திகளை முதல் இரு அத்தியாயங்களில் பார்த்தோம். பிற 8 நீதி நூல்களின் செங்கோன்மைக் கருத்துகளை இங்கே காண்போம்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 14
மன்னரின் அணிகலன்களான மணிமகுடமும், கூர்மையான வாளும், வெண்கொற்றக்குடையும், செங்கோலும் பொருள் பெறுவது அவர்களின் நடுநிலைமை தவறாத, கோல் கோணாத, மக்களைப் புரக்கும் அருளாட்சியால் தான். இதனை அவர்களின் கரத்தில் ஏந்தி இருக்கும் செங்கோல் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 13
இந்த பரந்த பாரத தேசத்தின் நில எல்லையைத் தீர்மானமாகக் கூறும் புறநானூற்றின் 17ஆம் பாடல், மிகவும் கவனத்திற்குரியது. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நம் நாடு ஒன்றுபட்டு இருந்ததன் அடையாளம் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளதன் ஆதாரம் இது.
பாரதியின் தராசு – உரையாடும் உற்ற நண்பன்
பத்தி எழுதுபவர் எதைப் பற்றி வேண்டுமாயினும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்ந்து எழுதுவார்; சில நேரங்களில் நாட்டு நடப்பை போகிற போக்கில் சொல்லிச் செல்வார்; சில நேரங்களில் நகைச்சுவைத் தோரணமாகவும் அந்தப் பத்தி எழுத்து இருப்பதுண்டு. இவை அனைத்திற்கும் முன்னோடியாக பாரதியின் ‘தராசு’ கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.