இந்த பரந்த பாரத தேசத்தின் நில எல்லையைத் தீர்மானமாகக் கூறும் புறநானூற்றின் 17ஆம் பாடல், மிகவும் கவனத்திற்குரியது. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நம் நாடு ஒன்றுபட்டு இருந்ததன் அடையாளம் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளதன் ஆதாரம் இது.
Tag: செங்கோல்
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 12
தமிழ் இலக்கியங்களில் அக்கால வரலாற்றை மன்னர் கொடிவழியுடன் பதிவு செய்துள்ள ஒரே நூல், பதிற்றுப்பத்து. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பாடல் இலக்கியமான இந்நூல், சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி, பத்து புலவர்கள் பாடிய பத்துப் பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலில் நல்லாட்சி, செங்கோல் குறித்துப் பயின்றுவரும் பாடல்களைக் காண்போம்...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 11
நமக்குக் கிடைத்திருக்கும் 22 பரிபாடல்கள், மாலவன், முருகன், வைகை ஆறு ஆகியவை பற்றிய பாடல்களே. இதில் மாலவனின் அறக்கோலாக செங்கோல் இடம் பெறும் கருத்து பரிபாடல்-3இல் வருகிறது.... அறத்திற்கு ஆதியாக விளங்குவது மன்னவனின் செங்கோல்; அந்த மன்னவனுக்கும் ஆதியாக நிற்பது கார்மேகவண்ணனின் அறக்கோல்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 10
எட்டுத்தொகை நூல்களில் அகப்பாடல்கள் கொண்ட ஐந்து நூல்களில் (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு) பயின்று வரும் செங்கோல் குறித்த செய்திகளைக் காணலாம்…
மன்னரின் அடையாளமா செங்கோல்?
மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் நாராயணன் இந்த வார ‘ராணி’ இதழில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது. மக்களாட்சி முறையில் செங்கோலுக்கு இடமில்லை என்று கூறும் அதி புத்திசாலிகளுக்கு பதில் அளிக்கிறது இக்கட்டுரை.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 9
பத்துப்பாட்டு இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்ற செங்கோல் தொடர்பான செய்திகளை சென்ற அத்தியாயத்தில் கண்டோம். அவை தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்கள் குறித்தும், அவற்றில் பயின்று வரும் செங்கோல் கருத்துகள் குறித்தும் இங்கு காண்போம்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 8
பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து, ஆற்றுப்படை நூல்கள். அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகியவை. இந்த ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படையிலும், மலைபடுகடாமிலும் மன்னரின் / நாட்டின் சிறப்புகள் குறித்த செய்திகள் இருந்தாலும், செங்கோல் தொடர்பான நேரடியான குறிப்புகள் இல்லை. பிற மூன்று ஆற்றுப்படை நூல்களிலும் காணப்படும் செங்கோல் குறித்த பாடல்களை இங்கு காண்போம்...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -7
உலகியல் இன்பங்களை விட உயர்ந்தது துறவு என்று கூறுவதற்காக திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட காப்பியமான சீவக சிந்தாமணி, அக்கால மன்னரின் முறை வழுவா ஆட்சியின் சின்னமாக செங்கோலை முன்னிறுத்தும் செய்யுள்களைக் கொண்டு இலங்குகிறது....
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 6
பழந் தமிழ் இலக்கணமான தொல்காப்பியம், ‘படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பது பொருட்களும் வேந்தர்க்கு உரியவை’ என்று கூறுகிறது. இவை அனைத்திற்கும் மேலானதாக செங்கோல் மன்னனின் அடையாளம் என்கிறது தொல்காப்பியம்....
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 5
இளமை நிலையாமை, யாக்கை (உடல்) நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் மணிமேகலை காப்பியம் அழுத்தமாகக் கூறுகிறது. பௌத்த சமயத்தின் ஆணிவேரான துறவையும் தொண்டையும் போற்றிப் பரவுகிறது இக்காப்பியம். என்றபோதும் மன்னனின் செங்கோல் உயர்வை காப்பியம் ஆங்காங்கே முன்வைப்பது, செங்கோல் வீழின் துறவும் நிலையாது என்பதால் தான்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 4
‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ ஆகிய மூன்று அறவுரைகளை முன்னிறுத்தி, கற்பின் கனலி கண்ணகியின் கதையைக் காப்பியமாக்கி இருக்கிறார் இளங்கோ அடிகள். இக்காப்பியத்தில் ஆங்காங்கே, செங்கோல் குறித்தும், நல்லாட்சி குறித்தும் இனிய செய்திகள் தொடர்ந்து பயின்று வருகின்றன. அவற்றை இங்கு காண்போம்…
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 3
நடையில் நின்றுயர் நாயகனான ராமன் புகழ் பாடும் கம்ப ராமாயணத்தில் செங்கோன்மை குறித்து இல்லாமல் இருக்குமா? ராமனின் நாடான கோசலமே ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணச் சான்றாக இருக்கிறது. ஒரு செம்மையான ஆட்சி நிலவும் நாடு எவ்வாறு இருக்கும் என்று இலக்கணம் வரைந்த கம்பர், செங்கோலின் சிறப்பையும் ஆங்காங்கே பாடல்களில் கூறிச் செல்கிறார். செங்கோல் ஓங்கிய ஆட்சியே ராமராஜ்ஜியம் என்று அழைக்கப்படுவதும், அதையே நமது தேசிய லட்சியமாக மகாத்மா காந்தி முன்வைத்ததும் இயல்பானவை அல்லவா?
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 2
‘செங்கோன்மை’ அதிகாரத்தில் மன்னரின் இலக்கணத்தை நேர்மறையாக கூறியவர், ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் எதிர்மறையாகக் கூறுகிறார். இவ்வாறு நேர்மறை- எதிர்மறையாகக் கூறி ஒரு கருத்தை மிகவும் ஆழமாக விளக்குவது திருவள்ளுவருக்கு புதியதல்ல. இதோ, ஒரு கொடுங்கோலன் எவ்வாறு இருப்பான், அதற்கான காரணங்கள் என்ன என்று பத்து குறட்பாக்களில் கூறுகிறார் திருவள்ளுவர்...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 1
இந்தியா சுதந்திரம் பெற்றபோது 1947 ஆகஸ்ட் 14-இல் திருவாவடுதுறை ஆதீனத்தால் நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று (28.05.2023) தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்படுகிறது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. இதனையொட்டி, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செங்கோல் குறித்த பதிவுகளைக் காண்போம்...