-வ.மு.முரளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (தோற்றம்: 1897 ஜன. 23) விவேகானந்தரின்வீர உரைகளால்வார்க்கப்பட்டவன்.ஆன்மீகத்தில்ஆசை கொண்டுஅலைந்து கண்டவன்.ஆங்கிலேயரின்அடக்குமுறையால்அவமானப்பட்டவன்.ஐ.சி.எஸ்.சைஉதறியதாலேஅதிசயமான(ண)வன்.சும்மா வராதுசுதந்திரம் என்றுஉணர்ந்து சொன்னவன்.காங்கிரஸ் கட்சியின்காலித் தனங்களால்காயம் பட்டவன்.சிறைத் தண்டனையால்சித்திரவதையால்சிரமப் பட்டவன்.உடலே நொந்துஉறுத்தியபோதும்உறுதியானவன்.அன்னியர் கண்ணில்மண்ணைத் தூவிபறந்து போனவன்.ஹிட்லரை நேரில்குற்றம் கூறியகுறிஞ்சிப் பூவினன்.சுதந்திரத் தீவின்சுறுசுறுப்போடுகை கோர்த்தவன்.ஐ.என்.ஏ.வால்ஆங்கிலேயரைஅலற வைத்தவன்.எண்ணிய கனவைஎய்திடும் முன்னர்எரிந்து போனவன்.இன்றும் தேசியஇதயங்களிலேஇனிது வாழ்பவன். $$$