சசி கரூர் ஐ.நா. சபை மேனாள் துணை செயலாளர்; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் . திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். இந்தக் கட்டுரையில், ஆங்கில மொழி ஒரு கருவி. அது நமக்கு தேவை. ஆனால் ஆங்கிலேய உளநிலை தேவையில்லை. ஆங்கில இலக்கியங்களை, மரபுகளைத் தெரிந்து கொள்வதற்கு இணையாக நம் மண் சார்ந்த இலக்கியங்களை, புராணங்களை நம் தாய்மொழியில் கற்க முடியாவிட்டால் ஆங்கில மொழியிலாவது கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.