கோமதியே நம் குலதெய்வம்!

கோமதி என்னும் இத் திருச்சொல், லட்சோப லட்ச மக்களின் உயிர்த்துடிப்பாய் விளங்கும் உன்னத மந்திரம். இம்மந்திரத்தின் சொரூபிணி, பரமநாயகியாகத் திகழும், மருத்துவர்களுக்கெல்லாம் தலைமை மருத்துவச்சியாம், தரணி போற்றும் ஆவுடை நாயகியம்மையை நினைப்பவர் வாழ்வில்  நினைத்தது நடக்கும். கோமதியை மொழிந்தவர் வாழ்வில் மொழிந்தது பலிக்கும். கோமதியை வழிபட்டோர் வாழ்வில் நிகழ்த்தியது சிறக்கும்.