பல்லாண்டு பாடுங்கள்! பார் போற்ற வாழுங்கள்!

குருநாதர்கள்  மூலம் உபதேசிக்கப்பட்ட மகாமந்திரத்தினைச் சொல்வதற்கு முன்  பிரணவத்தை ஞானிகள் மனதிற்குள்  உச்சரிப்பார்கள். அதுபோல திவ்ய பிரபந்தமான ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முன் விஷ்ணு சித்தர்  பாடிய பல்லாண்டு பாசுரம் பிரணவப் பாசுரமாக  திகழ்கிறது என்கிறார் ஆச்சாரியர் நாதமுனிகள்.