-ஆசிரியர் குழு

அன்பு நண்பரும் ஹிந்துத்துவ செயல்பாட்டாளருமான திரு. பால. கௌதமன், சென்னையில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தையும் ஸ்ரீ வெப் டி.வி.யையும் நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஹிந்து மக்களின் இதயக் குரலாக ஸ்ரீ டி.வி. இயங்கி வருகிறது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று, தேசப் பிரிவினையின்போது பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீர வணக்க நாளை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அனுசரித்து வருகிறது. இவ்விழாவில், பி.ஆர்.ஹரன் நினைவு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விழாவில் விருது வழங்க, பொருள் புதிது இணையதளத்தின் ஆசிரியர் திரு. வ.மு.முரளி (சேக்கிழான்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹிந்துத்துவ அறிவியக்கத்தின் முன்னோடியான அமரர் திரு. பி.ஆர்.ஹரன் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது.
பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. இரா.சீனிவாசன், தேசிய சிந்தனையாளர் பேரவையின் தலைவர் திரு. ஓமாம்புலியூர் ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் தள வாசகர்கள் கலந்துகொள்ளலாம்.
விழா நாள்: 14.08.2025, வியாழக்கிழமை, மாலை 6.00 மணி.
இடம்: ஷோபனா கல்யாண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை.
”இதுவரையிலான எனது சமுதாயப் பணிகளை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்பதுவே இந்த விருதின் நோக்கமெனக் கருதுகிறேன். விழா அமைப்பாளர்களுக்கு நன்றி” என்று திரு. வ.மு.முரளி கூறியுள்ளார்.
$$$.