‘தமிழ் மொழி நமது மூச்சாகும், பாரதம் எமது உடலாகும், தர்மம் என்றும் உயிராகும்' என்கிற கருத்துக்கள் வழி நின்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் தமிழையும் காத்து நின்று, பாரதத்தின் தலைவர்களாகவும் திகழ்ந்தனர். தமிழ்த் தேசியம் வேறு, இந்து தேசியம் வேறல்ல. இந்து தேசியம் என்பது தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கியது ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்து தேசியம் ஆகும்.