-ஆசிரியர் குழு

வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் அரங்கு அமைகிறது.
ஆபரேஷன் சிந்தூரை அடுத்து கோவை, சென்னை, நெல்லையில் நடந்த ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு தேசிய சிந்தனையுள்ள எழுத்தாளர்களை ஒருங்கிணைத்திருக்கிறது. அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக, புத்தகக் காட்சியில் இந்த அரங்கு அமைகிறது.
ஒத்த சிந்தனையுள்ள – கோவை புத்தகக் காட்சியில் பங்கேற்க வாய்ப்பில்லாத – பதிப்பகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், ‘படைப்பாளர்கள் சங்கமங்களில்’ பங்கேற்ற எழுத்தாளர்களின் நூல்கள் இந்த அரங்கில் கிடைக்கும். இதுவரை சுமார் 350 நூல்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த அரங்கில் தனது நூல்களை அறிமுகப்படுத்த விரும்பும் தோழர்கள் கீழ்க்காணும் நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
திரு. சுப்பு : 98842 71376
திரு. வ.மு.முரளி: 99526 79126
தமிழ்த் தாத்தா உ.வே.சா., மகாகவி பாரதி, வ.உ.சி., போன்ற எண்ணற்ற பெரியோர்களின் தாயகமான தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் புதுப்பிப்போம்.
#கோயம்புத்தூர்_புத்தகத்_திருவிழா_2025
$$$