-பத்மன்
சென்னையில் 15.06.2025இல் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமத்தில்’, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பிலான கவியரங்கில் எழுத்தாளர் திரு. பத்மன் பாடிய கவிதை…

.
நெஞ்சில் உரத்துடனே
நேர்மைத் திறத்துடனே
வஞ்சனை வென்றாரடி – கிளியே
வாழ்த்துவோம் வீரரையே!
எல்லை கடந்துமிக
பொல்லா வினைபுரிந்த
புல்லரைக் கொன்றாரடி – கிளியே
புத்தியைப்பு கட்டினரே!
நெற்றிக் குறியழித்துக்
கொட்டிச் சிரித்தபகை
வற்றவே செய்தாரடி – கிளியே
வாகைதனை சூடினரே!
துள்ளிப் பறந்தபடை
துல்லி யதாக்குதலில்
எள்ளியோர் வீழ்ந்தாரடி – கிளியே
ஏற்றம்நம் நாட்டினுக்கே!
அள்ளிப் பகைவிடுத்த
அத்தி ரமத்தனையும்
அற்பமாய் செய்தாரடி – கிளியே
பஸ்மம்போல் ஆக்கினரே!
அஞ்சி எதிரிவந்து
கெஞ்சி அடிபணிய
விஞ்சியே நின்றாரடி – கிளியே
விண்ணவரும் வாழ்த்திடவே!
தேச நலத்துக்கே
தேக சுகத்தைவிட்டு
தெய்வமாய் நின்றாரடி – கிளியே
தெண்டனிட்டுப் போற்றுவமே!
$$$