முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 2

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

மக்கள் தங்களை பற்றி நினைக்க தொடங்கி விட்டனர்!

-‘காலச்சக்கரம்’ நரசிம்மா

பல வருடங்களுக்கு பிறகு , வியாபாரத்தனம் இல்லாத , ஒரு உண்மையான பக்தி ததும்பும் வேள்வியை கண்டு பரவசம் அடைந்துள்ளனர், தமிழ் மக்கள் .

மதுரையம்பதியில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டின் நோக்கம் என்ன என்பது . தெரியாது . ஆனால் மக்கள் கட்சியை பற்றியோ , அதன் நோக்கத்தை பற்றியோ கவலை கொள்ளவில்லை .

தங்கள் அடையாளத்தை காட்டவேண்டிய நேரம் இது எனபதை புரிந்து கொண்டு , முன் வந்துள்ளனர் . . அவ்வளவே !

உண்மையில் ,.நீறு பூத்த இருந்த நெருப்பாக இருந்த பக்தி உணர்வை , இந்த மாநாடு கொழுந்து விட்டு எரிய செய்துவிட்டது .

பக்தி என்பது அணையா அக்னி . மக்கள் அவ்வப்போது அனலோம்பி விட்டு , பிறகு உமியால் அக்னியை மூடி விடுவார்கள் . அதனால் அக்னி அணைந்து விட்டது என்றோ , மக்களை தங்கள் கலாச்சார கோட்பாடுகளை விட்டொழித்து விட்டார்கள் என்றோ முடிவு கட்டி விட கூடாது . மனதில் அந்த பக்தி காலாக்கினியாக எரிந்து கொண்டுதான் இருக்கும் .

தங்கள் தெய்வங்களை அவர்கள் மறந்து விட்டார்கள் என்று உடனே எண்ணி, அவரகளது நம்பிக்கைகளை நையாண்டி செய்ய கூடாது . ஒரு பொழுதும் , மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் .

மக்கள் இதுகாறும் திராவிட கொள்கைகளை, அதன் சித்தாந்தத்தை என்றும் ஏற்றதில்லை . அண்ணாவின் எளிமை , கருணாநிதியின் தமிழ் அறிவு , எம்ஜிஆரின் மனிதநேயம், ஜெயலலிதாவின் துணிவு என்று தனிநபர்களால் ஈர்க்கப்பட்டு , தான் திராவிட கட்சிகளை தூக்கி பிடித்தார்கள் .

அதை அறிந்துதான் , எம்ஜிஆர் தனது கடவுள் மறுப்பு கொள்கையை வடிகட்டி , கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார் .

தனது இறை உணர்வை பகீரங்கமாக வெளிப்படுத்தினார் ஜெயலலிதா .

சுதந்திரம் பெற்று தந்த கட்சி என்பதால்தான் , காங்கிரஸ் கட்சியை தமிழ் மக்கள் மதித்தார்கள் . அதன்பின் , காங்கிரஸ் அரிசி பஞ்சத்தை சரியாக கையாளவில்லை என்கிற கோபத்தில் , திராவிட கட்சியின் பக்கம் சரிந்தார்கள் . அப்போதும் கூட , திராவிட கட்சிகளுக்காக வாக்களிக்கவில்லை .

.அண்ணா , கருணாநிதி , எம்ஜிஆர் ஜெயலலிதா என்று திரைப்படத்துறையை சேர்ந்த சில தனிநபர் மீதுள்ள ஈர்ப்பை கொண்டுதான் மக்கள் தேர்தல் முடிவுகளை நிர்ணயித்தார்கள் . தற்போது திராவிடத்தில் அப்படிப்பட்ட ஜாம்பவான்கள் இல்லை .

மக்களுக்கு போதையூட்டும் பொழுதுபோக்கு சாதனமான திரைப்படத்துறையும் , தனக்கு தானே சூனியத்தை வைத்து கொண்டு விட்டது .

சினிமா , கிரிக்கெட் , அரசியல் , எல்லாவற்றையும் கடந்து , தங்களது அடையாளத்திற்கே ஆபத்து நேரிட போகிறது என்றால், தங்களது அடையாளத்தையே தாங்கள் இழக்க போகிறோம் என்றால் , மக்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு , தங்கள் அடையாளத்தை மட்டும் பிடித்து கொள்ளத்தான் பார்ப்பார்கள் . அதுதான் மதுரையில் நடந்திருக்கிறது .

ஒரு அரசன் என்பவன் அனைவருக்கும் பொதுவானவன் . எப்போது அவன் அரியணை ஏறிவிட்டானோ , அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவன் . அதை மறந்ததால்தான் , பிற்கால சோழர்கள் அழிந்தார்கள் .

ஆனால் எப்போது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளை மட்டும் .நையாண்டி செய்து , மற்றொரு நம்பிக்கையை போற்றி புகழ்கிறானோ , அவனை அனைவருக்கும் மன்னனாக கருத இயலாது . அப்படி செய்பவன் ராஜ நீதியை தவறுகிறான் என்று பொருள் .

சிறு வயதில் குருகுலம் கல்வி என்று கொண்டு வந்ததே , அரசன் பிள்ளை என்றாலும் , சாதாரண மாணாக்கர்களோடு பழகி , தனது பட்டாடோபத்தை , அரண்மனை போகங்களை மறந்து , கட்டாந்தரையில் படுத்து. , கல்வி, நீதி ,மற்றும் தர்மத்தை , கற்க வேண்டும் என்பதற்காகத்தான் . அப்படி கற்றால்தான் இளவரசர்களுக்கு மக்களின் துன்பங்கள் புரியும் , என்றுதான் குருகுல கல்வியை ஏற்படுத்தினார்கள் .

ஆனால் சிறு வயதில் இருந்தே ஸ்டாலின் , உதயநிதி , ஏன் இன்பநிதி கூட , உல்லாசங்கள் , கொண்டாட்டங்களில் காட்டும் ஆர்வத்தை கல்வி கற்பதிலோ , உலக அனுபவங்களை பெறுவதிலோ காட்டவில்லை .

நாட்டை ஆள வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதிலேயே இருந்தால் , தத்துவம், விஞ்ஞான சட்ட நூல்களை படித்து சிந்தையை சமன் செய்து கொள்ள வேண்டும் . பொருளாதார மேதைகளின் நூல்களை படிக்க வேண்டும் .

ஒரு தலைவரின் வாரிசாக இருப்பதில் தவறில்லை . அனால் அதற்குரிய தன்மைகளை வளர்த்து கொள்ள வேண்டும் . தந்தை ராஜ ராஜ சோழனை மிஞ்ச வேண்டும் ன்றுதான ராஜேந்திர சோழன் தன்னை வளர்த்து கொண்டான் . கங்கை கொண்ட சோழ புரத்தை அவன் கட்டியதே , தஞ்சை பெரிய கோவிலை காட்டிலும் , அது பெரிதாக .பேசப்பட வேண்டும் என்பதற்காகவே .

ஆனால் இப்போதுள்ள வாரிசுகள் கேளிக்கைகளில் தான் ஈடுபாடு காட்டுகிறார்கள் . பள்ளியை கட் செய்து விட்டு எம்ஜிஆர் சினிமா போனேன் . , டிபன் வாங்கி வா என்று சொன்ன அண்ணாவிடம் எட்டணா லவட்டினேன் , என்றெல்லாம் பெருமை பேசினார் நம் முதல்வர் .

இப்படிப்பட்ட சிந்தனைகள் சிறிய வயதில் இருந்தால் , பதவிக்கு வரும் காலத்தில் பொது நலனில் அக்கறை எப்படி தோன்றும் ?

தனிப்பெரும்பான்மை , மீடியாக்களின் ஆதரவு , வலுவான கட்சி ஆதரவு, சினிமா துறையினரின் ஆதரவு என்று , வலிமையான நிலையில் பதவி ஏற்ற ஸ்டாலின் எவ்வளவு திறம்பட ஆட்சி செய்திருக்கலாம் . ?

கல்வியாளர்களை சுற்றி வைத்து கொண்டு , அவர்.

மக்கள் பிரச்சனைகளை செவிமடுத்திருந்தால் , அடுத்த ஐந்து வருடங்களை பற்றி கவலை பட்டிருக்க வேண்டாம்.

அரசியல் என்பது சம்பாதிப்பதற்கு , சினிமா, கிரிக்கெட் என்று மற்ற துறைகளை தனது கட்டை விரலின் அடியில் வைப்பதற்கு என்று நினைக்கும் வரையில் , யாராலும் , நல்லாட்சியை தர இயலாது .

கொரோனா தொடங்கி பெரும் மாற்றங்கள் நிகழ தொடங்கி விட்டன . பாம்பு தனது சட்டையை உரிப்பது போல , பிரபஞ்சம் தனது சட்டையை உரித்து கொண்டு இருக்கிறது .

இன்னும் பழைய உளுத்து போன கொள்கைகளை பேசிக்கொண்டு , யாராலும் குப்பைகொட்ட முடியாது .

முன்பெல்லாம் , பராசக்தி , ரிட்சாகாரன் , ஆயிரத்தில் ஒருவன் , அடிமை பெண் , பாச மலர், படிக்காத மேதை, தில்லானா மோகனாம்பாள் என்று cult படங்கள் வந்து , மக்களை ஆட்கொண்டன .

மக்களுக்கு இன்று படம் பார்க்க பொறுமை இல்லை . OTT யில் வந்தபோது பார்த்து கொள்ளலாம் என்கிற நிலை .

கங்குவா , தக் லைப் , ரெட்ரோ, நேற்று வெளியான குபேரா வரையில் என்று வரிசையாக படங்கள் , தியேட்டர்களில்.வரவேற்பு கிடைக்காமல் சுருண்டு விட்டன . . அந்த படங்களில் ஒன்றுமில்லை என்பது வேறு விஷயம் . ஆனால் அதே சமயம் , மக்களுக்கு . சினிமாவின் மீதுள்ள ஈர்ப்பு குறைந்து வருவதைத்தான் இந்த படங்களின் தோல்வி காட்டுகிறது .

சினிமா துறையினர் மீது வெறித்தனமான ஈர்ப்பு இப்போது இல்லை . அப்படி இருந்தால் பயில்வான் ரங்கநாதன் வீடியோக்களை யாரும் பார்க்க மாட்டார்கள் .

கருணாநிதி, எம்ஜிஆர் ஜெயலலிதா வோடு ஜாம்பவான்களின் ஆளுமை . முடிவடைந்து விட்டது .

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அவர் ஜெயித்து கொடுத்து பெருமான்மையை வைத்து, எடப்பாடி ஆட்சிக்கு வந்தார் . கருணாநிதி மகன் என்கிற அனுதாபத்தால், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார் .

தற்போது இருவருக்குமே ஆளுமை இல்லைதான் .

2026 தேர்தலில் சினிமாவோ , திராவிட சித்தாந்தமோ, பாஜக வின் தேசிய கொள்கைகளோ, தனிநபர் ஆளுமையோ எதுவுமே மக்களை ஈர்க்கப்போவதில்லை.

காரணம்–

மக்கள் தங்களை பற்றி சிந்திக்க தொடங்கி விட்டார்கள் . தங்கள் நம்பிக்கைகளை பற்றி யோசிக்க தொடங்கி விட்டார்கள் . தங்கள் அடுத்த தலைமுறையை பற்றி கவலைப் பட தொடங்கிவிட்டார்கள் .

மக்கள் ஈரானில் அமெரிக்கா நடுநிசியில் .அரங்கேற்றிய Midnight Hammer பற்றி கருத்து கூறும் அளவிற்கு அறிவை வளர்த்து கொண்டு விட்டார்கள் .

இனியும் தனிப்பட்ட திறமைகளை காட்டியோ , சினிமாவை காட்டியோ மக்களை வசப்படுத்த முடியாது

எனவே மக்களின் எண்ணங்களுடன், நம்பிக்கைகளுடன் , அவர்களது வருங்காலத்துடன் விளையாடாமல் , சார்ந்தோர்கள் தங்கள் அரசியலை , திரைப்பட துறையை , ஊடக துறையை நடத்தி சென்றால் , அது அவர்களுக்கு நல்லது .

முதன்முறையாக மக்கள் தங்களை பற்றி நினைக்கத் தொடங்கி விட்டனர் என்பது திண்ணம் .

  • இது மூத்த பத்திரிகையாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் முகநூல் பதிவு….

$$$

One thought on “முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 2

Leave a comment