கோவை படைப்பாளர்கள் சங்கமம்: ஆல்பம்

-ஆசிரியர் குழு

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே ஆவணப் பதிவாக தொகுக்கப்பட்டுள்ளன...

திருவிளக்கேற்றுதல்

சுயமுன்னேற்றப் பேச்சாளர் பேரா. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், திருப்பூர் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளர் ஜெயந்திமாலா, திருப்பூர் விவேகானந்த சேவாலயத்தின் நிர்வாகி ஜோதிலட்சுமி, இ.பி.ஜி. ஃபவுண்டேஷன் நிர்வாகி பிந்து விஜயகுமார், பிரம்மரிஷி தியானபீடம் நிர்வாகி சுவாமி விஸ்வாமித்திரர், கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம், ஈரோடு- பாரதி இலக்கிய முற்றத்தின் தலைவர் கவிஞர் அரங்க சுப்பிரமணியம், திருப்பூர் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எக்ஸ்லான் கே.ராமசாமி, கோவை சேக்கிழார் நிலையம் பதிப்பகத்தின் பொறுப்பாளர் கே.சிவசுப்பிரமணியம், ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிர்வாகி ராமன்ஜி ஆகியோர் திருவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.


கலந்துரையாடல்

படைப்பாளர்கள் அறிமுகம், கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் இ.பாலகுருசாமி தலைமையில் நடைபெற்றது. கோவையின் முன்னணி தொழிலதிபரும் எழுத்தாளருமான இயகோகா சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பேரூர் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.


கவியரங்கம்

‘எல்லைச்சாமிகளுக்கு நன்றிப் படையல்’ என்ற தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியரும், கோவையின் இலக்கிய அடையாளமுமான கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா கவியரங்கத்திற்கு தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் முன்னிலை வகித்தார். உலக தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் புலவர் பூ.அ.இரவீந்திரன் நிகழ்வை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.


கருத்தரங்கம்

‘படைவீரர்களும் படைப்பாளர்களும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஓம்சக்தி மாத இதழின் முன்னாள் ஆசிரியரும் கோவையின் மூத்த எழுத்தாளருமான கவிஞர் பெ.சிதம்பரநாதன் தலைமை வகித்தார். புதுதில்லி- டாக்டர் சியாமபிரசாத முகர்ஜி ஆய்வு நிறுவனத்தின் அறங்காவலர்- செயலாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான பேரா. ப.கனகசபாபதி முன்னிலை வகித்தார். இளம் எழுத்தாளர் ராஜேஷ் கோவிந்தராஜுலு இந்நிகழ்வை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.


தீர்மானம் நிறைவேற்றம்

இறுதியாக, ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வுக்கு தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகியும் நல்லாசிரியருமான தெக்கலூர் க.பழனிசாமி தலைமை வகித்தார். தேசிய சிந்தனைப் பேரவையின் மாநில அமைப்பாளரும் திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளருமான சேக்கிழான் முன்னிலை வகித்தார். 


$$$

Leave a comment