பாரத ராணுவத்தின் மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினமாக, அதன் நெற்றியில் மற்றுமொரு வெற்றித் திலகமாக, மே 7 முதல் 10 வரை பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை அமைந்திருக்கிறது. மூன்று கட்டமாக நிகழ்த்தப்பட்ட இந்த பதிலடி நடவடிக்கை, ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் காஷ்மீரப் பிரிவினைவாதிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 இந்திய சகோதரர்களின் பலிதானத்திற்கான மிகச் சரியான சமர்ப்பணமாக அமைந்தது.