விழிப்புடன் இருப்போம்! தேசம் காப்போம்!

-ஆசிரியர் குழு

கடந்த ஏப். 22ஆம் தேதி, காஷ்மீரில் சுற்றுலா சென்ற ஹிந்துக்கள் 26 பேரை பாஹல்காமில் சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளின் செயல்களை நியாயப்படுத்தியும், சில தேச விரோதிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவோ, இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவோ, இந்திய அரசின் சட்டங்களை அவமதித்தோ, பாரதப் பிரதமர் மோடி மற்றும் அரசை இழிவுபடுத்தியோ, ஜாதி, மத மோதலைத் தூண்டும் விதமாகவோ, தேசவிரோத விடியோக்கள், பதிவுகள், புகைப்படங்கள், ஆடியோக்கள் போன்றவற்றை இணையத்தில் சமூக  ஊடகங்களான Youtube, Facebook, Whatsapp, Instagram, Twitter,… போன்றவற்றில் யாராவது பகிர்ந்திருப்பது தெரியவந்தால்…

உடனே தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA- NATIONAL INVESTIGATION AGENCY)  சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதுபோன்ற புகார்களை அளிக்க NIA இணையதளத்தில் ஏற்கனவே ஏற்பாடு உண்டு. நேரில் செல்லத் தேவையில்லை.

மேலும் நமது பகுதியில் மறைமுகமாகச் செயல்படும் நக்ஸல்கள், மாவோயிஸ்ட்கள், மத தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் பற்றியும் ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படுகிறது.

நாடு என்பது நாம் அனைவருமே தான். மத அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் போன்றோர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்யும் விஷமப் பிரசாரம் வென்றுவிட நாம் அனுமதிக்கக் கூடாது. தேசம் காப்பது விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும் கூட.

தொடர்புக்கு:

NIA- NATIONAL INVESTIGATION AGENCY
CHENNI OFFICE,
No. 10 Miller's Road,
Purasaiwakkam,
Chennai - 600010,
TamilNadu.

Whatsapp (only message): 94999 45100
Control Room: 044-26615100
FAX: 044-26453500
Email: info-che.nia@gov.in
Website: https://www.nia.gov.in/

$$$

Leave a comment