-பி.ஆர்.மகாதேவன்
கோயில்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். போலி திராவிட அறநிலையத் துறையின் அராஜகங்களை ஒருவர் கூடத் தட்டிக் கேட்க மாட்டாரென்றால் அந்தக் கூட்டம் சொரணையுள்ள உண்மையான பக்தர் கூட்டமே அல்ல. கசாப்புக் கடைக் கூண்டுகளில் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அது கோழிகளின் வெற்றி அல்ல.

மூன்றாவது மொழி கற்றுக் கொள்ளச் சொல்வதோ… தமிழகத்தினர் ஹிந்தியைத்தான் மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால் ஹிந்தியை எதிர்ப்பதோ அல்ல பிரச்னை.
புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாகவே எதிர்க்கிறார்கள். அது வேறு விஷயம். இப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் முழு நிதியை வாங்கிக் கொண்டுவிட்டு அந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு ஏமாற்றிவருகிறது. ‘திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் நிதி தரமாட்டோம்’ என்று சொன்னதை வைத்துக் கொண்டு ஹிந்தியைத் திணிக்கப் பார்ப்பதாக போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதற்கு பதில் சொல்பவர்களும், ஹிந்தி அல்லது மூன்றாவது மொழி தேவை என்று விளக்கம் சொல்லிவருகிறார்கள்.
ஆக, இப்போதும் எதிரி நாம் எதைப் பேச வேண்டும் என்று தீர்மானிக்கிறானோ அந்த வழியிலேயே செயல்பட்டு வருகிறோம்.
உண்மையில் இப்போதைய ஹிந்தித் திணிப்புக் கூச்சலுக்கு முக்கிய காரணம் வேறு. அது எப்போதுமே திசை திருப்பும் தந்திரத்தின் அங்கமாகவே பயன்படுத்தப்படும்.
இந்த முறை எப்போதும் இல்லாத வகையில் ஓர் அற்புதமான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2024க்கு முன் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் 400க்கு மேல் வென்றிருக்கும். 2026-இல் தாக்கல் செய்யப்பட்டால் தமிழகத்திலாவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் 2025-இல் தாக்கல் செய்யப்பட்டதால் பெரிய பிழை ஒன்றுமில்லை.
தமிழக பாஜக பட்ஜெட் விளக்கக்கூட்டங்கள் நடத்தி 2026 தேர்தல் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டது. ‘டேக் டைவர்ஷன்’ என்ற வகையில் ஹிந்தி திணிப்பை மீண்டும் கொண்டுவந்திருக்கிறார்கள்.
அதோடு கல்வி நிதியைத் தர மறுத்து தமிழர்களை வஞ்சிக்கிறார்கள் என்று பட்ஜெட் சார்ந்த நல்லெண்ணம் தமிழர் மத்தியில் வந்துவிடாமல் தடுக்கவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக குறிபார்த்து அடித்திருக்கிறார்கள். தமது அரசியலுக்கு உணர்ச்சிபூர்வமான வரவேற்பு இருக்க வேண்டுமென்று, வழக்கம்போல ஹிந்தி திணிப்பு என்ற அஸ்திரத்தை எடுத்திருக்கிறார்கள்.
இதன் எதிர்வினையாக, நாங்கள் ஹிந்தியைத் திணிக்கவில்லை என்று பதில் சொல்கிறோம். அவன் வேறு விஷயத்துக்குப் போனதும் நாமும் வேறு விஷயத்துக்குப் போய்விடுகிறோம்.
ஹிந்தியைத் திணிக்கிறார்கள் என்று சொன்னால்தான் மக்களுக்கு மத்திய அரசின் மீதான விலகல் தொடர்ந்து நீடிக்கும் என்று திட்டமிட்டு அந்தக் குற்றச்சாட்டையே விடாமல் எதிரிகள் முன்வைத்துவருகிறார்கள். எனவே அதற்கு அத்தனை முறையும் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால், அதோடு நிறுத்தக் கூடாது. அதை அவர்கள் பேசும்போது மட்டுமே பேசிவிட்டு நிறுத்தக் கூடாது.
மூன்றாவது மொழி கற்றுத் தரும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை குறிப்பாக திமுகவினர் நடத்தும் பள்ளிகளை முற்றுகையிடுவோம் என்று போராடப் புறப்படுவதெல்லாம் என்னவகையான அரசியல் என்றே தெரியவில்லை (இது வெறும் வாதமாக வைக்கப்பட்டது என்றே நினைக்கிறேன்). டங்ஸ்டன் திட்டத்தை முடக்கிவிட்டு தமிழக பாஜகவின் வெற்றியாகக் கொண்டாடியதுபோன்ற பலவீனமான அரசியல் அது.
தமிழகத்தில் இருக்கும் அத்தனை அரசுப் பள்ளிக்கும் சென்று அந்த மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் உண்மை விஷயங்களை அரசுப் பள்ளியிலேயே கூட்டம் நடத்திப் புரியவைக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே அந்த உண்மைகளைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.
கல்வி, பொதுப்பட்டியலில் இருக்கிறதென்றால் மத்திய அரசுக்கு மாநிலத்தில் அதை விளக்கும் பொறுப்பும் அவசியமும் இருக்கத்தான் செய்கிறது.
தமிழகத்தில் மூன்றாம் மொழி எங்கெல்லாம் கற்றுத் தரப்படுகிறது; எளிய மக்கள் எப்படியெல்லாம் நல்ல வாய்ப்புகளை இழக்க நேர்கிறது. மூன்றாவது மொழி – ஹிந்தியைக் கற்றுத் தருவதை மட்டுமல்ல; அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்த்துவதையே தமிழக அரசு முடக்குகிறது.
பாண்டிச்சேரியில் கூட வெற்றிகரமாக நடக்கும் நவோதயா என்ற இலவச – உடனுறை கல்வி மையங்களை வரவிடாமல் தடுக்கிறது. அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவத்துக்கு சேர வழி செய்யும் நீட்டை மருத்துவக் கல்லூரி மாஃபியாவுடன் சேர்ந்துகொண்டு தடுக்கிறது.
தமிழகக் கல்வி பிற மாநிலங்களைவிட மேம்பட்ட நிலையில் இருப்பதற்கு அரசுப் பள்ளிகள் காரணமே இல்லை. முழுக்கவும் தனியார் கல்வி மையங்களின் வெற்றி அது. திராவிட அரசுகள் அதிலும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளின் பொறுப்பில் இருக்கும் அரசுப் பள்ளிகள் மிக மிக மோசமான நிலையில் இருக்கின்றன. கல்விக்குத் தரும் நிதியில் 70 %க்கு மேல் தொழிற்சங்க ஆசிரியர்களின் பாக்கெட்டுக்குப் போகிறது. எந்தத் துறையிலும் இப்படி பணம் வீணாகவே கூடாது.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 90 % பேர் அடிமட்ட வேலைக்கு மட்டுமே போக முடிகிறது. பிராமணர்கள் யாரும் அரசுப் பள்ளிகளில் படிப்பதில்லை என்பதால் திராவிட அரசு பிராமணரல்லாதாரின் கல்வியையும் வாழ்க்கையையும் மிக மிக மோசமாக அழிக்கிறது.
திராவிட அரசின் அலட்சியம், செய் நேர்த்தியின்மை, ஊழல், அராஜகம் அனைத்தின் மொத்த உருவமாக தமிழக அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. இதை மாற்றியமைக்கத்தான் மத்திய அரசு முயற்சி செய்கிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் இருக்கும் தனியார் பள்ளிகள் அளவுக்கு தமிழக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தத்தான் முயற்சி செய்கிறது.
பிரச்னை ஹிந்தி திணிப்பு அல்ல; அரசுப் பள்ளிகளின் தர மேம்பாடு. அதைத் தடுக்கும் திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும் என்று அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.
மாநில சுயாட்சி என்பது மாநிலத்தின் எளிய மக்களை ஒடுக்குவதற்கான உரிமை அல்ல. ஒருவருடைய குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்பது உண்மையே. ஆனால் குடும்ப வன்முறையைத் தட்டிக் கேட்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.
தமிழக அரசுப் பள்ளிகளின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது; மீட்டெடுங்கள் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் மீது அக்கறையுடன் ஒரே ஒரு கடிதம் எழுதும் ஒற்றைப் பெற்றோரோ ஒற்றை ஆசிரியரோ இல்லாமலா போய்விட்டார்கள்?
தனியார் பள்ளியில் படிக்கும் பணக்காரர்கள், பிரபலங்களின் குழந்தைகள், அரசியல்வாதிகளின் குழந்தைகள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் நல்ல வேலை கிடைத்து வெளிநாடுகளுக்கு சென்று வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மற்றும் இடை கடைநிலை ஜாதிக் குழந்தைகள் குழந்தைகள் எல்லாம் கடைநிலைப் பணிகளில் காலம்பூராவும் கஷ்டப்படுகிறார்கள்.
திராவிடமாடல் அரசு பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்கிறது. ஆனால், அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை மற்ற குழந்தைகளுக்கு சமமாக நடத்துவதில்லை. கல்வி என்ற அடிப்படையிலேயே சமத்துவம் இல்லையென்றால் வாழ்வின் பிற அம்சங்களில் அது எப்படி இருக்க முடியும்?
மத்திய அரசு கொடுக்கும் நிதிகள், நலத்திட்டங்கள், பட்ஜெட்டில் இருக்கும் நன்மைகள் என அனைத்தையும் பேசியாக வேண்டும். மாநில உரிமை, மொழிப்பற்று என்ற பெயரில் செய்யும் மலின அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்.
இதையெல்லாம் அரசுப் பள்ளிகளில் சென்று பேசிப் புரியவைக்க வேண்டும். கல்விக்காகக் குரல் கொடுக்கும் சூர்யா, சமுத்திரக் கனி, மாதவன் போன்ற திரையுலகப் பிரபலங்களைக் கொண்டு திரைப்படங்கள் தயாரித்து உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரே ஒரு திரைப்படம் ஆயிரம் மாநாடுகள் செய்யும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும்.
திரைப்படம் கூடத் தேவையில்லை. தொலைகாட்சி தொடர் கூட எடுக்கலாம். தெருவெங்கும் ஸ்க்ரீன் கட்டி அதை காட்சிப்படுத்தலாம். ஒவ்வொரு துறையிலும் திராவிடக் கட்சிகள் செய்த துரோகங்கள், ஊழல்களை பத்து நிமிடக் குறும்படமாக தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு தயாரித்து வெளியிடலாம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் கட்சியினரைத் தாண்டி பொது மக்களிடம் அதைக் கொண்டுசேர்க்க வேண்டும்.
திரையரங்குகளில் தேசிய கீதம் பாடச் சொன்னதுபோல, மத்திய அரசின் கொள்கைகளை, திராவிட அரசின் அராஜகங்களை தமிழக திரையரங்குகளில் இடைவிடாமல் ஒலிபரப்ப வேண்டும்.
க்ரிப்டோ மற்றும் திமுகவின் பிடியில் இருக்கும் தமிழக திரைப்படம், தொலைகாட்சி சேனல்களில் இது சாத்தியமில்லையென்றால் தெருவுக்குத் தெரு திரை கட்டி காட்சிப்படுத்தலாம். தமிழக திரையுலகத்தினர் யாரும் முன்வரமாட்டார்களென்றால் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி பிரபலங்களைக் கொண்டு சொல்லவைக்கலாம்.
“ஹிந்தி படிப்பதால் தமிழ் அழியாது; திமுகதான் அழியும்” என்று சல்மான் கானோ சுரேஷ் கோபியோ பிரபாஸோ சொல்ல மாட்டார்களா என்ன… கட்சி மீதான விமர்சனமாக வைக்க அவர்கள் தயங்கினால் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அரசுப் பள்ளிகள் இருக்கும் நிலையை உண்மைத் தரவுகளைக் கொண்டு ஆவணைப்படுத்தும் முயற்சியில் பங்குபெற மாட்டார்களா?
‘ஹிந்தி வேண்டாம் போடா’ என்று ஏதோ தமிழ் மீது பற்று இருப்பதுபோல நடிக்கிறார்கள். ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது காங்கிரஸும் திமுகவும் இலாகா பங்கீடு பற்றி பேரம் பேசிக் கொண்டிருந்தன என்ற உண்மையைச் சொல்ல கங்கணா ராவத், குஷ்பு போன்றோர் முன்வர மாட்டார்களா?
தமிழகம் காட்சி ஊடகப் பிரசாரத்துக்குப் பழகிய மாநிலம். தமிழக பிரபலங்கள் தமிழக அரசை எதிர்க்க மாட்டார்களென்றால் உண்மையைச் சொல்ல இந்திய பிரபலங்களைக் கொண்டுவந்தாக வேண்டும்.
அனைத்துத் துறை சார்ந்த அவலங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல அதாவது மக்கள் கேட்கும் வகையில் எடுத்துச் சொல்ல முயற்சி செய்ய வேண்டும்.
*
பிரச்னை கொள்கையில் இல்லை; வழிமுறையில் இருக்கிறது.
கடின உழைப்பு இருக்கிறது. ஸ்மார்ட் வொர்க் இல்லை.
பிராமண லாபியை ஒதுக்குவதில் தவறே இல்லை. ஆனால், அனைத்து ஜாதியினரையும் கொண்ட அறிவார்ந்த குழுவின் ஆலோசனைகளுக்கு இடம் இருந்தாக வேண்டும்.
இந்துத்துவர்களை ஒதுக்குவதில் தவறே இல்லை. ஆனால், சொரணையுடன் அரசியலை முன்னெடுத்தாக வேண்டும்.
சொரணை என்பதைக் கொஞ்சம் விளக்குகிறேன்.
சட்ட விரோதமாக அதிக நாட்கள் தங்கினார்கள் என்று சொல்லி, காலில் விலங்கு மாட்டியது அமெரிக்கா. போபாலில் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்ற ஆண்டர்சனை ராஜ மரியாதையுடன் வழி அனுப்பிவைத்தது காங்கிரஸ். லாவண்யா மரண வழக்கில் சிக்கிய கிறிஸ்தவ வார்டனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றான் திமுக கிறிஸ்தவன். ராஜீவுடன் அப்பாவிகள் பலரையும் சேர்த்துக் கொன்றவனுக்கு பொன்னாடை போர்த்தினான் இன்னொரு க்ரிப்டோ.
ஜெயலலிதாவை, சசிகலாவை சிறையில் தள்ளினார்கள். கருணாநிதியை நடுத்தெருவில் உட்கார வைத்தார்கள். ஆனால், ஒரே ஒரு பாதிரியை அவன் செய்த மதமாற்ற அல்லது வேறொரு குற்றத்துக்குக் கைது செய்து பார்த்திருக்கிறீர்களா?
யோகி செய்யும் அதிரடி அரசியலில் ஒரே ஒரு பாதிரியாவது அல்லது அத்து மீறிக் கட்டப்பட்ட ஒரே ஒரு சர்ச்சாவது இடிக்கப்பட்டிருக்கிறதா?
எதிரி சொரணையுடன் அரசியல் செய்கிறான். நாம் செய்யும் அரசியல் கண்ணியமான அரசியலாக மட்டுமே இருக்கிறது.
ஒன்று நாம் கண்ணியத்தைக் குறைத்துக் கொண்டாக வேண்டும். அல்லது எதிரியை கண்ணிய அரசியலுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.
திசை திருப்பும் அரசியலில் எதிரி தொடர் வெற்றி பெற்றுவருவதற்குக் காரணம் நாம் எதிரியின் இசைக்கு ஏற்ப ஆடுபவர்களாக மட்டுமே இருக்கிறோம்.
இப்போதைய ஹிந்தி திணிப்புக் குரல் கூட பட்ஜெட் விளக்கக் கூட்டங்களை ஓரங்கட்டுவதற்கான முயற்சியே. நாமும் இதோடு இந்த விஷயங்களைப் பேசுவதை நிறுத்தினால் நம் எதிர்பார்ப்பும் அது மட்டுமே என்று ஆகிவிடும்.
அரசுப் பள்ளிகளை அழிக்கும் திராவிட மாடலை அகற்றுவோம் என்று ஒவ்வொரு அரசுப் பள்ளி முன்னாலும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
துண்டுப் பிரசுரம் கொடுத்தால் கைது செய்வார்கள். கூட்டங்கள் நடத்த அனுமதி கிடைக்காது. தொலைகாட்சி, திரைப்படங்கள், அச்சு ஊடகங்கள் நம் கையில் இல்லை.
ஒவ்வொரு அங்குலமாக முன்னேறும் நம் வெற்றிப் பயணம் போற்றுதலுக்குரியதுதான். ஆனால், இரும்பு குண்டைக் காலில் கட்டிக் கொண்டுதான் அதைச் செய்வோம் என்பதை நிச்சயம் பாராட்ட முடியாது.
பிற மாநிலங்களில் எல்லாம் வெற்றி பெறவில்லையா என்ற கேள்வி எழும்.
எப்போதும் சொல்வதுதான்: நம் வெற்றிகள் புதை மணலில் கட்டப்பட்ட மாளிகைகள். நம் தோல்விகளோ கண் முன் இடிக்கப்படும் கோயில்கள் போன்று அபாயகரமானவை. அதி நிஜமானவை.
கோயில்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். போலி திராவிட அறநிலையத் துறையின் அராஜகங்களை ஒருவர் கூடத் தட்டிக் கேட்க மாட்டாரென்றால் அந்தக் கூட்டம் சொரணையுள்ள உண்மையான பக்தர் கூட்டமே அல்ல. கசாப்புக் கடைக் கூண்டுகளில் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அது கோழிகளின் வெற்றி அல்ல.
ஹிந்துக்கள் ஜெயிக்கும் இடங்களில் எப்போது வேண்டுமானாலும் தோற்கடிக்கப்படுவோம். ஹிந்துக்கள் தோற்கும் இடங்களில் ஒருபோதும் வெல்லப் போவதில்லை.
இந்த நிலை மாறியாக வேண்டும்.
நாம் குரங்காக இருந்து ஆடக் கூடாது. குரங்காட்டியாக இருந்து ஆட்டுவிக்க வேண்டும்.
$$$