மகாத்மா காந்தியடிகள் இந்த மண்ணின் சுதந்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் தந்தாரோ அதனினும் அதிகமாக சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். தனது ஆசிரமத்தில் அதனை செயல்படுத்தியும் காட்டினார். அவரைப் பின்பற்றியவா்கள் ஜாதி மதப் பாகுபாடுகள் பார்க்காமல் சமத்துவத்தைக் கடைப்பிடித்தனா்.