-காலச்சக்கரம் நரசிம்மா
தீபாவளி நன்னாளை ஒட்டி, மூத்த பத்திரிகையாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா வெளியிட்டிருந்த வாழ்த்து, இங்கே நன்றியுடன் மீள்பதிவாகிறது....

சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறான் அப்போதுதான் நாம் வருடப் பிறப்பை கொண்டாடுகிறாம். பன்னிரண்டு ராசிகளையும் சூரியன் சுற்றி வருகையில் துலா மாசம் என்கிற ஐப்பசியில் நீச்சம் அடைகிறான்.
ஓயாமல் உழைக்கும் நாமே De-hydration வந்தால், ட்ரிப்ஸ் ஏற்றி கொள்வது போல், துலா மாசத்தில் நீச்சம் அடையும் சூரியனின் குறைபாடுகள் நீங்கவே, நாம் தீபங்களை ஏற்றி, அவனது ஆகர்ஷணத்துக்கு , வீரியத்துக்கு, வலு சேர்க்கிறோம். தீப வரிசைகள், அவனது ஆற்றலை அதிகரிக்கும் .
தீப ஒளி ஏற்றுவதே , ஞானத்திற்குத் தான்!
Enlightment is the bottom line message of Deepawali!
இன்றைய நமது வாழ்வின் அவலங்களுக்கு, standard explanation என்ன?
The madness of today’s generation is ignorance: a mediocore education system has left our populace scientifically illiterate.
We are at the mercy of cognitive biases and thus defenceless against strong-headed celebrities,, sensationalising media channels and other form of curruption.
நம்மை நாமே அறியாதபடிக்கு , வசியம் செய்யப்பட்டு இருக்கிறோம். நாமே ஒரு முதல்வராக வேண்டும் என்கிற உத்வேகம் இல்லாமல், பிறருக்கு பல்லாக்கு தூக்கிக் கொண்டு இருக்கிறோம்.
Knowledge is better than ignorance.
Intellignece is better than dull-wittedness.
Happiness is better than misery.
Enjoying with family, friends and culture is better than drudgery and montomy.
இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள ஞானம் வேண்டும்.
தீபாவளியின் பொருளே அதுதான் . சிந்தையில் இருக்கும் காரிருளை போக்க, வீட்டில் ஞான விளக்குகளை ஏற்றுகிறோம் .
பூஜை அறையில் ஏற்றும் தீப விளக்கு போல, உங்கள் வாரிசுகளின் சிந்தையில் ஞான விளக்கை ஏற்றுங்கள்.
டாஸ்மாக், நடிகை நடிகையரின் வசியம், கிரிக்கெட், செல்போன் இதையெல்லாம் கடந்து வாழ்க்கை உள்ளது என்பதை புரிய வைக்க வேண்டும்.
நாட்டின் உண்மையான வரலாறு, தேசப்பற்று, திருமண முறை , கோட்பாடுகள், தமிழறிவு, இயற்கை பேணுதல் போன்றவை நம் வாழ்வுக்கு மிகவும் அவசியம் என்பதை புரிய வையுங்கள்.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் இறை பக்தி செலுத்தியது பெரிய விஷயம் அல்ல.
நம் முன்னோர்கள் காலத்திலும் , கோட்பாடுகளை பேணுவதில் எவ்வித சிரமங்களும் இல்லை .
ஆனால் அரசியல், சினிமா, மீடியாக்கள் என்று எல்லாம் கூட்டணி சேர்ந்து நம் வாழ்க்கை முறையை, குடும்ப தத்துவத்தை குலைத்து நாசம் செய்ய எண்ணி, விஷங்களைக் கக்கி வரும் வேளையில், நமது கோட்பாடுகளைப் பேணுவது சிரமமாக இருக்கிறது .
நமது கலாச்சாரம் ஐந்தாயிரம் வருடங்களை கடந்தது. நமது கலாச்சாரக் கொண்டாட்டங்களுக்கு, நூறு வருடம் கூட வாழாதவர்கள் வாழ்த்து தெரிவிக்க வில்லையே என்று முகநூலில் புலம்பாதீர்கள். அவதார புருஷர்களுக்கும், உன்னத நாட்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கவும், சில தகுதிகள் வேண்டும்.
நுகர்ச்சி இருப்பவர்களுக்குத்தான் இந்த அருமைகள் தெரியும். அந்த நுகர்ச்சியை உங்கள் வாரிசுகளிடம் ஏற்படுத்துங்கள். உங்கள் வாரிசுகளின் சிந்தையில் ஞான விளக்கை ஏற்றுங்கள்.
அஸதோமாம் சத் கமய/ தமஸோமாம் ஜ்யோதிர் கமய/ ம்ருத்யோமாம் அம்ருதம் கமய/
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்து தீபாவளி கொண்டாடுபவருக்கு சிறப்பு தீபாவளி வாழ்த்துகள்.
தீபாவளி கொண்டாடும் சூழ்நிலை இல்லாதவர்களுக்கு, இறைவன் அருளால் அடுத்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சிகளை வாரி வழங்கப்படும்…
A Very Happy Deepawali to you All.
Let the Festival of Lights vivify the learning of your children and your mind too.
$$$