ஈஷா தாக்கப்படுவது ஏன்?

-ராஜசங்கர் விஸ்வநாதன்

கோவை, சிறுவாணி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோகமையம் தமிழகத்தில் சிலரால் தொடர்ந்து தாக்கப்படுச்வது ஏன் என்று விளக்குகிறார், முகநூல் எழுத்தாளர் திரு. ராஜசங்கர் விஸ்வநாதன்….

தமிழகத்திலே பல வழிபாட்டு மையங்களும் குருபீடங்களும் இருக்கின்றன. 

பாரம்பரியமான குருபீடங்களும் பாரம்பரியத்தை புதிதாக உருவாக்கிய பீடங்களும் இருக்கின்றன. அவை பலவும் மதமாற்றத்தைத் தடுத்துத் தான் இருக்கின்றன. அவற்றிற்கு திராவிட அரசியல்வாதிகளும் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். 

மேல்மருவத்தூரிலே ஆதிபராசக்தி பீடத்திலே ஆரம்பித்து வேலூர் தங்கக் கோவில் வரை, என பத்துக்கு மேற்பட்ட, புதிய பாரம்பரியத்தை உருவாக்கிய பீடங்களும் உண்டு. 

ஆனால் அவர்கள் மீதான தாக்குதல் அரசியல் களத்தில் இல்லை; அல்லது இருந்தாலும் பெரிதாக இல்லை. 

அதை ஒப்பிடும்போது , சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மட்டும் ஏன் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது? 

இதிலே மதமாற்றம், சத்குருவின் பிரபலம் என்றெல்லாம் தாண்டி, வேறொரு காரணம் உண்டு. 

அது பண்பாடு, இசை, பாடல், கொண்டாட்டம் என்ற இடத்திலே ஈஷா இயங்குவது தான். 

தேவாரப் பாடல்களுக்கு இசையமைத்து வெளியிடுவதும் , சிவராத்திரியை விமரிசியையாகக் கொண்டாடுவதும்  எந்த விதமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது? 

சிவராத்திரி என்றால் சென்னையிலே சின்ன திரை அரங்குகளிலே ஒரே இரவிலே மூன்று சினிமா படம் போடுகிறோம் என விளம்பரம் கொடுத்ததிலே இருந்து மாறுபட்டு, 

சிவராத்திரி என்றால் கோயில்களிலே கொண்டாட்டம் என கொண்டு வருவதற்கே, ஈஷாவிலே வருடா வருடம் கொண்டாடப்படும் சிவராத்திரி தானே காரணம்? 

சென்னைக்கு வந்த புதிதிலே சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என்றால் இரவு முழுக்க மூன்று படங்கள் என தியேட்டரிலே போடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.  ‘கண் முழிக்கணும், அவ்வளவு தானே, சினிமா பாருங்கள்’ என மாற்றி வைத்திருந்தார்கள். 

ஆனால் இன்றைக்கு…?

ஈஷாவுக்குப் போக வேண்டாம் இங்கே சிவன் கோயிலுக்கு வாருங்கள் என இந்து அறநிலையத் துறையே சிவராத்திரி கொண்டாட வேண்டிய அவசியம் எப்படி வந்தது?

இந்த இடத்திலே இசைஞானி இளையராஜா மீதான தாக்குதலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 

மற்ற இசை அமைப்பாளர்கள், இயக்குநர்கள் பேசாத திமிரையா இளையாராஜா பேசுகிறார்? இல்லையே? 

இளையராஜா திருவாசகத்துக்கு இசை அமைத்து தனியாக வெளியிட்டார்.

தேவாரப் பாடல்களுக்கு இசை அமைத்துத் தந்தார். 

ஆன்மிகப் பாடல்களூக்கு அருமையாக இசை அமைத்துத் தந்தார். 

தனது கடவுள் பக்தியை வெளிப்படையாக அறிவிக்கிறார்…

இவற்றை எப்படி ஏற்பது என்பது தானே பிரச்சினை? 

மற்றைய குருபீடங்கள் எல்லாம் சிறிய அளவிலே செய்து கொள்கிறார்கள். அல்லது உள்ளூர் அளவிலே கொண்டாட்டம் என நின்றுவிடுகிறது. 

ஆனால் ஈஷாவின் சிவராத்திரி கொண்டாட்டம் இந்திய அளவிலே உலக அளவிலே பிரபலம் எனும்போது,  அதை எப்படி ஏற்பது என்பது தானே பிரச்சினை? 

சத்குரு ஜக்கி வாசுதேவ், எல்லா கட்சி அரசியல்வாதிகளையும் தான் ஈஷாவுக்கு அழைக்கிறார். இப்போது மட்டுமல்ல, ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். 

இது தான் தன்பது அரசியல் நிலை என எடுத்தவர் அல்ல. இந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்றும் அவர் இதுவரை சொல்லியதில்லை.

ஏன் தன்னுடைய மார்க்கம்,  ஹிந்து மதமே அல்ல எனவும் தான் சொல்கிறார். இருந்தாலும் ஏன் இவ்வளவு பிரச்சினை? 

அவ்சர் மத மாற்றத்தைத் தடுக்கிறார், உள்ளூர் மக்களுக்கு உதவுகிறார் என மட்டும் மேலோட்டாமாக நாம் பார்க்கிறோம். 

ஆனால் ஈஷா யோகா மையத்திலே சிவராத்திரி கொண்டாட்டப்பட்டதிலே இருந்து பொதுப்புத்தியிலே அதை கிண்டலடிப்பது என்பது நின்றுவிட்டது. 

கவனியுங்கள்… ஈஷா யோகா மையத்திலே சிவராத்திரி கொண்டாடப்பட்டதிலே இருந்து தான் எல்லோருக்கும் சிவராத்திரி என்றால் என்ன என தெரிகிறது என சொல்ல வரவில்லை. 

அதற்கு முன்னரும் சிவன் கோயில்களிலே கொண்டாடப்பட்டு தான் வந்தது. 

ஆனால் அதை இந்த திராவிட திருட்டுக் கும்பல் ஆட்கள் கிண்டலடித்துக் கொண்டிருந்ததுகள். 

எப்படி தீபாவளியை சமணப் பண்டிகை என சொல்லிக் கொண்டிருந்ததுகளோ அதே போல சிவரார்த்திரியையும் சமண பண்டிகை என எழுதிக் கொண்டிருந்தார்கள். 

இப்படி சொன்ன பலரிடம் கேட்டிருக்கிறேன்- எங்களிடம் மாத சிவராத்திரி என ஒன்று உண்டு; அதனால் வருடத்திலே ஒரு முறை வரும் சிவராத்திரியை மகாசிவராத்திரி என தனியே சொல்கிறோம். சமணத்திலே மாத சிவராத்திரி உண்டா? என.

பதில் சொல்லாமல் அடுத்த வருடமும் ஆரம்பிப்பார்கள் என்பது வேறு விஷயம். 

பதில் சொல்லி மாளாது. 

ஆனால் இது கொஞ்சம் கொஞ்சமாக மாறியது தானே இங்கே பிரச்சினையாகி இருக்கிறது. 

அதுமட்டுமல்லாது, ஈஷா தனியாக இசைப்பயிற்சி மையம் என ஆரம்பித்து தனியே பாடல்களைப் பாடி வெளியிடுகிறார்கள். 

கலை, பண்பாட்டை மீட்டெடுப்பதிலே உதவுகிறார்கள். 

இது நீண்டகாலத்திலே மிகவும் பலன் அளிக்கும் என்பது நம்மை விட அந்த ஆட்களுக்கு தெரியும். அதனாலே தானே எதிர்ப்பு. 

இதை தான் நாம் பார்க்க வேண்டும். 

இதே தான் சினிமாவிலேயும். 

சினிமாவிலே ஹிந்து மதத்தைப் பாராட்டியோ அல்லது சமுதாயத்தில் உண்மையாக உள்ள பிரச்சினைகளையோ சொன்னால் அந்தப் படங்களுக்கு தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு வருகிறது? 

ஏனென்றால் சினிமா எனும் ஊடகம் வெகுவாக மக்களைச் சென்று சேரும்; கலையின் மூலமாக கருத்தை சொன்னால் மக்களிடையே ஏற்புடையதாக இருக்கும். அதைச் செய்வபவர்களை அந்த ஆட்கள் எதிர்க்கிறார்கள்… அவ்வளவு தான் விஷயம்.

இந்த இடத்திலே ஈஷா செய்வது எல்லாம் ஏற்புடையதா, தாங்கள் ஹிந்து இல்லை என சொல்லிக்கொள்கிறாரே என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம். 

அந்த விஷயங்கள் இப்போது தேவையில்லாதது. 

அதிலும் ஈஷா போன்ற இடங்கள் என்றால் ஆகமம், சாஸ்திரம், வழிபாடு என பொங்கி நுரைத்து எழும் ஆட்கள் பாரம்பரியம் மிக்க கோயில்களிலே ஆகமம் எல்லாம் தூக்கி எறியப்படுவதை பார்த்துக்கொண்டு கையது கொண்டு மெய்யது பொத்தி இருப்பார்கள். 

ஏன்னா ஈஷாவை கேள்வி கேட்டால் புரட்சியாளர். 

மற்ற இடங்களிலே சும்மா முனகினாலே கும்மாங்குத்து விழும்….

அவ்வளவு தான் விஷயம்…

$$$

Leave a comment