மகாகவி பாரதியின் வாழ்வில்…

-சேக்கிழான்

மகாகவி பாரதியின் நினைவுதினத்தை ஒட்டி, அவரது வாழ்க்கைச் சுருக்கம் காலவரிசையில் இங்கே சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது...
மகாகவி பாரதி ஓவியம் உதவி, நன்றி: ஓவியர் ஜீவா

1882  டிச. 11: பிறப்பு (எட்டையபுரம்)

1887: தாயார் லட்சுமி அம்மாள் மறைவு

1893: 11 வயதில் ‘பாரதி’ பட்டம்

1897 ஜூன்: செல்லம்மாளுடன் திருமணம்.

1898: தந்தையார் சின்னசாமி ஐயர் மறைவு

1898-1902: காசியில் ஹிந்து கலாசாலையில் படிப்பு

1902- 1904: எட்டையபுரம் அரண்மனையில் பணி

1904 ஆக. 1: மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியர்

1904 நவ.: சென்னையில் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் பணி

1905 ஆக.: சக்கரவர்த்தினி ஆசிரியர் (1906 ஆக. வரை)

1905: வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு

1905 டிச. : காசி காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்பு

1906 ஆக.: சுதேசமித்திரன், சக்கரவர்த்தினியில் இருந்து விலகல்

1906 செப்.: சென்னையில் இந்தியா பத்திரிகை ஆசிரியர்

                     (1908 செப். 5 வரை வெளிவந்தது).

1906 நவ.: தி பாலபாரத் – வார இதழ் ஆசிரியர்

                   பால பாரதா (யங் இந்தியா) மாத இதழ் ஆசிரியர்

1904, நவ. 10: முதல் மகள் தங்கம்மாள் பிறப்பு

1906 டிச.: கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்பு

                    சகோதரி நிவேதிதையுடன் சந்திப்பு

1907 ஏப்.- மே: பிபின் சந்திரபால் சென்னை வருகை.

1907 மே: லாலா லஜபதி ராய் பர்மாவுக்கு நாடு கடத்தல்

1907: பாரதியின் ‘தேசிய கீதங்கள்’ நூல் வெளியீடு (உதவி: நீதிபதி கிருஷ்ணசாமி ஐயர்)

1907 டிச.: சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்பு / தீவிரவாத கோஷ்டி.

வ.உ.சி., சர்க்கரை செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, நஞ்சுண்ட ராவ் ஆகியோரும் உடன் சென்றனர். திலகர், லஜபதிராய், கோகலே, அரவிந்தருடன் சந்திப்பு. காங்கிரஸ் உள்கட்சிக் கலவரம்.

1908: இரண்டாவது மகள் சகுந்தலா பிறப்பு

1908: ‘சுதேச கீதங்கள்’ நூல் வெளியீடு.

1908 மார்ச் 9 : பிபின் சந்திர பால் விடுதலை; சுயராஜ்ய தினமாக பாரதி அனுசரித்தார்.

1908 மார்ச் 12-: வ.உ.சி., சுப்பிரமணிய சிவா கைது; நெல்லையில் கலவரம்.

1908 செப். 5: இந்தியா பத்திரிகை ஆங்கிலேய அரசால் நிறுத்தம்.

                     ஆசிரியர் ஸ்ரீனிவாசன், ஜி.சுப்பிரமணிய ஐயர் கைது.

                     பாரதி புதுவைக்குத் தப்பினார்.

1908-1918: புதுவையில் பாரதி வாசம்

1908 அக். 10: புதுவையில் இருந்து இந்தியா பத்திரிகை வெளியானது.

                     1910 மார்ச் 12 வரை இது வெளிவந்தது.

1908: சூர்யோதயம் வார இதழ் தொடக்கம்

1908 செப். : திலகர் கைது; மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டார்.

                     அரவிந்தர், பிபின் சந்திர பாலும் கைது

1909: ‘ஜன்மபூமி’ நூல் வெளியீடு

1910 ஜன. : கர்மயோகி பத்திரிகை ஆசிரியர்.

1910 மார்ச்: பிரிட்டிஷ் இந்தியாவில் பாரதியின் பத்திரிகைகளுக்கு தடை.

விஜயா, இந்தியா பத்திரிகைகள் நிறுத்தம்.

1910 ஏப். 4: சதி வழக்கில் கைதாவதிலிருந்து தப்ப அரவிந்தர் புதுவை வருகை.

                     பாரதியுடன் நெருங்கிய தோழமை.

1910: ‘கனவு’ சுயசரிதை நூல் வெளியீடு.

1910 செப்.: வ.வே.சு. ஐயர் புதுவை வருகை.

1911: ‘கனவு’ நூலுக்கும் ‘ஆறில் ஒரு பங்கு’ கதைக்கும் ஆங்கிலேய அரசு தடை

1912: ‘பாஞ்சாலி சபதம்’ முதல் பாகம் – நூல் வெளியீடு.

1913: ஹரிஜன இளைஞர் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தார்.

1917: ‘கண்ணன் பாட்டு’ நூல் வெளியீடு (பரலி சு.நெல்லையப்பர்)

1918: ‘நாட்டுப்பாட்டு’ நூல் வெளியீடு (பரலி சு.நெல்லையப்பர்)

1918 நவ. : தமிழகத்திற்கு திரும்புதல்; கடலூரில் பாரதி கைது.

1918 டிச.: சிறையிலிருந்து விடுதலை.

1919: ‘கண்ணன் பாட்டு’  இரண்டாம் பதிப்பு வெளியீடு (பரலி சு.நெல்லையப்பர்)

1919 மார்ச்: சென்னையில் மகாத்மா காந்தியுடன் சந்திப்பு

1920: சுதேசமித்திரனில் மீண்டும் உதவி ஆசிரியர் பணி

1921 செப். 11: மரணம் (சென்னை)

.

பணியாற்றிய பத்திரிகைகள்:

சுதேசமித்திரன் (நாளிதழ் – உதவி ஆசிரியர்)

சக்கரவர்த்தினி (பெண்கள் மாத இதழ் – ஆசிரியர்)

இந்தியா (நாளிதழ் – பொறுப்பாசிரியர்)

விஜயா (மாலை இதழ் –ஆசிரியர்)

கர்ம யோகி (மாத இதழ் – ஆசிரியர்)

பால பாரதா அல்லது யங் இந்தியா (ஆங்கில வார / மாத இதழ் – ஆசிரியர்)

சூர்யோதயம் (வார இதழ்- ஆசிரியர்)

தர்மம் (இலவச வெளியீட்டிதழ்- ஆசிரியர்)

எழுதிய பத்திரிகைகள்:

கர்மயோகின் (அரவிந்தரின் பத்திரிகை; இதிலும் பாரதி எழுதினார்).

ஞானபானு (சுப்பிரமணிய சிவா நடத்திய பத்திரிகை; இதிலும் பாரதி எழுதினார்).

காமன்வீல் (அன்னிபெசண்ட் நடத்திய ஆங்கிலப் பத்திரிகை; இதிலும் பாரதி எழுதினார்).

சர்வஜனமித்திரன், விவேகபானு, தி ஹிந்து, நியூ இந்தியா, மெட்ராஸ் ஸ்டாண்டர்டு- ஆகிய பத்திரிகைகளிலும் பாரதி எழுதி உள்ளார்.

$$$

Leave a comment