திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -21

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபத்தொன்றாம் திருப்பதி...

21. நந்தியின் சாபம் தீர்த்த நந்திபுர விண்ணகரம்

குந்தியையும் ஐந்து பாண்டவர்களையும்
நந்தியையும் காத்தவனே ஜெகநாதப் பெருமாளே!
கந்தையிலே முடிந்த அவலை உண்டவனே - உனை
சிந்தையிலே வைத்து வந்தேன் நாதன் கோயிலுக்கே!

நந்திகேஸ்வரர் சாபம் தீர தவம் புரிந்த தலம் இது. புறாவுக்காக தனது உடலின் சதையை வெட்டி எடுத்து சிபி சக்கரவர்த்தி கொடுத்த இடமும் இதுவே. சந்திர தோஷ பரிகாரத் தலம்.

மூலவர்: விண்ணகரப் பெருமாள், ஜெகநாதர் (அமர்ந்த கோலம் – மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: செண்பகவல்லி
விமானம்: மந்தார விமானம்
தீர்த்தம்: நந்தி புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்து தெற்கே 4 கி.மீ. தொலைவில், கொற்கையின் அருகில் உள்ளது இத்திருத்தலம் (நாதன் கோயில்).

சேவிப்பதன் பலன்கள்:

அரசியலில் இருப்பவர்கள் தங்கள் பயணம் வெற்றிகரமாக இருக்கவும், அரசாங்கத்தில் வேலை செய்யபவர்கள் பதவி நிலைக்கவும், ஆபத்து இல்லாமல் இருக்கவும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.  1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களும், 3, 12, 21, 30  தேதிகளில் பிறந்தவர்களும் வந்து பலன் பெற வேண்டிய தலமும் ஆகும்.

$$$

Leave a comment