ஒவ்வொரு ஹிந்துவும் ராமேஸ்வரத்தில், சேதுமாதவர் என்று சொல்லப்படுகிற பெருமாள் முன்பு தனுஷ்கோடி, ராமேஸ்வரம் மணலை எடுத்து பூஜித்து, யாத்திரை செய்து, அலஹாபாத்தில் சுத்த கங்கையில் வேணி மாதவன் சந்நிதியில் பூஜித்து, உடன் எடுத்து வந்த மணலை சுத்த கங்கையில் விட்டுவிட வேண்டும். அங்கிருந்து சுத்த கங்கையை எடுத்து ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். (காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தீபாவளி ஆசியுரை...)
Day: November 12, 2023
பாவியும் யோகி ஆகலாம்!
கிரிஷின் வாழ்க்கை நெறி தவறி, வழி தவறிச் சென்றவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. எந்தப் பாவியும் மனதார பகவானின் நாமத்தை உச்சரித்தால், தன் தவறுகளுக்காக வருந்தி புதிய பாதையை நோக்கிப் பயணித்தால் இறைவன் தன் அன்புக் கரம் நீட்டுவார். கிரிஷ் என்றுமே கோழையாக இருந்தது இல்லை. தன் பாவச் செயல்களை ஒருபோதும் மற்றவரிடம் மறைக்கவில்லை. கள்ளங் கபடம் இன்றி வெளிப்படையாகச் சொன்னார்.
காயத்ரி மந்திரம்- 1
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனரான பூஜ்யஸ்ரீ சுவாமி சித்பவானந்தர் (1920-1985), தமிழகத்தில் அண்மைக்காலத்தில் ஆன்மிகப்பயிர் வளர்த்த அருளாளர். பாரதத்தின் முதன்மை மந்திரமான காயத்ரி மந்திரம் குறித்த சுவாமிகளின் சிறிய நூல் (காயத்ரீ), இங்கு நான்கு பாகங்களாகக் கொடுக்கப்படுகிறது.