ஓர் அழைப்பிதழ்…

நமது ‘பொருள் புதிது’ இணையதளத்தில் வெளியான இரு தொடர்கள் நூல் வடிவம் பெற்று, விஜயதசமி அன்று வெளியாவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்த நூல்களின் வெளியீட்டு விழாவை திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளை அமைப்பினர் விஜயதசமியன்று (24.10.2023) சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதன் அழைப்பிதழ் இங்கே இணைக்கப்பட்டுள்ளது...

நவராத்திரி – 2

பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம். குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலையென்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி. அது கோயிற் புறத்திலே மாத்திரம் இல்லை:- அகத்திலும் இருக்கிறது. கடல் அசைப்பது; பாதாளத்தின் கீழே மற்றொரு பாதாளம்; அதன் கீழே ஒன்று. அதன் கீழே ஒன்றாக எல்லையின்றிப் பரந்த திசை முழுதையும் கவர்ந்தது.

என்றும் வாழும் சநாதன தர்மம்: நூல் அறிமுகம்

சநாதனம் சர்ச்சையை ஒட்டி விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள அற்புதமான நூல் இது. இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறப்பு மிக்க 37 பதிவுகள், சநாதனத்தின் பன்முகத்தையும் அதன் ஒருங்கிணைந்த தன்மையையும் காட்டுகின்றன. தமிழ் கூறும் சநாதனம், சநாதனம் குறித்த சான்றோரின் அமுதமொழிகள் ஆகியவை ‘என்றும் வாழும் சநாதன தர்மம்’ நூலின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. நமது இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் அழகிய நூல் வடிவம் பெறுவது மிகவும் பெருமை அளிக்கிறது....