“ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ?” என்று கேட்பார் மகாகவி பாரதி. “சூரியனைப் பார்த்து நாய் குலைப்பதால் சூரியனுக்கு எந்தக் கெடுதியும் இல்லை” என்பது பழமொழி. அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டபோது, இந்த இரண்டும் தான் நினைவுக்கு வந்தன. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடங்குகின்றன...
Day: September 5, 2023
தமிழகத்தின் தியாகத் திலகம்!
தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றிவைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். தியாகம் என்ற சொல்லுக்குப் பொருளானவர் வ.உ.சி.
மிருகங்களும் பக்ஷிகளும்
... எளிய வகுப்பினருக்குச் சிறிதேனும் ஈரம் இரக்கமின்றிக் கொடுமைகள் செய்யும் மக்களின் மீது சில சமயங்களில் என்னையும் மீறி எனக்குக் கோபம் பிறந்து விடுகிறது. ஆனால், இந்தக் கோபத்தையும் கூடிய சீக்கிரத்தில் முயற்சி பண்ணி அடக்கி விடுகிறேன். நீங்கள் சொன்ன விதியையே எப்போதும் பரிபூரணமாக அனுஷ்டிக்க முயலுகின்றேன். ஏனென்றால், கோபச் சொற்கள் நமது நோக்கத்தின் நிறைவேறுதலுக்கே, நீங்கள் குறிப்பிட்டவாறு, தடையாகி முறிகின்றன. ...