மனுமுறை கண்ட வாசகம் -1

மனுநீதி சாஸ்திரம், சனாதனம் ஆகிய சொற்களைக் கேட்டாலே தமிழகத்தில் ஒரு சிலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. இந்தக் கும்பல் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருளாளர் திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளை திராவிட இயக்கத்தின் கருத்தியல் முன்னோடியாகக் கொண்டாடுகிறது. இதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மையில் திராவிடக் கருத்தியலுக்கு நேர்மாறானவர் மட்டுமல்ல, சனாதனத்தின் காவலராக அவதரித்தவர் வள்ளலார். அவர் மாணவர்களுக்கு பாடம் புகட்ட 1854-இல் எழுதிய ‘மனுமுறை கண்ட வாசகம்’ உரைநடை நூலே இதற்கு ஆதாரம். “தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ?” என்று மனுநீதி சோழன் புலம்புவதாக இந்நூலில் ஒரு காட்சி வருகிறது. தெய்வத்தை இகழ்ந்து ஆணவமாகத் திரியும் எத்தர்களுக்கு வள்ளலார் என்ற பெயரைச் சொல்லவே தகுதியில்லை.

வள்ளலார் ஒரு சனாதனியே!

வள்ளலாரின் இருநூறாவது ஆண்டு கொண்டாடப்படும் இந்த ஆண்டில், தமிழகத்தில் வள்ளலாருக்கு திராவிட முத்திரை குத்திட அரசாலும், ஆன்மிகத்துக்கு எதிரான சிலராலும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வள்ளலார் என்னும் சூரியனை சிறு குமிழில் அடைக்க முடியாது. ஆயுள் முழுவதும் ஆன்மிக நெறியாளராக வாழ்ந்த வள்ளலார் உண்மையில் சனாதனம் காக்க உதித்த அருட்செல்வரே என்கிறார் எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன்....