அன்று முழுவதும் என் மனம் மிகச் சோர்ந்திருந்தது. அழகன், அறிஞன் என்று நான் போற்றிய நண்பன் இப்படி ஆக வேண்டுமா என்று எண்ணி எண்ணி மனம் களைத்துப் போயிற்று. முதலிலிருந்தே எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்தான்; என்னை நெருங்கவொட்டாமல் ஒதுக்கினான். என் நட்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் அன்போடு உதவி செய்ய முடியாமற் போயிற்று; சாமண்ணாவும் அத்தையும் அந்த அம்மாவும் கேட்டு எவ்வளவு வருந்துகிறார்களோ; கற்பகம் தன் அண்ணனை நினைந்து நினைந்து கதறுவாள் என்றெல்லாம் எண்ணிச் சோர்வு மிகுதியாயிற்று.
Month: July 2023
அகல் விளக்கு- 12
விடுதியில் முன்நாள் இருந்த உணர்ச்சியும் எழுச்சியும் மறுநாள் இல்லை. ஏதோ பேய் உலாவும் இடம் என்று சொல்லத் தக்கவாறு இருந்தது. எந்நேரமும் எக்களிப்பும் எள்ளி நகையாடலும் நிறைந்திருந்த உணவுக் கூடத்திலும் அமைதியும் அடக்கமுமே இருந்தன. எல்லோரும் நேரத்தோடு கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு வழக்கம் போல் இருந்துவிட்டு வந்தோம். அன்று மாலையும் விடுதி வெறிச்சென்றிருந்தது.
அகல் விளக்கு- 11
“மேற்கு நாட்டுப் பழக்க வழக்கங்களில் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நம்மவர்கள் அப்படிச் சலித்து எடுப்பதே இல்லை. சலித்தாலும் மேலே நிற்கும் கப்பியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்.”
மனம் ஒரு குரங்கு
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கிளைக்குத் தாவுவது மனத்தின் இயல்பு. இதனை துரியோதனன் பாத்திரப்படைப்பு விளக்கம் மூலமாக காட்டுகிறார் பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம்....
UCC Agenda: What Advocates Of ‘Legal Pluralism’ Are Unwilling To Accept
Legal pluralists may not be willing to fully embrace the implementation of Shariat law in matters relating to criminal justice, democracy, and social equality. It's a well written article published in SWARAJYA website...
அகல் விளக்கு- 10
ஒத்திகையின் போது, சந்திரன் நன்றாகவே நடித்தான். பெண்ணைப் போன்ற தோற்றம் அவனுக்கு இன்னும் சிறிது இருந்தது. ஆகவே, அவன் நடிக்கத் தொடங்கியபோது எல்லோரும் போற்றிச் சிரித்து ஆரவாரம் செய்தார்கள். நடக்கும் நடையிலும் குலுங்கும் அசைவிலும் முகத்தின் திருப்பங்களிலும் பெண்ணைப் போலவே நடித்தான். அவன் எப்படித்தான் வெட்கம் இல்லாமல் இவ்வாறு நடிக்கிறானோ என்று நான் வியந்தேன்.... மு.வ.வின் அகல் விளக்கு, பத்தாம் அத்தியாயம்...
Question for UCC critics – Why don’t you want Sharia law for Muslim criminals?
There is no better way than UCC to pull Muslims from the margins of separatism into the mainstream of nationalism. A worthwhile article which was published in The Print website...
அகல் விளக்கு- 9
அந்தத் தாழை மரங்களை நினைத்தேன். தாழை மரத்திலும் பூக்கள் மட்டுமே மதிப்புப் பெறுகின்றன. முள் நிறைந்த அதன் இலைகளை யார் மதிக்கிறார்கள்? அந்த இலைகள்தான் உழைத்துக் காற்றையும் ஒளியையும் மண்ணின் சத்தையும் நீரையும் உட்கொண்டு மலர்களை உண்டாக்கித் தருகின்றன. ஆயினும் அந்த முள் இலைகளை எவரும் போற்றுவதில்லை. அரளி இலைகளை நின்ற இடத்திலேயே எறிந்தேன்.... மு.வ.வின் அகல் விளக்கு- 9ஆம் அத்தியாயம்...
Why Tribals Should Be Kept Out Of Purview Of Uniform Civil Code?
The tribals need to be told that the Constitutional safeguards to their customary laws and practices are sacrosanct and will not be disturbed. It's an article published in SWARAJYA website....
அகல் விளக்கு- 8
கற்பகம் சந்திரனைப்போல் அவ்வளவு நுட்பமான அறிவுடையவள் அல்ல; அதனால் எந்தப் பாடத்திலும் முதன்மையாக வரவில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங்கையை விட அழகான கையெழுத்து எழுதினாள். புத்தகங்களை மிக ஒழுங்காக வைத்துப் போற்றினாள். சில நாட்களில் என்னுடைய அலமாரியும் மேசையும் இருக்கும் நிலையைப் பார்த்து, “இதென்ன இப்படிக் கன்னா பின்னா என்று வைத்திருக்கிறீர்களே! மணிமேகலை! நீயாவது உன் அண்ணாவுக்காக அடுக்கி ஒழுங்காக வைக்கக் கூடாதா? பலசரக்குக் கடைகூட நன்றாக வைத்திருக்கிறார்களே” என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவாள். மு.வ.வின் அகல்விளக்கு- 8ஆம் அத்தியாயம்....
ராமாயண சாரம் (6-8)
ராமன் “அது அரக்கர் வாழும் காடு; மலைகளைக் கடக்க வேண்டி வரும். உன் மலர்ப்பாதங்கள் அதைத் தாங்காது. உன் பாதங்கள் குளிர்ந்த அரக்குண்ட செம்பஞ்சு போன்றது. வனத்தில் நடப்பது உனக்கு கடினம்” என்கிறான். சீதையோ மனம் வெதும்பி “நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?” என்று குமுறுகிறாள்.
What is Uniform Civil Code?
Uniform Civil Code (UCC) is defined in our Constitution under Article 44 of Directive Principles of State Policy. It states that it is the duty of the state to secure for the citizens a Uniform Civil Code throughout the territory of India. In other words, we can say that it means one country one rule. Let us find out more about Uniform Civil Code, and its pros and cons.
அகல் விளக்கு- 7
மகாகவி பாரதி தனது சுயசரிதையான ‘கனவு’ கவிதையில் ’பிள்ளைக்காதல்’ குறித்துப் பாடுகிறார். அதேபோல, இப்புதினத்தில் வேலு - கற்பகம் என்ற இரு மழலை உள்ளங்களை நமக்கு அழகாகக் காட்சிப்படுத்துகிறார் மு.வ...
ராமாயண சாரம் (4-5)
ராமச்சந்திரனே புவி ஆளத் தகும் என்றெண்ணி அழைத்து அவன் மார்பு இந்த பூபாரத்தை தாங்குமா என்று தன் மார்போடு அணைப்பது போல ராமனின் மார்பை அளந்து பார்க்கிறான் தசரத சக்கரவர்த்தி. 56 இன்ச் இருக்குமா என்று அளந்து பார்த்திருப்பானோ தசரதன்! அளந்ததில் சரியாக இருந்தது.... எழுத்தாளர் திரு. சண்முகநாதனின் ‘ராமாயண சாரம்’ தொடர்...
அகல் விளக்கு- 6
கிராமத்து மக்களின் கபடமற்ற வெள்ளை உள்ளத்தை இந்த அத்தியாயத்தில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் மு.வ. அது மட்டுமல்ல, சந்திரனுக்குள் இருக்கும் சிறு களங்கத்தையும் லேசாக சுட்டிக்காட்டுகிறார். அவன் தானே இக்கதையில் திசை மாறும் நாயகன்?