வியாச முனிவரின் மூலநூலான பாரதத்தை அடியொற்றி, அதன் ஒரு பகுதியான பாஞ்சாலியின் சபதத்தை மகாகவி பாரதி கவிதையில் வடித்துத் தந்திருக்கிறான். இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டது; எழுபத்து மூன்று தலைப்புகளைக் கொண்டது; முன்னூற்றியெட்டு பாடல்களை உள்ளடக்கியது. பாஞ்சாலியைத் தன் கதையின் நாயகியாக பாரதி தேர்ந்தெடுத்தது ஏன்? அவளை அடிமைப்பட்ட பாரத தேசத்தின் உருவகமாக, பாரத தேவியாக பாவித்ததன் விளைவா? அல்லது அடிமைப் பட்டுக் கிடந்த பெண் இனத்தை விடுவிக்க வந்த எழுச்சிக் குரலா?