ஞான ஜெயந்தி

அமரர் திரு.  ரா.கணபதி, ஆன்மிக  எழுத்தாளர்;  காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்;  மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உபதேசங்களை 7 பாகங்களாக, அற்புதக் கருவூலமாக  ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலாகத் தொகுத்தவர்;  ‘அறிவுக் கனலே அருட்புனலே’ (ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு), ’சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு’, ’காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பல  ஆன்மிக நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்து இவர் எழுதிய இக்கட்டுரை, சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு (1963) விழாவை முன்னிட்டு, கல்கி வார இதழில் (மலர்- 22, இதழ்- 25) இடம்பெற்றதாகும்.