ராமாயண சாரம்- 32

ராமன் கதை கேட்டவர்கள், சொன்னவர்கள், இந்த நல்ல செயலினால், மனிதருக்குத் தலைவராகி, யமனை வெல்லும் தன்மையும் பெறுவார்கள்.

ராமாயண சாரம்- 31

முதன்முதலில் கைகேயி கால்களில் விழுந்து வணங்கிய பின்னரே, மற்ற தாயரின் கால்களில் விழுந்து வணங்குகிறான் ராமன். கைகேயி தவறு செய்திருந்தாலும், அதை மறந்து, அவளுக்கு முதல் மரியாதை செலுத்துகிறான் ராமன். பண்பின் சிகரம்!

ராமாயண சாரம் – 30

அனுமன் பெருமகிழ்ச்சியோடு அசோகவனத்துக்குச் செல்கிறான். என்னவென்று சொல்வது! சொல்ல வார்த்தை கிடைக்குமா?  “அம்மா, நல்ல செய்தி” என்று சொல்வதா?  “உனக்கு விடுதலை” என்று சொல்வதா? இவையெல்லாம் மிகவும் சாதாரணமான வார்த்தைகளாகத் தோன்றுகிறது அனுமனுக்கு.

ராமாயண சாரம் (28-29)

இராகவன் தன் புனித வாளி ராவணனின் மார்பைத் துளைத்து முதுகு வழி சென்றது. அவன் செருக்கையும், வலிமையையும் பறித்துக்கொண்டு போனது  ‘ஒருவன்’ வாளி. ராவணன் மனதில் சீதை மேல் இருந்த ஆசையையும் துழாவி பறித்துக்கொண்டு வெளியே போனது ராமனுடைய வில்.

ராமாயண சாரம் (26-27)

வில் வித்தையில் பேராற்றல் கொண்ட ராமன், தன் ஒரு அம்பினால் ராவணனின் வில் முறிந்து போகச் செய்கிறான். ஒரே ஒரு அம்புதான்! ராவணன் வில் முறிந்தது. ராவணன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஈரேழு உலகிலும் தனை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புக் கொண்டிருந்தவனை, ஒரே அம்பில் நிலைகுலையச் செய்கிறான் ராமன்.

ராமாயண சாரம் (24-25)

அன்றைய இரவு, மனித குலத்தின் ஓரு பெரும்போரை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. இலங்கையின் இரண்டு முனைகளில் இரண்டு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரண்டு வீரர்கள் ஒருவரோடு ஒருவர் பொருதற்குக் காத்திருந்தனர். அடிபட்ட புலிபோல, தர்மத்தை நிலைநாட்ட வேண்டி ராமன் ஒரு முனையில். அதர்மியாக, அதீத ஆசை கொண்டு, யார் பேச்சையும் மதிக்காமல் திமிர் பிடித்த ராவணன் மறுமுனையில்.

ராமாயண சாரம்- 23

நளன் வானரத் தச்சன் என்றறியப் பட்டவன். It was not a random choice. அனுமன் இலங்கை செல்ல வேண்டுமென்பதும் நளன் சேது செய்ய வேண்டும் என்பதும், அவரவர் திறமையை உணர்ந்தே. Horses for courses.

ராமாயண சாரம் – 22

ராமனின் சிறந்த பக்தன் அல்லவா அனுமன்?  கோபத்தில், உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறான். ராவணன், சீதைக்கும் ராமனுக்கும், செய்த கொடுமைக்குப் பதில் சொல்லும் விதமாய் துவம்சம் செய்கிறான். அனுமனின் பராக்கிரமத்தை கம்பன் (at his best) தமிழில் வானளாவிய கவிதை செய்து வைத்திருக்கிறான்.

ராமாயண சாரம் – 21

அதன் பின், சீதை, தன் கசங்கிய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூளாமணியைக் கொடுத்து  “எப்பொழுதெல்லாம் ராமனின் நினைவு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த சூளாமணியைப் பார்த்து ஆறுதல் அடைவேன். நீ என்னைப் பார்த்ததற்கான அடையாளமாக இதைக் கொண்டு செல்” என்று சொல்கிறாள்.

ராமாயண சாரம் (19-20)

தன் உயிரைத் துச்சமென மதித்து கடல் கடந்து தனியனாக வந்து அரக்கர் மாளிகையின் உட்புகுந்து சீதையைத் தேடி தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிய அனுமனுக்கு கோவில் வைத்து கும்பிட்டு நன்றி சொல்வது நம் கடமை.

ராமாயண சாரம் (17-18)

தன் மகன் அங்கதனை அழைத்து  “ராமன் என்னை முடித்துவிட்டான் என்ற எண்ணம் எப்பொழுதும் உன் மனதில் எழக் கூடாது. நடந்தது தர்மத்தின் படியே நடந்திருக்கிறது. எனவே நீ  “தருமம் நோக்கி, மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி” என்று அங்கதனிடம் சொல்லிவிட்டு  “ராமா இவன் மற்று உன் கையடை ஆகும்” என்று ராமனிடம் ஒப்புவித்து விட்டு மேலுலகம் செல்கிறான் வாலி.

ராமாயண சாரம் (15-16)

ராமன், ஜடாயுவுக்கு அந்திமக்கிரியை செய்துவிட்டு, “தந்தையை இழந்தேன். இப்பொழுது சீதையும் பிரிந்து விட்டாள்” என்று வருந்தி, நெஞ்சில் கோபக்கனலுடன கையில் வில்லுடனும் மனதில் அரக்கர் கூட்டத்தை அழிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் தெற்கு நோக்கி, ராவண சாம்ராஜ்யம் முடியப்போகும் என்பதற்கான முதல் அடியை ராமன் எடுத்து வைக்கிறான்.

ராமாயண சாரம் (13-14)

ராமன் இருக்குமிடம் வந்து சீதை முன் பொன் மானாகத் தோன்றுகிறான் மாரீசன். மானைக் கண்ணால் கண்டால் மனத்தால் விரும்பாதவர் யார்? அதுவும் இது கண்ணைக் கவரும் பொன் மான். இதுவரை ராமனிடம் எதுவும் கேட்காத சீதை அந்த மானைப் பிடித்துத் தருமாறு வேண்டுகிறாள்.

ராமாயண சாரம் (11-12)

மேலும் விளையாட்டாக சூர்ப்பணகை ‘எனக்கு மூக்கு இல்லையே இப்பொழுது. மூக்கில்லாத இவளுடன் எப்படி குடும்பம் நடத்துகிறான் என்று ஊர் பழிக்கும் என்று அஞ்சுகிறாயா, ராமா? யாரவது கேட்டால் சொல். இடையே இல்லாத சீதையுடன் இத்தனை நாள் குடும்பம் நடத்தினேனே. அப்படித்தானே இதுவும் என்று சொல் ராமா” என்று கொஞ்சி விளையாடப் பார்க்கிறாள். ரணகளத்திலும் அவளுக்கு கிளுகிளுப்பு.

ராமாயண சாரம் (9-10)

அயோத்தி நீங்கிய ராமனை இளவல் பரதன் சந்திக்கும் காட்சி மிகவும் உணர்ச்சிகரமானது. அப்போது பரதனுக்கும் ராமனுக்கும் ஒரு அழகான உரையாடல் நடக்கிறது. கம்பனின், மிகச் சிறந்த, உரையாடல்களில் இதுவும் ஒன்று.