சின்னச் சங்கரன் கதை

முற்றுப் பெறாமல் நமக்குக் கிடைத்த மகாகவி பாரதியின் கதைப் பொக்கிஷங்களுள்  ‘சின்னச் சங்கரன் கதை’யும் அடங்கும். இந்தக் கதைத் தொடர் தியாகசீலர் சுப்பிரமணிய சிவம் நடத்திய ‘ஞானபாநு’ மாதப் பத்திரிகையிலே 1913 மே மாத இதழில் முதன்முதலாக வெளிப்பட்டது; 1914 மார்ச் மாத இதழுடன் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை. அதாவது, நான்கு அத்தியாயங்களே பிரசுரமாகி உள்ளன. இந்தக் கதையை பாரதி தமது சொந்தப் பெயரில் எழுதாமல், ‘சாவித்திரி’ என்ற புனைபெயரில் எழுதினார். கதையின் தொடர்ச்சியைப் பாரதி எழுதத் திட்டமிட்டிருந்தார் என்பதை  அவர் எழுதிய குறிப்பொன்றால் தெரிந்துகொள்ள முடிகின்றது. பாரதியின் அதீத நையாண்டித் திறனுக்கு அற்புதமான உதாரணம், இந்த முற்றுப் பெறாத புதினம்....

பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-1

மகாகவி பாரதி தனது மனவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம், அவரது தன்னிலை விளக்கம். தவிர, தமிழறிஞர் மு.ராகவையங்காரைப் பாராட்டி எழுதிய கடிதம், தம்பி விசுவநாதனுக்கும், அன்புத் தோழன் நெல்லையப்பருக்கும், எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கும் எழுதிய கடிதங்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

ஞானரதம் (9- 11)

ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை, ஸாரமில்லை, ஸத்துக் கிடையாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாய் இருக்கும் வாழ்க்கை; ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான், ஆனால், “நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லையே” என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லையென்றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ மூடா நீ ஏமாற்றுவதனால், முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம். (மகாகவி பாரதியின் ஞானரதத்தில் இருந்து)...

ஞானரதம்  (1-8)

மகாகவி பாரதியின் ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை; குறும் புதினம்; அற்புதமான தத்துவ விசாரணை. ஆங்காங்கே தேசத்தின் வீழ்ச்சி குறித்த புலம்பலுடன் விழிப்புணர்வூட்டும் கடமையுணர்வும் உண்டு.... வாழ்வின் உன்னதக் கணமொன்றைத் தேடியலையும் பாரதியின் ஆன்மா, தன்னையே கதையின் நாயகனாக்கி, மன ரதமேறி வெவ்வேறு உலகங்களில் சஞ்சாரம் செய்கிறது. கற்பனைகளுக்கும், நினைவுகளுக்கும் தூரம் என்பது ஒரு பொருட்டாகுமா, என்ன? துன்பங்களை ஊடறுத்துச் சென்றுவர பாரதி தேர்வு செய்த ஐந்து உலகங்களும் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கானவையே....தற்காலத்தில் ‘டைம் மெஷின்’ (கால இயந்திரம்) என்ற கருதுகோளுடன் புதினங்கள் புனையப்படுகின்றன. இதற்கு ஒப்பான ஒரு சிந்தனையை நூறாண்டுகளுக்கு முன்னமே தமிழ் இலக்கியத்தில் தனது ஞானரதம் வாயிலாக அறிமுகப்படுத்தியவர் பாரதி என்று சொல்லலாம். அதிலும் தன்னையே கதையின் நாயகன் ஆக்கிக்கொண்டு, சுய எள்ளலுடன் எதையும் அணுகும் சமநிலைப் பார்வை, இந்தப் படைப்பை பேரிலக்கியம் ஆக்குகிறது.....

பாரதியின் ‘புதிய கோணங்கி’

மகாகவி பாரதியின் தீர்க்கதரிசனக் கவிதை ‘புதிய கோணங்கி’. அவரது கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் கடைசிப் பாடல் இது...

பாரதியின் நாட்டுக் கல்வி

வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்தில் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு; பாரதியின் கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் 10வது பாடல் இது...

பாரதியின் தொழிலாளர் பாடல்கள்

மகாகவி பாரதி தொழிலாளர் நலம் குறித்து எழுதியுள்ள இரு கவிதைகள் இவை. இவற்றில் மறவன் பாட்டில் பல வரிகள் சிதிலமடைந்ததால் கிடைக்கவில்லை. பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் 8, 9 பாடல்கள் இவை....

பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள்

மகாவி பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள் மிக சிறப்பானவை. பாரதியின் கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் உள்ள 4 முதல் 7 வரையிலான கவிதைகள் இவை....

பாரதியின் ‘முரசு’ பாடல்

மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் உள்ள மூன்றாவது கவிதை இது....

பாப்பாப் பாட்டு

மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் இரண்டாவதான ’பாப்பாப் பாட்டு’ கவிதை இங்கே...

புதிய ஆத்திசூடி

மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப்பாடல்கள் பிரிவில் முதலாவது கவிதை ‘புதிய ஆத்திசூடி’ இங்கே...

பாரதியின் விநாயகர் நான்மணி மாலை

மகாகவி பாரதியின் கவிதைகளில் இரண்டாவது பிரிவான பக்திப் பாடல்களில் முதல் கவிதை ‘விநாயகர் நான்மணி மாலை’. பவளம், முத்து, பச்சை, நீலம் ஆகிய நான்கு மணிகளைக் கோர்த்து ஒரு மாலையாக்கினால் எவ்வாறு இருக்குமோ அதுபோல, வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய நான்கு யாப்புக் கவிதைகள் ஒழுங்காக அமைத்து பாடப்பெறுவது நான்மணி மாலை. மகாகவி பாரதியின் இலக்கணப் புலமைக்கும், யாப்பிலக்கணத் தேர்ச்சிக்கும் அடையாளமாக விளங்குபவை இக்கவிதைகள். அது மட்டுமல்ல, இறைவனை வேண்டும்போதும், நாட்டுநலனுக்காகத் துடிக்கும் அவரது தேசப்பற்றை இப்பாடலில் நாம் காணலாம்....

பிற நாடுகள் குறித்த பாரதியின் பாடல்கள்

எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புலவனின் வழிவந்தவர் அல்லவா? அவரது உலகம் தழுவிய பார்வைக்கு, பிற நாடுகள் மீது அவர் பாடிய இந்த நான்கு கவிதைகளும் உதாரணம். அந்த நாடுகள்: 1 இத்தாலி, 2 பெல்ஜியம், 3. ரஷ்யா, 4. பிஜி தீவுகள். சுதந்திர இத்தாலியை நிறுவப் போராடிய மாவீரர் மாஜினியின் சபதம், ஜெர்மனியிடம் வீழ்ந்தாலும் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பெல்ஜியத்துக்கு வாழ்த்து, கொடுங்கோலன் ஜாரின் அரசை வீழ்த்திய ரஷ்யப் புரட்சியால் பெருமிதம், பிஜித் தீவுகளில் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக அவதிப்படும் ஹிந்து ஸ்திரீகளுக்காகக் கண்ணீர் என்று - இக்கவிதைகளில் மகாகவி பாரதியின் அதியுயர் மானுடம் வெளிப்படுகிறது.

பாரதியின் தேசியத் தலைவர்கள் மீதான பாடல்கள்

மகாகவி பாரதி தமது அரசியல் குருவாக மதித்த பெருந்தலைவர்களை வாழ்த்திப் பாடிய பாடல்கள் இவை. ‘தேசிய கீதங்கள்’ பகுப்பில், ‘தேசீயத் தலைவர்கள்’ என்ற் உள்பகுப்பில் இடம் பெற்றுள்ள 9 கவிதைகள் இவை. அந்நாளில் தமது நலன் கருதாமல் வாழ்வையே நாட்டுக்கு அர்ப்பணித்த பெரியோரை மட்டுமே மகாகவி பாரதி பாடி இருப்பது, அவர்தம் எண்ணத் துணிவையும் கொள்கைப் பற்றையும் வெளிப்படுத்துகிறது. இதோ அக்கவிதைகள்....

பாரதியின் தேசிய இயக்கப் பாடல்கள்

மகாகவி பாரதி எழுத்தாளர் மட்டுமல்ல; அரசியல் செயற்பாட்டாளரும் கூட. பாலகங்காதர திலகர் தலைமையிலான காங்கிரஸ் தீவிரவாதிகள் பிரிவில் தீவிரமாக இயங்கியவர்; அதற்காக, மிதவாதிகளை (நிதானக் கட்சியார் என்று பாரதி சுட்டுவார்) கடுமையாக விமர்சித்தவர்; தமிழகத்தில் வ.உ.சி.யுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியவர். தமது அரசியல் இயக்கத்துக்காக, அவர் இயற்றிய பாடல்கள் ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் தேசிய கீதங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள இக்கவிதைகளின் எண்ணிக்கை 9. இவை அவரது தேசபக்திக் கனலை வெளிப்படுத்தும் தூய கவிதைகளாக விளங்குகின்றன.