மகாகவி பாரதி வாழ்ந்த காலத்தில் அரசியல் அரங்கிலும் ஆன்மிக அரங்கிலும் நவீன இந்தியாவிற்கான எழுச்சியை பகவத்கீதையிலிருந்தே பலரும் பெற்றார்கள். குறிப்பாக, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, மகரிஷி அரவிந்தர் ஆகியோருக்கும் கீதையே ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருந்தது. இவர்கள் அனைவரும் கீதைக்கு உரை எழுதினர். மகாகவி பாரதியும் இதில் விதிவிலக்கல்ல. மகாகவி பாரதி 1912-ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார். 1924 -25 காலகட்டத்தில் பகவத் கீதை முன்னுரை, பகவத்கீதை மூலமும் உரையும் ஆகிய நூல்களை பாரதி பிரசுராலயத்தார் முதன்முதலில் பதிப்பித்தனர். தனது முன்னுரையைத் தொடர்ந்து, பகவத் கீதை சுலோகங்கள் அனைத்தையும் நேரடி மொழிபெயர்ப்பில் 18 அத்தியாயங்களாக மகாகவி பாரதி வழங்கி இருக்கிறார். அவை அனைத்தும் இங்கே...