“வேண்டியவர்கள் எல்லாம் பூணூல் போட்டுக் கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்கள் எல்லாரும் பூணூல் போட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூணூல் இருந்தாலும் ஒன்றுபோலே, இல்லா விட்டாலும் ஒன்றுபோலே, ஹிந்துக்களெல்லாம் ஒரே குடும்பம். அன்பு காப்பாற்றும். அன்பே தாரகம்” என்றேன். “அன்பே சிவம்” என்று பிரமராயர் சொன்னார்.
Tag: சமயம்
ஹிந்துக்களின் கூட்டம்
ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல, வாலில் நெருப்புப் பிடித்தெரியும் போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள்; ஜனத் தொகை குறையும் போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும் போதே தூங்குகிறார்கள்; அவர்கள் கண்ணிருந்தும் குருடர்.
மதிப்பு
இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலே செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால், அவன் ராஜாங்கம் முதலிய ஸகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை. எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும்.
‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’
ஒவ்வொரு ஹிந்துவும் ராமேஸ்வரத்தில், சேதுமாதவர் என்று சொல்லப்படுகிற பெருமாள் முன்பு தனுஷ்கோடி, ராமேஸ்வரம் மணலை எடுத்து பூஜித்து, யாத்திரை செய்து, அலஹாபாத்தில் சுத்த கங்கையில் வேணி மாதவன் சந்நிதியில் பூஜித்து, உடன் எடுத்து வந்த மணலை சுத்த கங்கையில் விட்டுவிட வேண்டும். அங்கிருந்து சுத்த கங்கையை எடுத்து ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். (காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தீபாவளி ஆசியுரை...)
பாவியும் யோகி ஆகலாம்!
கிரிஷின் வாழ்க்கை நெறி தவறி, வழி தவறிச் சென்றவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. எந்தப் பாவியும் மனதார பகவானின் நாமத்தை உச்சரித்தால், தன் தவறுகளுக்காக வருந்தி புதிய பாதையை நோக்கிப் பயணித்தால் இறைவன் தன் அன்புக் கரம் நீட்டுவார். கிரிஷ் என்றுமே கோழையாக இருந்தது இல்லை. தன் பாவச் செயல்களை ஒருபோதும் மற்றவரிடம் மறைக்கவில்லை. கள்ளங் கபடம் இன்றி வெளிப்படையாகச் சொன்னார்.
எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்!
எழுதியது யார் என்று தெரியவில்லை. எல்லா ஜீவராசிகளையும் வாழ்த்தி அரவணைக்கும் சனாதன அன்பு வெள்ளத்தில் திளைத்த பலரும் பலகாலமாக உச்சரிக்கும் மந்திரம் இது. இதுவே பாரதபூமியின் பண்பாடு.
சநாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்
கடலுார் மாவட்டம், வடலுாரில் 2023 ஜூன் 21-இல் நடைபெற்ற வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி பேசிய உரையின் சுருக்கமான தொகுப்பு இது…
செம்பஞ்சுக் குழம்பு!
அன்னை திருமகளே, எம்பெருமானது திருமார்பில் நீ கணமும் பிரியாது உறைகிறாய். உன் திருவடியில் பூசிய செம்பஞ்சுக் குழம்பு அவன் திருமார்பில் படுவதால் அது அழகிய சின்னமாக நின்று அவன் திருமேனியையே அழகுறச் செய்கிறது.
ஆடிப் பெருக்கும் அன்னை வழிபாடும்!
ஆடிப் பதினெட்டன்று சப்த கன்னிகைகளை வழிபடுவது புண்ணியம் தரும். `பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி` ஆகிய தேவதைகள் சப்த கன்னிகளாகப் போற்றப் படுகிறார்கள். பல கோயில்களில் சப்த கன்னிகைகளுக்கு சன்னிதிகள் இருக்கின்றன.
சனாதன தர்மம் என்றால் என்ன?
‘சனாதனம்’ என்றால் என்னவென்றே தெரியாமல், அதை ஒழிப்போம் என்று தமிழகத்தில் சிலர் முழங்கி வருகிறார்கள். அவர்களுக்காகவே, மேடைச் சொற்பொழிவாளர், கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவரான திரு. மரபின்மைந்தன் முத்தையா தனது வலைத்தளத்தில் எழுதிய எளிய விளக்கம் இங்கு மீள் பதிவாகிறது....
வள்ளலார் ஒரு சனாதனியே!
வள்ளலாரின் இருநூறாவது ஆண்டு கொண்டாடப்படும் இந்த ஆண்டில், தமிழகத்தில் வள்ளலாருக்கு திராவிட முத்திரை குத்திட அரசாலும், ஆன்மிகத்துக்கு எதிரான சிலராலும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வள்ளலார் என்னும் சூரியனை சிறு குமிழில் அடைக்க முடியாது. ஆயுள் முழுவதும் ஆன்மிக நெறியாளராக வாழ்ந்த வள்ளலார் உண்மையில் சனாதனம் காக்க உதித்த அருட்செல்வரே என்கிறார் எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன்....
அனைவரையும் அறவோர் ஆக்குவோம்!
திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது பொருள் பொதிந்த கட்டுரை இது…
தன்னம்பிக்கை தரும் வேதாந்தம்
மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…
குருவும் ஆசிரியரும்…
காஞ்சிப் பெரியவர் என்றும் பரமாச்சாரியார் என்றும் அழைக்கப்படும் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நமது காலத்தில் வாழ்ந்த மாபெரும் ஞானி. அவரை பிராமணர் சமூகத் தலைவராக மட்டுமே குறுக்கும் போக்கு தேவையற்றது. அவரது அருளுரைகளின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ பல்துறை ஞானக் களஞ்சியம். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே…
வசந்தத்தை வரவேற்கும் புத்தாண்டு!
பூக்கள் பூக்கத் தொடங்கும் இளவேனில் காலத்தைத்தான் வசந்தகாலம் என்று நம் முன்னோர்கள் வரவேற்றனர். இவ்வகையில் வசந்த காலத் தொடக்கமாகிய சித்திரையில் புத்தாண்டும் மலர்கிறது. இந்தச் சித்திரைப் புத்தாண்டு, தமிழர்களுக்கு மாத்திரம் உரியது அல்ல, நாட்டின் பெரும்பாலான பகுதியினருக்கும் சித்திரை முதல் நாளே புத்தாண்டு. ...