ஹிந்து என்பது புதிய பெயரல்ல!

தமிழகத்தில் ஹிந்து சமயம் குறித்த போலி கருத்துருவாக்கங்கள் ஹிந்து எதிரிகளால் தொடர்ந்து புனையப்படுகின்றன. அதற்கு எதிராக, வலுவான சிந்தனைகளை முன்வைப்போரில் திரு. பா.இந்துவன் ஒருவர். இவரது முகநூல் பதிவு இது….

நாவலர் ஞானபரம்பரையில் நன்மாணக்கர்கள்  

நமது தர்மத்திற்கு நெருக்கடி வரும் போதெல்லாம் ஞானபுருஷர் ஒருவர் தோன்றுவார் என்பது ஸ்ருதி வாக்கியம். அதற்கு ஏற்றாற்  போல, யாழ்ப்பாணம் நல்லுாரில் தோன்றிய மகான் தான்  தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் அக்காலத்தில் நடமாடும் மடாலயமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல என்பதே உண்மை. அன்னாருடைய  ஞானப் பரம்பரை யாழ்ப்பாணம் மட்டுமின்றி வழிவழியாக தமிழகமெங்கும் விரவி  இருக்கிறது....

உடலுக்கு உழவாரம்… உள்ளத்திற்கு தேவாரம்!

முன்னோர்கள் உருவாக்கிய கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேதாகமத்தினுடைய சிவ வாக்கு. அவற்றிற்கு சிறு சேதாரம் இல்லாமலும், பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் உழவாரப்பணி அமைப்பினை உருவாக்கி உண்மை சிவநேயர்கள் தொண்டு செய்து வருகிறார்கள். அவர்களது தொண்டு மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி  சமேத ஆலவாய் அண்ணல் திருவருள் புரிவதாகுக.

உள்ளதைச் சொல்ல பயமோ?

காலத்தின் கோலத்தால் வார்த்தை வியாபாரியாக மாறிவிட்ட ஆன்மிக மேடைப் பேச்சாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் வழக்கம் போல சர்ச்சைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார். அவருக்கு, இலக்கிய ஆதாரங்களுடன் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினரான திரு. கருவாபுரிச் சிறுவன்....

காலங்கள் கடந்த கணேசர் (ஆல்பம்)

முழுமுதற்கடவுளாக நம்மால் வணங்கப்படும் விநாயகமூர்த்தி, தேசத்தின் பண்பாட்டு வேராக நம்மை ஒருங்கிணைத்து வருகிறார். காலங்கள் கடந்த, நில எல்லைகள் கடந்த கடவுளான இந்த கணேசரை, விநாயக சதுர்த்தி நன்னாளில், சிற்ப ஒளிப்பதிவுகள் மூலமாக நம்மை தரிசிக்கச் செய்திருக்கிறார், சிற்ப புகைப்படக் கலைஞரான பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ்...

பஞ்ச புராணம் ஓதும் மரபு

தமிழகத்தில் ஓதுவார்கள் இல்லாத  திருக்கோயில்களில் முறைப்படி அவர்களை நிரந்தரமாக  நியமனம் செய்து தமிழ் வளர்க்கப்பட வேண்டும். அவர்களுடைய பணியை  அறிந்துணர்ந்து போற்றிச் செய்ய வேண்டும்;   திருக்கோயிலில் உள்ள ஆன்மிக புத்தக நிலையங்களில் விற்பனையாளர்கள் வேலைகளைச் செய்யவும், அர்ச்சனை டிக்கட் கிழித்துக் கொடுக்கவும் ஓதுவார்களை கட்டாயப்படுத்தக் கூடாது, நிர்பந்தப்படுத்தக் கூடாது. இவற்றை அறநிலையத் துறையினருக்கு வலியுறுத்தி, அவர்கள் இறைவன் திருச்சன்னிதி முன்  விண்ணப்பிக்கும்  திருமுறைகள் அதீத  மகத்துவம் மிகுந்தது என்பதை கோடிட்டுக் காட்ட எழுந்ததே இக்கட்டுரை...

முருகா எனும் நாமம்!

மறைந்த பூஜ்யஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார், தமிழகத்தில் நாத்திகப் பிரசாரம் உச்சத்திலிருந்த தருணத்தில் அதை வென்ற ஆன்மிகப் பேரருளாளர். அவரது இக்கட்டுரை இங்கு காலப்பொருத்தம் கருதி வெளியாகிறது.

திருப்பதி திருமலை பெருமாள் கோயிலே!  

சைவர்கள்- வைணவர்களிடையே பூசலை நிகழ்த்த விரும்பிய சிலரால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளுள் ஒன்று, திருப்பதி கோயில் முற்காலத்தில் முருகன் கோயிலாக இருந்தது என்பதாகும். இன்று சைவமும் வைணவமும் ஹிந்து என்ற பெருமதத்தின் கிளைகளாகிவிட்ட காலத்திலும், அவ்வப்போது இந்தப் பூசல் பெரிதுபடுத்தப்படுகிறது. இதற்கு, தெரிந்தோ தெரியாமலோ சைவர்கள் சிலரும் உணர்ச்சிவசப்பட்டு ஆதரவளித்து விடுகின்றனர். அவர்களுக்காகவே, நமது தொன்மையான தமிழ் இலக்கியங்களின் துணைகொண்டு, இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. பி.பிரகாஷ். ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற நூலின்மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்த இவரது முகநூல் பதிவு, இங்கு மீள்பதிவாகிறது…

மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வேதங்கள்

இன்று குவாண்டம் இயற்பியலில் நாம் காணுபவை புதியவை அல்ல. சில விஷயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை; அடிப்படை தத்துவ தரிசனங்களில் இருந்து முளைத்து வந்தவை. சிந்தனைக்கு/ நினைவுகளுக்கு நிறை உண்டு, பிரபஞ்சம் நிலையானது, பிரபஞ்ச அறிவும் விழிப்புணர்வும் இல்லாமல் உயிர்கள் தோன்றாது என்பனவெல்லாம் பாரதத்தில் அல்லது புராதன இந்தியாவில் தோன்றிய கருத்துகள்.

வடகலை – தென்கலை: வேறுபாடு என்ன?

வழக்கமாக உள்ளது. இந்த மோதலின் பின்னணி என்ன என்று விளக்கும் வகையில்,கோரா தளத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை, நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது…

முழுமுதலோன்

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது முன்னுதாரணம். தொண்டர்களை பலி கொடுத்து சுகம் அனுபவிப்பவன் அல்ல, உண்மைத் தலைவன். தொண்டர்களின் துயருக்காகத் தன்னை ஒப்புக்கொடுக்க முன்வருபவனே தலைவன். அந்த வகையில் சிவனே சிறந்த தலைவன். அதனால்தான் அவரை மூவர் முதல்வன் என்று போற்றுகிறார்கள்.

இருக்கு ஆனா இல்லை

நாம் ஆன்மா, அதனைப் போர்த்தியிருக்கும் ஆடைதான் உடல் என்பதை உணர்வதுதான் ஞானம். இந்த ஆன்மா ‘ஏக இறைவனின் பிரதிபிம்பம்’ என்பதை அறிந்துகொள்வதுதான் பரிபூரண ஞானம்.

தியானங்களும் மந்திரங்களும் (விடுதலைக்கு வழி)

நான் கடவுள், ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

நெல்லிக்காய்க் கதை    

ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக் குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்து கொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.  

இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)

மகாகவி பாரதி ‘கலைகள்’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறோம். நாம் பல யாகசாலைகளுக்குச் சென்றிருக்கிறோம். அங்கு நடக்கும் யாகங்களைக் கண்டிருக்கின்றோம். அங்கு தீயில் ஆஹூதியிட்டு மந்திரங்கள் சொல்லி, பூர்ணாஹூதி செய்து தீபாராதனை முடியும் வரை இருந்து கண்டு மனம் மகிழ்ந்து வருகின்றோம். இங்கு பாரதி ஒரு யாகத்தைச் செய்கிறார். கண்களை மூடி அவர் இங்கு செய்யும் யாகமொன்றை மனக்கண்ணால் காண்கிறீர்கள். யாக குண்டம் வைத்து, அதில் அக்னியை மூட்டி, கணபதியை வணங்கிப் பின்னர் பஞ்ச பூதங்களை வேண்டி, அந்தத் தீயில் தேன் முதலான பண்டங்களை இட்டு மந்திரங்களைச் சொல்லி நடைபெறும் அந்த யாகத்தில் என்ன வேண்டப்படுகிறது. அந்த மந்திரங்களின் பொருள் என்ன? சிந்தனையை ஓட்டுங்கள். பாரதியின் வாசகங்கள் மட்டும் காதில் விழுந்து கொண்டிருக்கட்டும். யாகத்தின் வேண்டுதல் என்ன? நமக்குப் புரியும் பைந்தமிழில்தான் அவனது வேண்டுதல்கள் இருக்கின்றன. அவற்றைப் படியுங்கள். இது குறித்து ஓர் அரிய செய்தி. பாரதி, மகான் அரவிந்தரிடம் ‘ரிக் வேதத்தில்’ பல ஸ்லோகங்களுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டவர் என்றும், ‘ரிக் வேதம்’ பழமையான வேதம் மட்டுமல்லாமல், இயற்கையை வணங்கும் பல ஸ்லோகங்களைக் கொண்டது என்றும் பெரியோர் சொல்வார்கள். ஆனால் கீழ்வரும் வசனங்கள் அந்த ரிக் வேத மந்திரங்களின் கருப்பொருளா என்பது நமக்குத் தெரியவில்லை. - இது பாரதி இலக்கிய பயிலரங்கின் நிறுவனர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் முன்னுரை....