சித்திரையே தமிழர்களின் புத்தாண்டு!

திரு. எஸ்.ராமச்சந்திரன், கல்வெட்டியல் அறிஞர். சென்னையில் இயங்கும் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் நிர்வாகி. சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக தொன்றுதொட்டுக் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்ற திமுக ஆட்சிக் காலத்தில் (2006- 2011) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதனை எதிர்த்த அறிஞர்களின் குரலாக ஒலித்தவர் திரு. எஸ்.ராமச்சந்திரன். ‘காண்டீபம்’ காலாண்டிதழில் இவர் எழுதிய அரிய கட்டுரை இது...