"பொது சிவில் சட்டம் நாட்டுக்கு அவசியம் என்பதால்தான், நமது அரசியல் சாசனத்தில் வழிகாட்டும் நெறிமுறைகள் பிரிவில் அது இடம் பெற்றது. பொது சிவில் சட்டம் அவசியம் என்பதற்கான புரிதலை ஏற்படுத்த வேண்டியது தற்போது மிகவும் முக்கியம். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்பவர்கள் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று சொல்வதை விட சட்டத்தைக் கொண்டுவர முயலும் மத்திய அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை" என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்குமார் சம்பத். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...