கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டதை மானமுள்ள தமிழர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்ப் படைப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் 181 பேரிடம் கையெழுத்துப் பெற்று கூட்டுப் பொதுக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். நல்ல முயற்சி... தமிழுக்கு குரல் கொடுக்க சித்தாந்தங்கள், அரசியல் பிரிவுகளைக் மீறி இத்தனை பேர் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. தமிழ் வாழும்!
Day: March 18, 2026
கீழடி: கிடைத்தது என்ன? நூல் அறிமுகம்
கீழடி தொல்லியல் ஆய்வில் தோற்கவில்லை; தொல்லியல் ஆய்வுதான் கீழடியில் தோற்றுவிட்டது. தமிழக அரசு கீழடியை ஓர் அடையாளப் போர்க்களம் ஆக்கிவிட்டது. கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற பல தளங்கள் ஒரு சங்கடமான உண்மையைக் காட்டுகின்றன. தமிழ் தொல்லியல் ஆய்வில் மண் மௌனமாக இருப்பதால் அது தோல்வி அடையவில்லை. மாறாக மாநில ஆட்சி அதிகாரம் அதன் பேச்சை பாதியிலேயே நிறுத்துகிறது. அதனால்தான் அவை தோல்வி அடைகின்றன.