-கருவாபுரிச் சிறுவன்
ஸ்ரீராமர் திருமாலின் அவதாரம். முருகப் பெருமான் சிவனின் புதல்வன். இவர்கள் இருவரிடையிலான ஒப்புமையை இருபெரும் இலக்கிய நூல்களைக் கொண்டு இங்கு தொகுத்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்…

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால் -கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வார்
தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை அடக்கவும் தெய்வங்கள் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. அவற்றை விரிவாகச் சொல்லும் புராணங்கள் ஏராளம். இருப்பினும், இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவை இரு பெரும் இதிகாச நூற்களில் ஒன்றான ராமாயணமும், புராணங்களில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிற்கு நிகராகத் திகழும் கந்தபுராணமும் ஆகும்.
அவற்றுக்குள் உள்ள ஒற்றுமை தான் என்னென்ன? இதோ…
| பேசப்படும் தெய்வங்கள் | ஸ்ரீ ராமபிரான் | முருகப் பெருமான் |
| உறவின் முறை | மாமன் | மருமகன் |
| ஆயுதம் | வில் | வேல் |
| உற்ற தோழரும் தூதுவரும் | அனுமன் | வீரபாகுத்தேவர் |
| பூஜித்தோர் | குகன் | இந்திராதி தேவர்கள் |
| சிறை வைத்தது | சீதாதேவி | தேவாதி தேவர்கள் |
| காவலர்கள் | லட்சுமணன் | மாகாளன் |
| போருக்கு மூல காரணம் | பெண்ணாசை | பதவி ஆசை |
| போருக்கு துணைக் காரணம் | மூக்கறுபட்ட சூர்ப்பனகை | கையறுபட்ட அஜமுகி |
| எதிராளியின் கோட்டை | இலங்கை | வீரமகேந்திரம் |
| எதிர்வீரர்கள் | ராவணன் | சூரபத்மன் |
| அறிவுரை சொல்லும் மனைவிமார்கள் | மண்டோதரி | பதுமகோமளை |
| நாயகரின் படை | வானரக் கூட்டங்கள் | பூதகணங்கள் |
| பரம்பொருளின் பெருமையை முழுவதும் உணர்ந்தவர்கள் | கும்பகர்ணன் | சிங்க முகன் |
| போர்க்களத்தில் தந்தைக்கு உதவிய மகன்கள் | மேகநாதன் (இந்திரஜித்) | பானுகோபன் |
| நூல் | கம்ப ராமாயணம் | கந்தபுராணம் |
| தோன்றிய ஆண்டு | 12 ஆம் நூற்றாண்டு | 12 ஆம் நூற்றாண்டு |
| ஆசிரியர் | கவிச்சக்கர வர்த்தி கம்பநாட்டாழ்வார் | குமரக்கோட்டம் கச்சியப்ப சிவாச்சாரியார் |
| காண்டங்கள் (பெரும் பிரிவு) | ஆறு | ஆறு |
| படலங்கள் (சிறுபிரிவு) | 113 | 135 |
| பாடல்கள் | 10,589 | 10,348 |
| மூல நூல் | வால்மீகி ராமாயணம் | ஸ்கந்த புராணம் |
| தெய்வீகம் | கம்பத்திலுள்ள நரசிம்மர் தலையசைத்து ஏற்றுக் கொள்வார் | திகடச்சக்கரம் செய்யுளுக்கு முருகப்பெருமானே சிறு குழந்தை வடிவில் வந்து பொருள் சொல்லுவார். |
| நுட்பமாக சொல்லப்படும் செய்தி | வேதாந்தத்தில் சித்தாந்தம் | சித்தாந்தத்தில் வேதாந்தம் |
| மக்களுக்குச் சொல்லும் அறிவுரை | அடுத்தவர் உடமைக்கு ஆசைப்படக் கூடாது | எப்போதும் தலைக்கணம் கூடாது |
| ஏழாவது காண்டத்தை எழுதியவர்கள் | ஒட்டக்கூத்தர் | குகனேரியப்ப நாவலர் |

உலகத்தின் முதலாய் நின்ற
ஒருதனிப் பொருளே போற்றி
கலைகட்கும் உணர ஒண்ணாக்
கருணை வாருதியே போற்றி
மலைவிற்கைப் பெருமான்
கண்ணின் வந்த மாமணியே போற்றி
புலமைக்கும் தலைமையான
புண்ணியா போற்றி போற்றி!
பேரழகுடைய தெய்வப் பிடி
புணர் களிறே போற்றி
கோர வெஞ் சிலைக்கை வேடர்
குலமுய்ய வந்தாய் போற்றி
ஆரமுதனைய எம்மான்
அருளுமான் கணவா போற்றி
சூருடற் குருதி மாறாச் சோதி
வேற் கடம்பா போற்றி!
-வென்றிமாலைக் கவிராயர்
$$$