-பி.ஆர்.மகாதேவன்
பொருள் புதிது- தீபாவளி மலரின் முதல் இதழ்- நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. பி.ஆர்.மகாதேவன் அவர்களின் கவிதை...

நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
ஏனென்றால்
அது தீமை மீதான நன்மையின் வெற்றியைக் கொண்டாடுகிறது.
போலி திராவிட, போலி தமிழ் தேசிய கூட்டத்தையும்
அதன் ஆப்ரஹாமிய எஜமானர்களையும் அழித்து
சநாதனம் பெறவிருக்கும் வெற்றியின்
சங்கொலி முழக்கமாக அது அமையட்டும்.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
ஏனென்றால்
அது நம் அவதார புருஷன் அரக்கர் கும்பலை வதம் செய்து
அயோத்யா திரும்பியதைக் கொண்டாடுகிறது.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
ஏனென்றால்
நம் இன்னொரு அவதார புருஷன்
தன் சம பாதி சக்தியுடன் சேர்ந்து
இன்னொரு அரக்கனைக் கொன்றதைக் கொண்டாடுகிறது.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
ஏனென்றால்
அது நம்மை ஆசிர்வதிக்க பூவுலகுக்கு வந்து போகும் பித்ருக்களுக்கு
வானவில் வரவேற்பாக
இருள் வானில் வழி காட்டக் கொண்டாடப்படுகிறது
நாம் தீபாவளி கொண்டாடுவோம்
ஏனென்றால் அது
பட்டாசுத் தொழிலாளர்களின் குழந்தைகளின் முகத்தில்
மத்தாப்புப் புன்னகையை மலரச் செய்கிறது.
கூடவே
நம் அனைவருடைய பால்ய காலத்தையும்
ஒளி வீசிப் பிரகாசிக்க வைத்தது/வைக்கிறது/வைக்கப் போகிறது.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
ஏனென்றால் அது
அனைத்துத் தொழில் குலங்களையும்
ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்துகிறது.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
ஏனென்றால் அது
பிழைப்பு தேடி பட்டணம் போனவர்களை
சொந்த ஊர் திரும்ப வைக்கிறது.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
ஏனென்றால்
‘சர்வே பவந்து சுஹினக’ என்று
சமூக நன்மைக்காக தெய்வத்திடம் பிரார்த்திப்பவர்களை
‘உண்டக்கட்டி வாங்கித் தின்பவர்கள்’ என்று அவமதித்துவிட்டு
ஓசிச்சோறு தேடி அலையும்
அரக்கர் கூட்டத்தை அது கதறச் செய்கிறது.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
ஏனென்றால்
நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டதால்
நாடு கடத்தப்பட்டு நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட நாயகரை
‘ஷூ நக்கி’ என்று அவதூறு செய்துவிட்டு
ஷூவைத் தவிர மற்றதையெல்லாம் நக்கிய கும்பலை
நம் கொண்டாட்டம் கதறச் செய்கிறது.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
ஏனென்றால்
ஊரையே இழவு வீடாக்கத் துடிக்கும் கும்பல்
ஒரு வீட்டு இழப்புக்குக்
கனத்த மனதுடன் ஓநாய்க் கண்ணீர் சிந்துகிறது.
அரசியல் சதுரங்கத்தில்
பலிகொடுக்கப்பட்ட அப்பாவிகளுக்கு
அடுத்த ஜென்மத்தில் நற்பிறவி கிடைக்க
அகல் விளக்கு ஏந்திப் பிரார்த்திப்போம்.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
கொல்வதற்காகக் கூட்டம் கூட்டியவனும்
கொன்றவனைக் கும்பிட்டுக் காலில் விழும் கும்பலும்
கொன்றவன் தரும் ரத்தக்கறை படிந்த
பரிசுப் பொருட்களை இளித்தபடி வாங்கும் கும்பலும்
கண்ணிய சோகம் காக்கட்டும்.
நாம் கொண்டாடுவோம்!
இந்த மத்தாப்பு வெளிச்சம்
இருளில் மின்னும் வன்மக் கண்களை அடையாளம் காட்டியதற்கு
இனிய நன்றிகளைத் தெரிவித்தபடி,
நாம் கொண்டாடுவோம்!
$$$
One thought on “நாம் தீபாவளி கொண்டாடுவோம்!”