தீபாவளியாம் தீபாவளி!

-சந்திர.பிரவீண்குமார்

பொருள் புதிது- தீபாவளி மலரின் ஐந்தாம் இதழ்,  குழந்தை எழுத்தாளர் திரு. சந்திர பிரவீண்குமார் அவர்களின் பாடல்…

தீபாவளியாம் தீபாவளி!
குதூகலமான தீபாவளி!
வண்ண வண்ண ஆடைகளால்
மகிழ்விக்கும் தீபாவளி!

வாய் நிறைந்த இனிப்புகளால்
தித்திக்கும் தீபாவளி
உறவினரும் நண்பருமாய்
ஒன்று சேரும் தீபாவளி!

புத்தம் புது பட்டாசுகளை
கொளுத்தி மகிழும் தீபாவளி
பிஜிலி முதல் ராக்கெட் வரை
வெடித்து சிரிக்கும் தீபாவளி

பாதுகாப்பாய் கொண்டாடினால்
என்றும் இனிக்கும் தீபாவளி
மற்றவருக்கும் உதவிகள் புரிந்தால்
நினைவில் நிற்கும் தீபாவளி!

$$$

One thought on “தீபாவளியாம் தீபாவளி!

Leave a comment