-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #80...

80. வருத்தப்படாத திராவிட வாலிப வயோதிகர் சங்கம்
ஈ.வெ.ரா, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தலித், பாஜகன்னு
நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது.
கேட்டுப் பாரு ஊர்ல.…
எம்புட்டு அடிச்சாலும் ஓடினதே கிடையாது.
போன மாசம் திஹாருக்குக் கூட்டிட்டிப் போறேன்னு சொன்னீங்க வரவே இல்லை.
என்று இ.டி. கூட தோள்ல கைபோட்டு பேசற அளவுக்கு க்ளோஸ் நாங்க.
பேண்ட்ல உச்சா போனாலும்
ஃபேஸை வெறப்பா வெச்சிப்போம்….
நாம அடிச்ச அடிக்கு கடையை மூடிட்டு ஊரைப் பார்க்க ஓடினா
நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்னு அர்த்தம்.
அருவாளை எடுத்துட்டு அவன் நம்மள அடிக்க வந்தானா
ஆயுசுக்கும் நாம அவனுக்கு அடிமைன்னு அர்த்தம்.
இப்ப அவன் வாரானா… போறானா பாரு என்று
சலம்பல்விட்டு விட்டு சந்துக்குள் ஒளிந்து நிற்கும்
புறா நானூற்று வீரப் பரம்பரை நாங்கள்…
மிசா காலத்துல கைது பண்ணி நொங்கெடுத்தா
மீசயில மண் ஒட்டாம கால்ல விழுந்து
திராவிட நாடு தேடும் தீரம் மிக்கவர்கள் நாங்கள்…
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தப்ப
கால் குடைச்சலா இருந்தா நேரா
அதிமுககாரன் யார் கிட்டயாவது வம்பு இழுத்தா போதும்.
கட்டையை எடுத்து காலுக்குக் கீழயே அடிப்பானுங்க.
கால் வலியெல்லாம் போயிடும்….
வவுத்து வலி எதுனா இருந்தா
சோஷியல் மீடியால எதுனா போஸ்ட் போட்டா போதும்,
குப்புறப் போட்டு வவுத்துலயே மிதிப்பானுங்க.
வயத்துல இருக்கறதெல்லாம் பிதுங்கிரும்.
ஆனா ஃபேஸ் ஃப்ரெஸ் ஆகிடும்….
சங்கி கும்பல் அடிக்கறதெல்லாம்
மசாஜ் பண்ற மாதிரியே இருக்கும்.
டி.வி. டிபேட்ல அவனுங்க அடிக்கற அடியெல்லாம்
வெளக்க மாத்தால ஒத்தடம் கொடுக்கற மாதிரியே இருக்கும்.
செல் போனை நோண்டிக்கிட்டே
சிரிச்சமானிக்கு கெத்தா வாங்கிப்போம்…
நீதிபதிகள் ஊமைத் குத்தா குத்தறதெல்லாம்
‘உடம்பக் கல்லாக்கிக்கடா கந்த மாறா’ன்னு
குனிஞ்சி நின்று வாங்கிப்போம்.
ஆனால்,
தமிழ் தேசிய கும்பல் கிட்ட மட்டும் வெச்சுக்கிடக் கூடாதுப்பா,
வாய்லயே வெட்டுறானுங்க!
இப்போ புதுசா ஒரு க்ரூப் கெளம்பியிருக்கானுங்க.
ஒரு வாரம் வெச்சிருந்து அடிச்சது பத்தாதுன்னு
புள்ள குட்டிகளையெல்லாம் அடிச்சுப் பழகிக்கோன்னு சொல்றானுங்க…
யூஸ்….. யூயூயூஸ்!
தெய்வமே…. மத்திய அரசே…
நீ வான்னு சொன்னா உன் கால்ல வந்து விழுவேனே
புதுசு புதுசா ஆள் அனுப்பி அடிக்கணுமா?
கண்ணாடி மாட்டலைன்னா பச்சப் புள்ளை மாதிரி இருக்கா
கண்ணாடி மாட்டினதும் டெரரா இருக்கா…
ஹைய்யோ ஹைய்யோ…
இந்த ஊரு எங்களை இன்னும் நம்புதுன்னா
அதோட விதி.
உள்ளுக்குள்ள பல ரூபங்கள் திரியுது.
அவுத்துவிட்டா உலகம் தாங்காதுன்னு
உள்ளுக்குள்ள ஒரு ஓரமாக படுக்கப் போட்டிருக்கோம்.
இந்த கூழைக்கும்பிடு முகமும்
வரைந்த அந்த சிக்ஸ்பேக் உடம்பும் சேர்ந்தால் போதும்
வருங்கால சந்ததிக்கு நாங்கள் வாங்கிய அடியா தெரியப்போகிறது?
இதைத்தான் நாங்கள்
100 வருடங்களாக
‘பில்டிங் ஸ்ட்ராங்… பேஸ்மெண்ட் வீக்’ என்று
உருட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த அட்டைப் பெட்டியையா
இத்தனை வருஷமா செதுக்கிட்டிருந்தன்னு
கெழவியெல்லாம் தூக்கிப் போடறதுக்குள்ள
நாங்களே
துபாய் குறுக்குச் சந்து
துபாய் பஸ்டேண்ட் அருகில்
தெரிஞ்ச தொழில் செஞ்சு பொழைச்சுக்கறோம்
பொத்தினாப்பில பேக் பண்ணி அனுப்பி வெச்சிடுங்க எஜமான்…
எவ்வளவு காலம்தான்
எம்புட்டு அடிவாங்கினாலும்
வலிக்காத மாதிரியே நடிக்கறது?
$$$