எத்தனை இராமாயணங்கள்!

-கருவாபுரிச் சிறுவன்

ராமாயணம் பாரத மண்ணின் காவியம். ஆதிகவி வால்மீகி இதனை இயற்றியிருந்தாலும், நாட்டின் ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கவிஞரும் தமது பாணியில் இதனை இயற்றி நமது பண்பாட்டை வளர்த்திருக்கிறார்கள். அதுகுறித்து இங்கே காண்போம்…

வேத நூல் சாத்திரங்கள், வேள்விகள் 
  எல்லாம் ராம
நாதனே பிறிதொன்றில்லை நம்பனை 
  அவனைத் தானே 
ஆதரவதனால் போற்றி அடிதொழல்
  வேண்டும் அன்னோன் 
தாதவிழ் சரோருகப்பூஞ் சரணமே
  சரணம் ஆனோர். 

    -நிரம்பிய அழகிய தேசிகர்  

நமது இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்திற்கும், சைவர்களின் முக்கண்புராணங்களில் ஒன்றான கந்தபுராணத்திற்கும் மாபெரும் ஒற்றுமையுண்டு என திருநெல்வேலியைச் சார்ந்த இலக்கிய செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள் எழுதிய  ‘வேலும் வில்லும்’ என்ற நுால் சான்று பகரும். இந்நூல் சாகித்திய அகடாமி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கந்த புராண மாந்தர்களில் ஒருவரான  சூரபத்மனுக்கு  போர்க்களக்காட்சியில் ஓரிடத்தில் முருகப் பெருமானின் விஸ்வ ரூப தரிசனம் கிடைக்கும்.  அப்பேற்றினைப் பெற்ற அவன், 108 சதுர் யுகங்களாக ஆண்ட அவனது ஆயிரத்தெட்டு அண்டமும் முருகப்பெருமானின் கெண்டைக்கால் மயிற்றில் தொங்குவதைப் பார்த்து வெட்கித் தலைகுனிந்து விடுவான்.   

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா… வீரவேல் முருகனுக்கு அரோகரா… 

அப்போது சூரபத்மனின்  உள்ளத்தில் தோன்றியதை குமரக்கோட்டம் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அழகுத்தமிழலில் நாம் அறிந்து கொள்ளும் பொருட்டு பாடிய பாடல்  இதோ… 

சூழுதல் வேண்டும் தாள்கள்: தொழுதிடல்  
  வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டும் சென்னி: துதித்திடல் 
  வேண்டும் தாலு
ஆழுதல் வேண்டும் தீமை அகன்று நான்
  இவற்கு ஆளாகி 
வாழுதல் வேண்டும் நெஞ்சம்: தடுத்தது 
  மானம் ஒன்றே! 

     -கந்த புராணம் - சூரபத்மன் வதை படலம்: 444 

***

இதைப்போலவே இப்பாரத தேசத்தின் பல யுகங்களாக விருட்சமாய் விரிந்து இருக்கும் ஹிந்து மதத்தின் விஸ்வ ரூப தரிசனங்களை நாத்திக கட்சிகள் அங்காங்கே தரிசிக்க ஆரம்பித்து விட்டன. அதனால் அவர்கள், கசடறக் கற்றவர்களாக இருந்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி மதி மயங்கி தன் கதியின் நிலையறிந்து, கிடைக்கும் மேடைகளில் உச்சகட்டமாக, ஹிந்து மதத்தினை போக்கிற போக்கில் இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள். அல்லது ஹிந்து மதத்தின் தர்மச்செயல்களை தன் செயல்பாடுகளில் போர்த்திக் கொண்டு குளிர் காய்கிறார்கள். 

இவர்கள் யாவரே ஆயினும் செய்த, செய்கின்ற செயலுக்கு வருந்தி, திருந்தி, ஹிந்து மதத்திலுள்ள ஏதேனும் ஒரு உட்பிரிவில் பொருந்தி மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வாழ்ந்தால் முருகப்பெருமான் சூரபத்மனுக்கு கொடுத்த பெருவாழ்வினைப் போல இவர்களுக்கு ஹிந்து மதம் வழங்கும் என்பது தீர்க்க தரிசனமான உண்மையாகும்.  

ஆழ்வார் சொல்லும் அருளுரை 

கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!

      -திருவாய்மொழி

என நம்மையெல்லாம் ஆளும் நம்மாழ்வார் சொல்லும் திருவாய்மொழியை சிரத்திலும் சிந்தையிலும் கொண்டு, ராமபிரான் வாழ்ந்த காலத்தில் இருந்தே, அவரின் அருளாளுமையை, நல்லாட்சியைப்  போற்றித் துதிக்கும் பல்வேறு நூல்கள் எழுந்துள்ளன. 

அவை யாவும் ஸ்ரீ ராமபிரான் வழியை அப்படியே பின்பற்றி இறவாத புகழினை அடைந்துள்ளன. 

அப்படிப்பட்ட திருநூல்கள் என்னென்ன என்பதை நம் சிற்றறிவு கொண்டு அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

 மனித குல வாழ்வில்  மதம், இனம், மொழி சமயம், தத்துவம் கடந்து இந்த அகண்ட பாரதத்தில் சிறந்த திருநூலாகக் கருதப்படுவது  ராமாயணமே என்றால் அது மிகையல்ல… அதுவும் தென்னிந்தியாவில் இராமாயணம் இத்தனை படைப்புகளாக காலத்தால் வெளிவந்து இன்றும் செல்வாக்கோடு திகழ்கிறது என்றால் அதற்கு காரணம் ராமபிரானின் நற்பண்பு தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா?

வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமகாதை பின்னாளில் பல மொழிகளில் பலராலும் இயற்றப்பட்டது. நாடெங்கிலும் ஒழுக்கமும் நீதியும், நேர்மையும் கற்புத்திறனும், கண்ணியமும் மக்களுக்கு போதிக்கப்பட்டன. அதனால் தான் அது இன்றுவரை தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொண்டு தேசிய காவியமாக மிளிர்கிறது ராமாயணம். அத்தகைய நூல்கள் காலந்தோறும் எழுந்துள்ளன. அவற்றைப் பற்றி  அறிந்து கொள்வதே இச்சிந்தனையின் முக்கிய குறிக்கோளாகும். 

ராம ராம ராம ராம ராம ராம….

இராமாயணம் பற்றிய குறிப்புடைய வடமொழியில் எழுந்த நூற்கள்: 

1. ஸ்காந்த புராணம்
2. சிவமகா புராணம்
3. மத்ஸ்சய புராணம் 
4. கூர்ம புராணம்
5. பத்ம புராணம்
6. செள புராணம்  
7. நாரதீய புராணம் 

தமிழில் இடம்பெற்ற ராமாயணத் திருநூற்கள்: 

1. கம்ப ராமாயணம்
2. சேது புராணம் – நிரம்பழகிய தேசிகர் 
3. ராமகாதை என்னும் ராமாயணம் – கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வார்
4. ராமாயணம் உத்தரகாண்டம் – ஒட்டக்கூத்தர்
5. ராமாயண வெண்பா 
6. காகுத்தன் கதை 
7. தந்தை ராமாயணம் 
8. அமிர்த ராமாயணம்
9. குயில் ராமாயணம் 
10. ராமாயண சூடாமணி 
11. ராமாயண அகவல் – நாராயண சாமி ஐயர் 
12. பாலர் ராமாயணம்- ஐயாசாமி
13. காகுத்தன் கதை – குண ஆதித்தன் 
14. இராமாயணம் – மதுரகவி சினீவாச ஐயங்கார்
15. இராமநாத திருப்பதிகம் – வடலுார் ராமலிங்க சுவாமிகள் 
16. இராமகாவியம் – ராமசாமி ஐயர் 
17. இராமாயணத் திருப்புகழ் – அரங்கசாமி செட்டியார்
18. இலங்கைப் பரணி – நா. கனகராஜ ஐயர்
19. இராமாயணக் கீர்த்தனைகள் – வேம்பு அம்மாள்
20. ராமாயணக் கீர்த்தனைகள் – முத்துசாமிக் கவிராயர் 
21. ராமாயணக் கீர்த்தனைகள் – ராஜசேகர முதலியார்
22. இராமோதண்டம் – குமாரசாமி புலவர் 
23. இராமாயணச்சிந்து – வைத்தியலிங்க ரெட்டியார்
24. இராமாயணக் கப்பல் சிந்து – திருமலைசாமி ஐயங்கார்
25. இராமாயணக்கும்மி- இராமசாமி கவிராயர் 
26. இராமாயணக் கும்மி – வெங்கடராம ஐயர்
27. இராவணன் கும்மி – சிறுமணவூர் முனியசாமி முதலியார் 
28. இராமாயணக்கும்மி – தச்சநல்லுார் அழகிய சொக்கநாதபிள்ளை
29. இராமாயணக் கும்மி – முருகதாசசாமி 
30. இராமாயணக் கும்மி – சடகோப ஐயங்கார்
31. ராமர் சிங்காரச்சிந்து – தியாகப்ப தாசர்
32. இராமர் தலாட்டு – இராமலிங்கம் பிள்ளை 
33. இராமர் வனவாசம் – இராமலிங்கம் பிள்ளை 
34. இராமர் தலாட்டு – நாராயணசாமி பிள்ளை 
35. இராமர் திருவடி மாலை – மகாவித்வான் இரா.இராகவ ஐயங்கார்
36. ஸ்ரீ ராமர் கெளத்துபம் – ஆசிரியர் யார் என தெரியவில்லை. 
37. உத்ர ராமாயணக் கீர்த்தனம் – அனந்த பாரதி
38. ஜைன ராமாயணம்

நாடக வடிவிலுள்ள தமிழ் நூல்கள்:

1. உத்தர ராம சரிதம் (1878)
2. சீதா கல்யாணம் (1889)
3. பாதுகா பட்டாபிஷேகம் (1889)
4. இராவண சம்காரம் (1899) 
5. சதமுக ராவணன் சண்டை – சிங்கவனத்தார் பாரதி 
6. சேது யாத்திரை நாடகம் – சிங்கவனத்தார் பாரதி 
7. சம்பூர்ண ராமாயணம் – நாகை சண்முகம் பிள்ளை 

இந்த நாடகங்கள் எல்லாம் தெருக்கூத்துக்களாக நடிக்கப்பட்டவை;  மக்கள் கலைஞர்கள் பலர் இன்னும் சோழ மண்டலத்திலும், தொண்டை மண்டலத்திலும் இவற்றை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் எஸ். எம். காமல் அவர்கள். 

சுவடிகளாக உள்ள நூல்கள்:

1. சங்கிரக ராமாயணம்
2. ராமவதாரதி கால நிர்ணயம்
3. இராமாயணத் திருப்புகழ்
4. தசரத இராம சதகம்
5. கோதண்ட ராம சதகம் 
6. அனுமார் பிள்ளைத்தமிழ் 
7. தசரத ராம சதகம் 

தெலுங்கு மொழியில் இராமாயணம்:

1. ராமாயணம் – சிந்தண்ணா (14வது நூற்றாண்டு)
2. ராகவாய்யுதம் – நன்னையா  (14வது நூற்றாண்டு)
3. ரங்கநாத ராமாயணம் – கோணபுத்தி ரெட்டி 
4. பாஸ்கர ராமாயணம்  
5. ஆனந்த ராமாயணம்   
6. அத்யாத்ம ராமாயணம்  
7. ராமாயணம்  
8. ராமாயணம் – கொரவி. சத்ய நாராயண
9. சகல வர்ணணா பூர்ண ராமாயணம் – ஆனந்த கனி 
10. ராமாயணம் – தாளபக்க அன்னமாச்சார்யா (15வது நூற்றாண்டு)
11. ராமாப்யுதயுமு – ராமபத்ரகவி (16வது நூற்றாண்டு)
12. ராமாயணம் – பெண்கவி மொள்ளா  (16வது நூற்றாண்டு)
13. ராமாயணம் – கட்டவரதராஜூ (17வது நூற்றாண்டு)
14. ராமாயணம் – அய்யாராஜு ராமபத்ருமு  (16வது நூற்றாண்டு)
15. அச்சதெலுகு ராமாயணம் – குச்சி மஞ்சி திம்மகவி  (17வது நூற்றாண்டு)
16. ராமாயணம் – தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கர்
17. ராமாயணம் – அனந்த ராஜூ கண்ணையா
18. ராமாயணம் – மிக்கினி மல்லிகார்ஜூனமு
19. ராமாயணம் – பேல ரகோஜ்  (18வது நூற்றாண்டு)
20. சதகண்ட ராமாயணம்   
21. அற்புத ராமாயணம்
22. விசித்திர ராமாயணம்  
23. சீதாராம சரித்திரம் – மந்திரி பிரதம சூர்யம்
24. ராமாயணம் – பிரகாச கவி (19வது நூற்றாண்டு)
25. ராகவ பாண்ட காவியம் பிங்கனி சூர்னா (19வது நூற்றாண்டு)
26. சிவராமாயயுதயம் ரபாதுரி பெத்தராம மத்தயா 
27. ராகவ யாதவ பாண்டவயம் – நெல்லுார் வீரராகவாச்சாரி 
28. தாசரதி சதகம் – பத்ராசலம் ராமதாசா
29. பிரச்சனராகவ சதகம் – வங்கு முட்டு தரங்கவி 
30. ஜானகி சதகம்
31. ஜானகி வம்சம்
32. ஒண்டிமெட்ட ரகுவீர சதகம் 
33. ரகுபதி சதகம்
34. ரகு புங்கவ சதகம்
35. ரகு நாயக சதகம்
36. ரகுராம சதகம்
37. ராகவ சதகம் 
38. ராமச்சந்திர சரித்திர சதகம்
39. ராமரக்ஷா சதகம்
40. ராமச்சந்திர பிரபு சதகம்
41. ராமதாரக சதகம்
42. ராம சதகம்
43. தர்மபுரி ராமாயணம் ஷோபதாஸ்
44. ஜானகி கல்யாணம் – கிருமுரி விஜயராக நாயக்கர்
45. சேது மகாத்யமு
46. இராமேசுவர மகாத்யமு
47. இராமேசுவர விஜயமு
48. இராமலிங்கேஸ்வர சதகமு
49. விருத்தாந்தமு இராமேசுவர ஷேத்ர மகாத்யமு
50. இராமாயண கீர்த்தனை 
51. வஷஷ்ட இராமாயணம்

கன்னட மொழியில் இராமாயணம்: 

1. பம்ப இராமாயணம்
2. குமுதேந்து இராமாயணம் (13வது நூற்றாண்டு) 
3. ராமகதாவதார தே சந்திரா (13வது நூற்றாண்டு)
4.தொரவே இராமாயணம் – குமாரவால்மீகி தொரவே (16வது நூற்றாண்டு)
5. இராமாயணம் – லட்சுமணன்
6. இராமாயணம் – சாபவர்
7. இராமாயணம் – சுகுமார் (17 வது நூற்றாண்டு)
8. உத்திர ராமாயணம் – யோகேந்திரா (17 வது நூற்றாண்டு
10. சீதா பரித்தியாகம் – லட்சுமி மீசன் (17 வது நூற்றாண்டு)
11. ராமச்சந்திர சரிதே – சந்திரசேகர் (17 வது நூற்றாண்டு)
12. ராமப்யுதய – திம்மாத்யா (18 வது நூற்றாண்டு)
13. ராமச்சந்திர சரிதா சத்நாபா (10வது நூற்றாண்டு)
14. ஆனந்த ராமாயணம் – திம்மரயா (18 வது நூற்றாண்டு)
15. ஸ்ரீ ராமஸ்வத மேகம் 
16. உத்தர ராம சரிதம்  – பசவப்ப சாஸ்திரி 
17. உத்தர ராம சரிதம் – முப்பாகிலு 
18. உத்தர ராம சரிதம் – தொண்டு நரசிம்ம 
19. ஸ்ரீ ராம சரிதம் – சோலை ராமச்சந்திரா
20. ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் – நந்தாரிகை லட்சுமி நரசப்பா

மலையாள மொழியில் இராமாயணம்:

1. உத்திர ராம சங்கிரஹம் (14வது நூற்றாண்டு)
2. இராமாயண சம்சேஷபம் 
3. இராம சரிதம் 
4. இராம கதாப்பாட்டு  – அய்யாப்பிள்ளை ஆசான் (15வது நூற்றாண்டு)
5, இராமாயணச் சம்பு – பணம் நம்பூத்ரி (16வது நூற்றாண்டு)
6.கண்ணாச ராமாயணம் – எழுத்தச்சன் 
7. அத்யாத்ம ராமாயணம் – எழுத்தச்சன்
8. உத்தர ராமாயணம் 
9. ஸ்ரீ இராமேஸ்வரம் கிளிப்பாட்டு
10. இராமாயண கிளிப்பாட்டு 
11. புத்திர காமேஷ்டி கிளிப்பாட்டு 
12. உத்ர ராமாயண கத்யம்
13. இராமாயணக் கீர்த்தனை
14. இராமாயண விருத்தம் 
15. சேதுபந்தனம் பாட்டு கதகளி (நடனம்) 
16. ராமாயணம் – ராமவர்மா
17. ராமன் ஆட்டம் – கொட்டாரக்கரா தம்பிரான் 
18. சண்முக ராமாயணம் – கடத்தநாடு தம்பிரான் துள்ளல் 
19. ராகவியயம் மகா காவ்யம் குஞ்சன் நம்பி 
20. ஸீதா ராகவ நாடகம் 
21. யங்கா மந்தனம் 
22. ராவண வதம் 
23. பாதாள இராமாயணம் 
24. ராமாயண சதகம் – தேவராஜ பட்டன் 
25. சுந்தர காண்டம் – கொங்கி ராமவர்மா
26. ராகவா விஜயம் – கிளிமாவர் கோவிந்த தம்பிரான்
27. உத்தர ராம சரிதம் – காத்துக்குட்டி மன்றாடியார்
28. ஜானகி பரிணயம் – காத்துக்குட்டி மன்றாடியார்
29. ரகுவீர விஜயம் – வடக்கூர் ராஜா
30. ராகவாப்புதயம் – வடக்கூர் ராஜா
31. ராமச்சந்திரா – அழகத்து பத்மனாத குருப் (20வது நூற்றாண்டு)
32. இராமாயணம் மகாகவி வள்ளத்தோள் (20வது நூற்றாண்டு) 
33. கொச்சுசீதா – மகாகவி வள்ளத்தோள்.

(கிடைத்த பட்டியலைத் தொகுத்து தங்களது பார்வைக்கு வழங்கியுள்ளோம். இப்பட்டியலே  முடிவன்று).

$$$

Leave a comment