குறிஞ்சி மலர்- சிறப்புரையும் முன்னுரையும்

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. அதற்கு மு.வ. எழுதிய சிறப்புரையையும், நா.பா. எழுதிய முன்னுரையையும் இன்று நீங்கள் படிக்கிறீர்கள். புதினத்தையும் வரும் நாட்களில் தொடர்ந்து படிக்கப் போகிறீர்கள்...