-ஆர்.ஆர்.கோபால்ஜி, டாக்டர் சந்தோஷ்குமார்முத்து, சுந்தர்ராஜ சோழன், பி.ஆர்.மகாதேவன், கருவாபுரிச் சிறுவன்
சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது மூன்றாம் பகுதி…

11. Vairamuthu’s Blasphemy is Stab at the Heart of Hindu Dharma.
-Dr. Santhoshkumar Muthu
A furious storm of righteous anger is steeping due to the venomous remarks by lyricist Vairamuthu. His latest outburst—claiming Lord Sree Ram “Lost his mind” after being separated from Sita and acting with the intellect of a madman—is not just an insulting the lord Ram. It is a calculated, offensive act of violation against the faith of millions of Hindus. There is no room for nuanced debate or polite disagreement here. This isn’t about the freedom of speech; it’s about a man’s disgusting pattern of narrow-mindedness, and it demands furious condemnation.
Perhaps the most central and encompassing value of Lord Ram is Dharma—righteousness and duty consciousness. Lord Ram consistently gave importance to moral principles over personal comfort or gain. From willingly accepting a 14 years “Vanavasam” to honour his father’s promise to Bharathan’s mother, even when it meant sacrificing his rightful throne, to tirelessly working for the welfare of his people as a king, Ram demonstrated steadfast commitment to his responsibilities.
Vairamuthu’s attempt to justify his insult by twisting the Kamba Ramayanam is an act of intellectual dishonesty so shameless it makes our blood boil. He dares to present the slaying of Vaali as an act of a unbalanced mind, as if the Lord of Dharma, was a madman devoid of reason. This can not be considered as a scholarly interpretation; it’s a filthy, and hateful lie.
Lord Ram is revered as Maryada Purushottam—the ideal man who upheld the highest principles of honour, duty, and justice. To insinuate that he acted in a state of insanity is to spit on every value he represents. It is to desecrate the very foundation of a spiritual belief system that has guided generations. Vairamuthu is not a poet engaging in literary criticism. He uses his writing to wound and humiliate the faith of Hindus.
Let’s not pretend this is an isolated mistake. Vairamuthu has a history of spewing venom against Hindu deities and saints that is as long as it is disgusting. Years ago, he had the gall to refer to the revered Vaishnavite saint-poet Andal as a “devadasi,” a term loaded with historical stigma and disrespect. This isn’t a one-off “mistake”; it is a consistent and disgusting display of contempt for Hindu faith. The man has a clear, deep-seated hatred for hindu dharma that he can’t seem to contain, and he uses his public platform to express it time and again.
Every time he insults Hindu Dharma, he hides behind a flimsy apology or a pseudo-intellectual defence, only to strike again when the opportunity comes up. His apologies are worthless, a mere strategic retreat before the next attack. He has shown time and again that he has no respect for the sentiments of Hindus, and his words are an endless stream of provocation.
The silence from the political establishment in Tamil Nadu is a cowardness. While the Nationalistic and Patriotic political parties have rightfully and forcefully condemned his remarks, the other political parties “so called secular parties” remainsilent, proving their cowardice and their tacit approval of this bigotry. Their silence is to cheat the people they are meant to represent. This sends a message that insulting Hindu gods is acceptable, and their devotees are left unsupported.
Vairamuthu’s statements are an unforgivable insult, a stab in the back of every Hindu who holds Lord Ram in their soul and heart. He has crossed a line he can never uncross. This is not a matter for debate. It is a matter of profound disrespect and religious hatred on Hindu Faith. He deserves not a polite rebuttal, but a tsunami of public fury that makes it impossible for him to ever utter such filthy words again. This must be the final straw. He needs to be held accountable, and political leaders must bravely oppose his hateful remarks.
- Dr. Santhoshkumar Muthu, is an Educational Activist, Coimbatore; South Zone Coordinator (Kerala & Tamil Nadu), Shiksha Sanskriti Utthan Nyas
$$$
12. ராமபிரான் குணங்களைப் படிப்போம்!
-ஆர்.ஆர்.கோபால்ஜி
சென்னை கம்பன் கழக விழாவில், ராமபிரானைப் பற்றி வைரமுத்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
‘வாலியை மறைந்திருந்து கொன்றதன் மூலம், ராமபிரான் குற்றவாளி’ என்று வால்மீகியே ஏற்றுக் கொள்கிறார். ஆனால், கம்பனோ, அந்த குற்றச்சாட்டில் இருந்து ராமனை காப்பாற்றி இருக்கிறார். ராமன், வாலியைக் கொன்றபோது புத்தி பேதலித்துப்போய் இருந்தான் என்று சொல்லி, புத்திசுவாதீனம் இல்லாத ஒருவர் செய்த கொலை குற்றமாகாது என்ற அடிப்படையில் ராமன் குற்றவாளி அல்ல என்று கம்பன் காப்பாற்றி இருக்கிறார் என்று வைரமுத்து பேசியிருக்கிறார்.
இதற்கு, ‘அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னும் திகைத்தனை போலும் செய்கை’ என்ற கம்பனின் வரியைப் பயன்படுத்தி இருக்கிறார்.
வைரமுத்து போன்றவர்கள் அப்படிப் பேசுவதில் ஆச்சர்யமில்லை. இதே கம்பன் கழகம் சார்பிலேயே இதற்கு முன்பும், இதே வாலி வதை விவகாரத்தை முன்வைத்து, ‘வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது சரியா, தவறா?’ என ஏகப்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி இருக்கிறார்கள். அதில் கம்பனின், அதே வரிகள் மேடைக்கு மேடை முழங்கப்பட்டிருக்கிறது.
கம்பனை, கம்பனின் காப்பியப் படைப்பாற்றலை சிலாகிக்கிறோம் என்ற பெயரில் ராமனை இழிவுபடுத்துவதும், ராவணனைத் தூக்கிப் பிடிப்பதும் இங்கே காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.
அவர்கள் யாருக்கும் அதே கம்பன், ராமனைப் புகழ்ந்து பாடிய வரிகள் தப்பித்தவறிக் கூட கண்ணில் படுவதில்லை. எந்த வாலியின் வாயால், ‘திகைத்தனை போலும் செய்கை’ என்று கம்பன் பாடினானோ, அதே கம்பன், அதே வாலியின் வாயால், அடுத்த சில பாடல்களில், ‘மன்னவர்க்கு அரசன் மைந்த! மற்று இவன் சுற்றத்தோடும் உன் அடைக்கலம்’ என்று, ‘தனது மகன் அங்கதனையும், தம்பி சுக்ரீவனையும் அவர்களோடு சேர்ந்த சுற்றத்தையும் ராமனிடம் அடைக்கலமாக ஒப்படைத்தான்’ என்ற வரிகள் கண்ணில் படுவதே இல்லை. புத்திசுவாதீனம் இல்லாத ராமனிடம், தனது மகனையும், தம்பியையும் ஒட்டுமொத்த வானர இனத்தையும் வாலி எப்படி அடைக்கலமாகக் கொடுத்தான் என்று இவர்கள் யோசிப்பதில்லை.
“ஒரு பெரிய பாற்கடலை முற்றிலும் குடித்துவிட வேண்டும் என்று ஒரு பூனை ஆசைப்பட்டதைப்போல, ராமபிரானின் கல்யாண குணங்களை எல்லாம் பாடி முடித்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் இந்த ராம காவியத்தை எழுதுகிறேன்” என்று சொல்லி, கம்ப ராமாயணத்தை எழுதத் தொடங்கிய கம்பன், ராமனை குற்றவாளியாக நிறுத்த துணிவானா என்று ஒருபோதும் சிந்திப்பதில்லை.
காரணம், இவர்களின் பார்வையில் இருக்கும் பழுது. ஒன்றைப் படிக்கும்போது, அதை எழுதியவன், எந்தக் கண்ணோட்டத்தில் எழுதினான் என்ற நிலையில் இருந்து அந்த வார்த்தைகளை அணுகாமல், அந்த வார்த்தைக்கு தனக்குத் தெரிந்த அர்த்தத்தைப் பிடித்துக் கொண்டு வியாக்யானம் செய்யும் மட்டமான ரசனை இங்கே பலகாலமாக இருக்கிறது. அதன்மூலம், ராவணன் எனது முன்னோர் என்று பெருமை பேசும், ராமபிரானை சிறுமை செய்து மகிழும் மனக்கிலேசம் இங்கே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
அது தகர்க்கப்பட வேண்டும். அதற்கு, கம்பனை, தமிழால் கம்பன் பாடிப் பரவசப்பட்ட ராமபிரானின் கல்யாண குணங்களை நம்வீட்டு குழந்தைகளுக்கு, எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து நல்ல ரசனையுடன் பழக்கப்படுத்தும் வேள்வி தொடங்க வேண்டும்.
இறைவன் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து, இறைவனைப் பற்றி பாடப்பட்ட காவியங்களைப் பேச அழைப்பதை ஆழ்வார் ஆய்வு மையம், கம்பன் கழகம் போன்ற அமைப்புகள் நிறுத்த வேண்டும்.
அதற்கு முன், இந்து துவேஷம் நிறுத்தப்பட வேண்டும். ஒருவரின் கடவுளை, வழிபாட்டு முறையை, மத நம்பிக்கையை இழிவுபடுத்துவது சட்டப்படி குற்றம். அதன்படி வைரமுத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, ‘நாம் தாக்கப்பட்டால், புண்படுத்தப்பட்டால், நமக்கு சட்டப் பாதுகாப்பும் நீதியும் கிடைக்கும்’ என்ற நம்பிக்கையை இந்து சமூகத்துக்கு உருவாக்க வேண்டியதும், இந்து விரோதப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தமிழக அரசின் கடமை.
- திரு. ஆர்.ஆர்.கோபால்ஜி, தினமலர் நாளிதழின் (வேலூர், திருச்சி) ஆசிரியர். விஸ்வ ஹிந்து பரிஷத்- தமிழ்நாடு அமைப்பின் மாநிலத் தலைவர்.
$$$
13. வசதிக்கேற்பத் திரிக்கும் பதர்கள்
-சுந்தர்ராஜசோழன்
வாலி வதைப்படலத்தில் ஸ்ரீராமன் எப்பேற்பட்ட கருணாமூர்த்தி என்றும், வாலிக்கு பிரான் தந்தது மோட்சம் என்றுமே கம்பனால் எடுத்தியம்பப்பட்டுள்ளது. ஒரே ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு அதை வசதிக்கு ஏற்பத் திரித்து, தங்களின் சொந்தக் காழ்ப்பை கொட்டுவது இங்குள்ள அரசியலுக்கு புதிதில்லை என்றாலும், அது கீழ்த்தரமாக உள்ளது.
வாலி சொல்வது போல கம்பன் சொல்கிறான், “கூர்மையான அம்பினை என் மீது செலுத்தினாலும், என் உயிர் போகும் தறுவாயில் நாயினை ஒத்த இந்த அடியேனுக்கு மெய்மையைக் காட்டி எனக்கு அருள் செய்தாய். ராமா நீயே மும்மூர்த்தி, அதனினும் மேலான பரம்பொருள், அறம் – பாவம் – தர்மம் – பகை ஏன் இந்த உலகில் எல்லாமுமே நீதான்” என்று போற்றிப் புகழ்கிறான்..
'ஏவு கூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!
-கம்ப ராமாயணம்
வாலி வதைப்படலத்தில் முழுமையான உரையாடல் நடக்கிறது. வாலிக்கு ஆரம்பம் முதலே ராமன் மீது உயரிய எண்ணம் மட்டுமே உள்ளது. சூரிய குலத்தின் மீதும், தசரத புத்திரனின் மீதும், அவன் அவதாரத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவனே வாலி. ஆயினும் அவனுடைய கோபக்கனல் பொருந்திய கேள்விகளுக்கான பதிலை தன் தர்மத்தினால் அவனுக்கு விளக்கிக் காட்டுகிறார் ராமபிரான்.
வாலி முழுமையாக சரணடைந்து, யாருக்கு கிடைக்கும் இந்தப் பேறு என்றெண்ணி மோட்சத்தின் லட்சியப் பாதைக்கு நகருவதையும், அவனுடைய தவறுகள் பகலவனைக் கண்ட பனி போல விலகுவதையும் படம்பிடித்துக் காட்டியுள்ளான் கம்பன்.
அதுமட்டுமல்ல, அரக்கன் ராவணனுக்கு எதிராக ராமனுக்கு உதவும் பாக்கியத்தைப் பெறாமலே போகிறேனே என்றெல்லாம் கலங்குகிறான். ‘மூத்தோனின் சொல்லுக்கு மாறாத ராமனின் சகோதரர்கள், நாளை அண்ணனுக்கு எதிராகவே சமர் புரிந்த சுக்ரீவனை பழிக்கக் கூடாது. அவனை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றெல்லாம் கண்ணியமிக்க உரையை நிகழ்த்துகிறான்..
தனது மகனான அங்கதனை அழைத்து அவன் கூறுகிற வார்த்தைகள் மிக முக்கியமானவை.
பாலமை தவிர் நீ; என்
சொல் பற்றுதிஆயின், தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
மெய்ப்பொருள், வில்லும் தாங்கி,
கால் தரை தோய நின்று,
கட்புலக்கு உற்றது அம்மா!
“மால் தரும் பிறவி நோய்க்கு
மருந்து” என, வணங்கு, மைந்த!
-கம்ப ராமாயணம்
வீழ்ந்து கிடக்கும் வாலியை நோக்கிக் கதறுகிறான் மகன் அங்கதன். வாலி சொல்கிறான் அவனை நோக்கி, “உன் சிறுபிள்ளைத்தனத்தைக் கைவிட்டு என் பேச்சினைக் கேள். தனக்கு மேல் ஒரு பொருளும் இல்லை என்ற பெருமையுடைய மெய்ப்பொருளான கடவுள், வில்லினைத் தன் தோளில் தாங்கி நமக்காக தரையில் இறங்கி வந்திருக்கிறான். நம் கண்கண்ட தெய்வமாக நிற்கும் அவன் இப்பிறவி நோய்க்கு மருந்து, நீ அவனை வணங்கு” என்று மரணப் படுக்கையில் போதிக்கிறான் தன் மைந்தனுக்கு. அதோடு ஸ்ரீஇராமன் என்னைக் கொல்லவில்லை, எனக்கு பரமபதத்தையே வழங்கினான் என்ற அறிவுரையையும் சொல்கிறான் அடுத்து.
வாலி வதைப்படலம், பல தர்ம நியாயங்களை நுட்பமாக உரையாடுகிறது. ஆனால் ராமனின் மேன்மையை, அறத்தின் விழுமியத்தை அது உயர்த்தியே பிடிக்கிறது. அதை முழுமையாக உறுதி செய்வது வதையினால் வாடும் வாலியே. இந்தக் காட்சியின் ஆழமான வடிவம் நமது பாரதிய தொல் மரபுகளில் பதிந்துள்ளது. அதனாலேயே இந்தக் காட்சியை விளக்கும் பல பதிவுகளை பல நூற்றாண்டுகளாக செய்து வருகிறார்கள்.

இரண்டு கையகல சிற்பங்கள் இங்கே உள்ளன. முதல் படம் பொயு 10 ஆம் நூற்றாண்டு சோழர் கால கோவில் திருவிசலூரில் உள்ள வாலி வதை படல காட்சி. இரண்டாவது படம் பொயு 12 ஆம் நூற்றாண்டு அங்கோர்வாட் சிற்பமாகும். இந்த பாரத தேசம் முழுக்க உயரப் பறந்தது காவிக் கொடி, இந்நிலமெங்கும் கொண்டாடப்பட்ட அவதாரம் ஸ்ரீ இராமச்சந்திரமூர்த்தி.
ஜெய் ஸ்ரீராம்!
- திரு. சுந்தர்ராஜசோழன், முகநூல் எழுத்தாளர்.
$$$
14. புத்தி தெளிந்தால் புலம்ப வேண்டியதில்லை!
-பி.ஆர்.மகாதேவன்
இலங்கைத் தமிழர்கள் கொத்து குண்டுகளால் கொல்லப்பட்டபோது
பகுதி நேர உண்ணாவிரதம் இருந்த பகுத்தறிவுத் தலைவர்
புத்தி ஸ்வாதீனத்துடன்தான் அதைச் செய்தார்.
மழைவிட்டுவிட்டது; தூவானம் விடவில்லை என்று
அவர் சொன்னபோது
மதி மயங்கிவிட்டிருக்கவில்லை;
மது அருந்தியிருக்கவும் இல்லை.
முள்ளிவாய்க்கால் முள் வேலிக்குள்
எஞ்சிய தமிழ் மக்கள் முடக்கப்பட்டபோது
சக்கர நாற்காலியில் இலாகா பிச்சை எடுக்கப் போனபோதும்
புத்தி ஸ்வாதீனத்துடன் தான் இருந்தார்.
கீழ்வெண்மணித் தீர்ப்பு வந்தபோதும்
தாமிரபரணிப் படுகொலையின்போதும்
புத்தி ஸ்வாதீனத்துடன் தான் உத்தரவிட்டார்.
ரோம் தீப்பற்றி எரிந்தபோது
நீரோ மன்னன் பிடில் வாசித்தார்.
மலக்குழி மரணங்கள் நடந்தபோது இவர்
மானாட மயிலாட கண்டு ரசித்தார்.
தமிழக அரசியல் அகராதியில்
ஊழலுக்கு அர்த்தம் கலைஞர் என்று
உரை எழுதவைத்தபோது
புத்தி ஸ்வாதீனத்துடன் தான் இருந்தார்.
கவிப் பேரரசுகள் கை விளக்கு ஏந்திக்கொண்டு
கவிதைகள் புனைந்து கள் ஊற்றிக் கொடுத்து
கர ஊழியமும் செய்தபோது
புத்தி ஸ்வாதீனத்துடன் தான் இருந்தார்.
வாரிசுக்கு இடைஞ்சலாக இருந்த கள்ளத் தோணியை
கொலைப்பழி சுமத்தி ஓரங்கட்டியது கட்டுமரம்.
அப்போது அது தண்ணீரில் மிதக்கவில்லை.
தரையில்தான் காலூன்றியிருந்தது.
தீக்குளிக்க வைக்கப்பட்டவனின் உடலுக்கு
திராவிட மண்ணில்
ஒப்பாரி ஊர்வலத்துக்குக் கூட அனுமதி கிடையாதென்று
ஓரங்கட்டியபோது
புத்தி ஸ்வாதீனத்துடன் தான் இருந்தார்.
தள்ளாத வயதில் சிகிச்சைக்கு வந்து
கை இரண்டும் கூப்பிக் கெஞ்சிய தமிழச்சியை
தரை இறங்கவிடாமல் விரட்டியடித்தபோது
தமிழினத் தலைவர் தன்னுணர்வுடன்தான் இருந்தார்.
மலிவு விலையில் பாக்கெட் சாராயம் கொண்டுவந்து
நலிவடைந்த சமூகத்தை மேலும் நலிவடையச் செய்து
கள்ளுண்ணாமையை போதித்த ஆரியக் கைக்கூலியைப் பார்த்து
கை கொட்டிச் சிரித்தபோது
புத்தி ஸ்வாதீனத்துடன் தான் இருந்தார்.
ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தபோதும்,
வெறும் காகிதத்தைதான் எரித்தேன் என்று விளக்கம் கொடுத்தபோதும்,
புத்தி ஸ்வாதீனத்துடன் தான் இருந்தார்.
எனக்கு வாக்களியுங்கள்
எம்.ஜி.ஆர். உயிருடன் வந்தால்
ஆட்சியை அவரிடம் கொடுத்துவிடுகிறேன்
என்று புத்தி ஸ்வாதீனத்துடன் தான் சொன்னார்.
கோத்ரா பதிலடியின்போது
கூட்டணியில் தான் இருந்தார்…
கார்கில் போரிலும் கை கோர்த்து நின்றார்…
கோவை குண்டுவெடிப்புக்குப் பின்
கோட்டைமேடைச் சுற்றி வளைத்தார்.
வழிக்குக் கொண்டுவந்தால்
புத்தி ஸ்வாதீனத்துடன்
வாலாட்டத்தான் செய்வார்.
கீழ்த்தளத்தில் ரெய்ட்…
மேல் தளத்தில் கை முறுக்கிக் கூட்டணி…
தோல்வியே காணாத தன்மானத் தலைவன்
ஓடாமல் நிண்டு அடிவாங்கியபோதும்
புத்தி ஸ்வாதீனத்துடன் தான் இருந்தார்.
சர்வாதிகார ஆட்சிக் காலத்தில்
அருமை மகன் அடிவாங்கியபோதும்,
சதிகாரி ஆட்சியில்
அருமை மகள் சிறையிலடைக்கப்பட்டபோதும்
பாசத்தலைவர் புத்தி ஸ்வாதீனத்துடன் தான் இருந்தார்.
அடிமையின் புத்தி ஸ்வாதீனம்
எஜமான விசுவாசத்தைத்தான் காட்டும்.
அரக்கனின் புத்தி ஸ்வாதீனம்
தெய்வத்தைப் பழிக்கத்தான் செய்யும்.
பொறி கலங்கப் பிடரியில் அடிக்காவிட்டால்
பக்தர்கள் புத்தி ஸ்வாதீனமற்று
புலம்பத்தான் வேண்டிவரும்.
நாம் மேலும் மேலும் கோழைகளானால்….
அவர்கள் மேலும் மேலும்
அபாயகரமானவர்களாகத்தான் செய்வார்கள்.
- திரு. பி.ஆர்.மகாதேவன், கவிஜர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
$$$
15. ஹிந்துக்களே சிந்தியுங்கள்!
-கருவாபுரிச் சிறுவன்
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன்’ என்னும் செம்மை சேர் நாமம்தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்.
கடந்த அறுபது ஆண்டுகாலத்தில் ஹிந்துக்களின் தெய்வங்களை பழித்தும் இழித்தும் வெளிப்படையாகவே, பொதுவெளியில் பேசுவது நரித்தந்திரமாக தமிழக ஆட்சியைப் பிடித்த திராவிட கட்சிகளின் வாடிக்கையான விஷயம்.
அன்று ஆண்டாள், இன்று ராமர், நாளை எந்தத் தெய்வமோ…இது தொடர்பாக அவர்கள் செய்த தெய்வ நிந்தனை கள் ஏராளம் ஏராளம். விழித்துக் கொள்ளுங்கள் ஹிந்துக்களே.
ஹிந்துக்களை இழிவாக நினைக்கும் கழிசடைகளில் கடைந்தெடுத்த தற்குறிகளில் ஒருவரான வைரமுத்துவுக்கும், அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜெகத்ரட்சகனுக்கும், பிறப்பினால் உணர்வினால் உள்ளத்தால் ஹிந்து என்ற முறையில் ஒவ்வொரு ஹிந்து அன்பர்களும் கண்டனங்களைத் தெரிவியுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் புகார் அளியுங்கள்.
மீண்டும் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் ஹிந்துக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை நினைவில் கொண்டு நாம் இந்த கண்டனச் சிந்தனையைத் தொடருவோம்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை"
-என்பது நம் தேசிய கவியின் வாக்கு. இதை மீண்டும் மீண்டும் சிந்தித்தால், பாரதி சொல்லியதைப்போல யாவரே ஆயினும் அவர்களது வாக்கில் ஒளி உண்டாகும். நிற்க.
கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வார் வாக்கையும் அவமதித்து, கோடிக்கணக்கான அன்பர்களின் உள்ளங்களில் நித்திய வாஸம் செய்யும் ஸ்ரீராமரையும் பழித்துப் பேசும் தற்குறியின் பேச்சுக்குக் கண்டனம் தொடர்கிறது!
கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வார் பெயரில் விருது வாங்கிக்கொண்டு, அதே மேடையில் நின்று, சிந்தையிலும் பிறமாதரை நினையானாகிய ஸ்ரீராமபிரானை ‘புத்தி ஸ்வாதீனம் இல்லாதவர்’ என்று கம்பர் வாக்கிற்கு தவறான பொருளை கற்பித்தவர் எப்படி கவிப்பேரரசாக இருக்க முடியும்?
இப்பேச்சு எல்லாம் தன்னால் ராமபிரானைப் போல ஒழுக்கசீலனாக மக்கள் மத்தியில் வாழ்ந்து காட்டி, பெயரும் புகழும் வாங்க முடியவில்லை என்ற மன ஆதங்கத்தின் வெளிப்பாடு தானே?
ஸ்ரீ ராமபிரானையும், அவரின் உத்தம கல்யாண குணங்களையும் போற்றிய கம்ப நாட்டாழ்வாரையும் ஒரே மேடையில் அவமதிக்கும் உங்களுக்கும், நீங்கள் சார்ந்து இருக்கும் திராவிடக் கூட்டத்திற்கும் தான் புத்தி ஸ்வாதீனம் இல்லை.
பல ஆண்டுகளாகக் கவிச்சக்கரவர்த்தி கம்பனை ‘இனத்துரோகி’என்றும், அவரது காவியத்தை ‘கம்பரசத்தில் காமரசம்’ என்றும் துாற்றிய திராவிடக் கும்பல், இன்று திடீரென அவரைக் கொண்டாடப் புறப்பட்டுள்ளது ஏனோ! தமிழகத்தில் சநாதன தர்மத்தின் எழுச்சி, முருக பக்தர்களின் மாநாடு கண்டு பீதியடைந்து, ஹிந்து சமய அங்கீகார சின்னங்களைத் திருடும் ஈனச்செயலை நாடும், நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.
திமுகவுக்கும், விழா நடத்தும் ஜெகத்ரட்சகனுக்கும் வைரமுத்துவுக்கு விருது கொடுக்க ஆசையிருந்தால், உங்கள் தலைவர் பெயரில் கொடுத்திருக்கலாமே? அப்போது உங்கள் ஈனச்செயல்களில் யாரும் முறையீடும் தலையீடும் செய்ய மாட்டார்கள். அதை விடுத்து, இத்தேசத்தின் இதிகாச நாயகனையும், அவரின் பெருமை,சிறப்புகளை தமிழில் அழியா காவியமாக படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வார் பெயரை உங்கள் அற்ப அரசியலுக்குப் பயன்படுத்திக் தன்னைத்தானே களங்கப்படுத்திக்கொண்டீர்கள்.
இவரது செயல் சூரியனைப் பார்த்து குரைப்பது போன்றும், கை வைத்து மறைத்தால் அவனுடைய ஒளியை பெற முடியாது என நினைப்பவர் போலவும் தங்களது பேச்சு அமைந்தது அற்பத்தனமானது.
அந்தோ பரிதாபம்! தங்கள் அறியாமைக்கு ஆழ்ந்த இரங்கல்.
கீழ்க்கண்ட செய்யுள் தங்களுக்கு பாவ விமோசனம் அளிக்கும் என நினைக்கிறோம்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே! திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே! ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே! இம்மையே ராம எனும் இரண்டெழுத்தினால்!
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!
- திரு. கருவாபுரிச் சிறுவன், ‘பொருள் புதிது’ தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்.
$$$