உருவகங்களின் ஊர்வலம் – 79

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #79...

79. பக்கத்திலிருக்கும் பாயிடம் சொல்லுங்கள்!

பாகிஸ்தான் இஸ்லாமிய தேசம் என்பதால்தான்
ஹிந்துக்கள் அனைவரையும் அங்கிருந்து விரட்டியடித்தார்கள்…
பங்களாதேஷ் இஸ்லாமிய தேசம் என்பதால்தான்
ஹிந்துக்கள் அனைவரையும் விரட்டியடிக்கிறார்கள்…

இலங்கை பெளத்த தேசம் என்பதால்தான்
ஹிந்துக்களைக் கொன்று குவித்தார்கள்…
தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டதால்தான்
ஹிந்துக்களால் திருப்பியடிக்கவும் முடிந்தது.

பிரிவினைக்காலத்தில் சீக்கியர்கள்தான்
பெருமளவுக்குத் திருப்பியடித்தார்கள்…
சீக்கியர்களாக இருந்ததால்தான் திருப்பியடித்தார்கள்.

ஹிந்துக்களைக் காப்பாற்ற எந்த தேசமும் இல்லை
இந்தியா ஹிந்து தேசமாக ஆகாததால்தான்
இவையெல்லாம் நடக்கின்றன.

காஷ்மீரில் பண்டிட்கள் விரட்டப்பட்டார்கள்…
மேற்குவங்கத்தில் ஹிந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்…
கேரளாவில் ஹிந்துக்கள் கொல்லப்படுகிறார்கள்…
தமிழகத்தில் ஹிந்துக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்…
வட கிழக்கில் ஹிந்துக்களுக்கு இடமில்லை…
ஹிந்துக்களைக் காப்பாற்ற யாருமில்லை.

ஹிந்துக்கள் தம்மை ஹிந்துவாக உணர்வதில்லை என்பதால்தான்
இவையெல்லாம் நடக்கின்றன.

ஹிந்துக்களில் பாதிப் பேர் தம்மை
இன்ன ஜாதியாகப் பார்க்கிறார்கள்…
மீதிப் பேர் மொழிப்பற்றாளராகப் பார்க்கிறார்கள்…
அதுகூடப் பரவாயில்லை,
ஹிந்து விரோதமே மொழிப்பற்று என்றும் இருக்கிறார்கள்.

தென்கலை ஐயங்கார்கள் வடகலை ஐயங்கார்களுடன் மோதுவார்கள்…
ஸ்மார்த்தர்கள் சிவாச்சார்யர்களுடன் மோதுவார்கள்…
சாம்பவர்கள் புரதவண்ணாருடன் சேர மாட்டார்கள்…
அருந்ததியர்கள் இருளர்களுடன் மோதுவார்கள்…
வன்னியர்கள் தேவர்களுடன் சேர மாட்டார்கள்…
நாடார்கள் பிள்ளைமாருடன் இணைய மாட்டார்கள்….

சேர சோழ பாண்டிய தமிழர்கள் முன்பு மோதினார்கள்…
வடக்கு கிழக்கு தமிழர்கள் இன்றும் மோதுகிறார்கள்…
மலையகத் தமிழர்கள் யாழ்ப்பாணத் தமிழருடன் சேர மாட்டார்கள்.

ஹிந்துக்களின் பலம் ஜாதி உணர்வு
இந்துக்களின் பலவீனம் மத உணர்வின்மை.

இஸ்லாமியர்கள் தம்மை இஸ்லாமியராகப் பார்க்கிறார்கள்…
மொழிப்பற்று கிடையாது…
தேசப்பற்று கிடையாது…
மதமே எல்லாவற்றுக்கும் மேலாக.

ஆனால்,
இஸ்லாமியரின் இந்த ஒற்றுமையெல்லாம்
ஹிந்து தேசத்தில் வாழும்வரைதான்.

இஸ்லாமிய தேசத்தில்
ஷியா மசூதியில் சன்னிகள் வெடிகுண்டு வைப்பார்கள்
சன்னி மசூதியில் ஷியாக்கள் வெடிகுண்டு வைப்பார்கள்.
ஷியாக்களும் சன்னிகளும்
அஹமதியா மசூதிகளில் குண்டு வைப்பார்கள்.

இராக் முஸ்லிம்கள் அல் ஹிஜ்ரா – ஸ்கட் ஏவுகணை ஏவி
குவைத் முஸ்லிம்களைக் கொல்வார்கள்…
குவைத் முஸ்லிம்கள் அப்துல்லா அல் முபாரக் தளத்திலிருந்து
இராக் முஸ்லிம்கள் மீது பதில் ஏவுகணைகள் ஏவுவார்கள்…
குர்தி, ஷியா, சன்னி, யாஸ்தி முஸ்லிம்களை
இராக்கிய பெடூயின் முஸ்லிம் சதாம் ஹுசேன் கொல்வார்…
இராக்கிய முஸ்லிம்களை
சவுதி அரேபிய முஸ்லிம்கள் கொல்வார்கள்…

உலகில் மன்னராட்சி முடிந்துவிட்டது…
சுல்தான் ஆட்சி முடியவில்லை.
பிரச்னை-
பாகிஸ்தானிலோ பங்களாதேஷிலோ இல்லை…
இரானிலோ இராக்கிலோ இல்லை…
ஷியாவிலோ சன்னியிலோ இல்லை…
இஸ்லாமியர்களிடம் இருக்கிறது…
இஸ்லாமில் இருக்கிறது.

*

எந்த நாடுகளிலோ நடக்கும் சண்டையால்
எங்களுக்கு என்ன?
உண்மைதான்.
ஆனால்
அங்கெல்லாம் இருக்கும் இஸ்லாம்
இங்கும் இருக்கிறது.

அங்கெல்லாம் ஆதிக்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்
இங்கும் ஆதிக்கம் நோக்கி நகர்கின்றனர்.
தலைக்கு மேலே தொங்குகிறது தக்கியா கத்தி.

ஹிந்துக்கள் ஹிந்துக்களாக உணராததால் பிரச்னை….
இஸ்லாமியர் இஸ்லாமியராக உணர்வதால் பிரச்னை…

இஸ்லாமிய ஆட்சி இல்லாத தேசங்களில்
தாம் இஸ்லாமியர் என்று உணர்வதாலும்,
இஸ்லாமிய ஆட்சி நடக்கும் தேசங்களில்
தாம் மட்டுமே இஸ்லாமியர் என்று உணர்வதாலும் பிரச்னை!

சிலர் இஸ்லாமியராக உணர்வதால்
ஜிஹாத் வன்முறையில் ஈடுபடுகின்றனர்…
பலர் இஸ்லாமியராக உணர்வதால்
ஜிஹாத் வன்முறையைக் கண்டிப்பதில்லை…

இஸ்லாமிய ஆட்சி இல்லாத தேசங்களில்
தாம் இஸ்லாமியர் என்று உணர்வதாலும்,
இஸ்லாமிய ஆட்சி நடக்கும் தேசங்களில்
தாம் மட்டுமே இஸ்லாமியர் என்று உணர்வதாலும் பிரச்னை!

நோய்நாடி நோய்க்கு முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

*

இன்றைய இஸ்லாமிய தேச வன்முறைகளுக்கு
அமெரிக்க ரஷ்யாவும் காரணம்.
உண்மைதான்.
இன்றைய ஹிந்துஸ்தானிய ஜாதி மோதல்களுக்கு
அதே அமெரிக்க ஐரோப்பிய க்ரிப்டோ கிறிஸ்தவமே காரணம்.
ஆனால்,

பெடூயின் சதாம் ஹுசேன் ஆட்சிக்கு வந்தால்
மற்ற முஸ்லிம் குழுக்களைக் கொல்வான்…
பிராமணப் பெண் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்
69% இட ஒதுக்கீடு கொடுப்பார்.

சுல்தான் எவ்வழி குடி அவ்வழி
சுல்தான் ஆட்சியில்.
குடி எவ்வழி கோன் அவ்வழி
மத நல்லிணக்க மக்களாட்சியில்.

மார்க்கம் எவ்வழி சுல்தான் அவ்வழி
தார் அல் இஸ்லாமில்…
அரசியல் சாசனம் எவ்வழி ஆட்சியாளர் அவ்வழி
ஹிந்துத்துவவாதி ஆளும் ஹிந்துஸ்தானில்.

*

வடகலை- தென்கலை குழுக்கள்
சம்பிரதாய மோதலை முடித்துக்கொண்டு
புளியோதரை சாப்பிடப் போய்விடுவார்கள்…
ஸ்மார்த்தர்கள்- சிவாச்சார்யார்கள்
ஆகம மோதல் முடித்த பின்
அப்பம், வடை, தயிர் சாதம் சாப்பிடப் போய்விடுவார்கள்…
தேவர்- தேவேந்திரர் வெட்டிக் கொல்வார்கள்…
ஆனால்,
ஏவுகணை ஏவிக் கொல்ல மாட்டார்கள்.
வன்னியர் – சாம்பவர் மோதிக்கொள்வார்கள்…
பிறருடைய வழிபாட்டிடத்தில் வெடிகுண்டுவைக்க மாட்டார்கள்.

தான் மட்டுமே உண்மைக் கடவுள் என்று ஒரு கடவுள்
மற்ற கடவுள்களை மறுதலித்தால்,
நான் மட்டுமே மார்க்க விசுவாசி என்று அதன் பக்தன்
மற்றவர்களைக் கொல்வான்.

போர் வேண்டாமென்று என்று
பாகிஸ்தானிடம் சொல்ல முடியாதுதான்,
கழகக் கண்மணிகளே!
பக்கத்திலிருக்கும் பாயிடம் சொல்ல முடியும்-
காஃபிருக்கு எதிரான ஜிஹாத் வேண்டாமென்று.

சொல்லியாக வேண்டும்
ஏனென்றால்
எங்களைப் போலவே
நீங்களும் அவர்களுக்கு ஒரு காஃபிரே!
வெறும் காஃபிர் அல்ல;
ஹிந்துஸ்தானின் காஃபிர்
கலிமா தெரியாத காஃபிர்.

$$$

Leave a comment