பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 3

-காலச்சக்கர நரசிம்மா, ராஜசங்கர் விஸ்வநாதன்

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

1. நினைத்தது ஒன்று ,  நடந்தது ஒன்று! 

-காலச்சக்கரம் நரசிம்மா

பஹல்காமில் நம்  சுற்றுலாப் பயணிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தானின் திட்டத்திற்குப் பின்பாக இருந்த காரணம் அந்த நாட்டு மக்களுக்கே புரிந்து போக,  அவர்களே இப்போது தங்கள் ராணுவத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் . 

பாகிஸ்தானில் ,  பஞ்சாப் , பலூச்சிஸ்தான் ,  கில்ஜித் பல்டிஸ்டான், சிந்து மாகாணம் போன்ற மாகாணங்கள் உள்ளன .  இவற்றைத் தவிர நம்மிடம் கைப்பற்றப்பட்ட, ஆஸாத் காஷ்மீர் பகுதியும் உள்ளது .  பஞ்சாப் மாநிலத்தைத் தவிர மீது எல்லா மாநிலங்களிலும் வறட்சி . 

திபெத்திலிருந்து  காஷ்மீர் வழியாகப் பாய்ந்து , பாகிஸ்தானில் நுழைந்து பாகிஸ்தான் பஞ்சாப்  வழியாக சிந்து மாகாணத்தை அடைந்து, அங்கு அரபிக் கடலில் கலக்கிறது, சிந்து நதி . 

பஞ்சாப் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் ,  நமது ராஜஸ்தான் தார் பாலைவனத்தின் எஞ்சிய பகுதி  விஸ்தாரமான பாலைவனமாக விரிகிறது .  அந்தப் பகுதியின் பெயர்  ‘சோலிஸ்தான்’.  ரோஹி  என்று சிந்து மாநிலத்தவர் அழைக்கிறார்கள் .  

பஞ்சாப்  பகுதியில் தான் பாகிஸ்தானின் ராணுவ  அதிகாரிகள்,  எலைட் மனிதர்கள், கொள்கை வடிவமைப்பவர்கள் வசிக்கிறாரகள் . 

அவர்கள் சோலிஸ்தான் பாலைவனத்தை பசுமைப் பகுதியாக  மாற்ற திட்டம் போட்டு, சிந்து நதியின் நீரை அந்தத்  திட்டத்திற்காக நிறைய எடுத்து கொண்டு விட்டார்கள் .

சிந்து மாநிலத்தில் ஏற்கனவே குறைவாகத் தான் சிந்து நதி நீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது .  அரபிக்கடலில்  சிந்து நதி கலக்கும் இடத்தைப் பார்த்தால் ,  நமது பக்கிஹாம் கால்வாய்   தண்ணீர் போல, கலங்கலாக குப்பை கூளங்களுடன் காணப்படும்.  

சிந்து மாகாணம் 70 சதவீதம் உழவுத் தொழிலை நம்பி இருக்க ,  அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரே நம்பிக்கை சிந்து நதி .  

தங்களுக்கு உள்ள நீரை பஞ்சாப்  மாகாணம் எடுத்துக் கொள்வதாக  சிந்து மாகாணம் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தது .  இந்த நிலையில் ,  சோலிஸ்தான் பாலைவனம் பசுமைத் திட்டத்தை அறிவித்ததும் ,  சிந்து மாகாணத்தில்  போராட்டம் வெடித்தது.  சிந்து மாநிலக் கட்சியின் தயவில் தான் நவாப் ஷெரீப் கட்சியின் ஆட்சி பாகிஸ்தானில் நடக்கிறது .  

கடந்த ஒரு  மாதமாகவே ,  சிந்து மாநிலத்தில் ராணுவ ஜீப்கள் ,  கார்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன .  பஞ்சாப்  மாநிலத்துக்கு எதிராக  போராட்டங்கள் வெடித்துள்ளன.  

இது போதாது என்று ,  பெரிய மாநிலமான பலூச்சிஸ்தானில்  தனி நாடு   கேட்டு பாகிஸ்தான் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர் .  பலூச்சி தலைவி மஹரங்க்  பலூச்  பாக். ராணுவத்தினால் கைது செய்யப்பட , அதனால் கலவரம் பரவிக் கொண்டிருக்கிறது .  

மேலும் ஒரு குழப்பத்தை பாகிஸ்தான் செய்திருக்கிறது .  பஞ்சாப்  பகுதியில் அதிகமாக சுன்னி முஸ்லிம்கள்  வாழ்கிறார்கள் .  கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியில்  ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறாரக்ள் .  பஞ்சாப்  பகுதியைச் சேர்ந்த சுன்னி முஸ்லிம்களை  கில்ஜித் பல்டிஸ்ட்தான் பகுதியில்  ராணுவம் குடியேற்ற,  அதனால் அங்கே பல்டிஸ்தானில் போராட்டம் வெடித்துள்ளது .

மாநிலங்கள் இடையே கலவரங்கள் வெடித்துக் கொண்டிருக்க –   அவர்களை திசை திருப்ப ,  இந்தியாவுடன் பிரச்னை ஏற்பட்டால்  (பாக்.) மாநிலங்களுக்கு இடையே இணக்கம் தோன்றும் ,  இந்தியாவுக்கு எதிரான போர் சூழ்நிலை வந்தால் ,  பாகிஸ்தான்  ஒன்றுபடும்  என்கிற எண்ணத்தில் தான்  தீவிரவாதிகள்    பஹல்காம் அனுப்பப்பட்டார்கள். 

பஹல்காம் கொலைகளுக்குப் பிறகு இந்தியா எல்லையில் தனது ராணுவத்தைக் குவிக்கும் .  உடனே  போராடிக் கொண்டிருக்கும் மாநிலங்கள் ஒன்றுபட்டு ,  ஒரே பாகிஸ்தானாக இந்தியாவை எதிர்கொள்ளும்; துருக்கி ,  சீனா ,  இஸ்லாமிய நாடுகள் எல்லாம் தனது பக்கம் நிற்கும் என்றெல்லாம் நினைத்திருந்தது ,  பாக். அரசு.

ஆனால், ராணுவ ரீதியாக இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்க ,  இந்தியாவோ சமயோசிதமாக ,   பாகிஸ்தானின் life-line சிந்துவின் மீது  கைவைத்தது .  இதை பாகிஸ்தான் எதிர்பார்க்கவிலை .  

சிந்து மாகாணத்திற்கு நீர் அனுப்புவது இருக்கட்டும் ,  இப்போது பஞ்சாப்  மாநிலத்திற்கே சிந்து நதி நீர் இல்லை .  இந்த நிலையில் ,  சோலிஸ்தான்  பசுமைத் திட்டத்தைக் கைவிடுவதாக ,  பாக். அரசு  அறிவித்துள்ளது . 

ஆனாலும், சிந்து மக்களின் கோபம் தணியவில்லை .  பாக். அரசு நடத்திய நாடகத்தால்தான் இந்தியா சிந்து நதி உடன்படிக்கையை ரத்து செய்து விட்டது .   சிந்து நதி நீர் கிடைக்காமல் அடியோடு வற்றி விட்டது என்று போராட்டத்தைத்  தொடர்கிறார்கள் .  

அற்பமான அரசியல் காரணங்களுக்காக பஹல்காம் சதியை அரங்கேற்றிய பாகிஸ்தான் ,  இப்போது ஆப்பு அசைத்த குரங்காக  விழித்து கொண்டு இருக்கிறது . 

துருக்கி பாகிஸ்தானைப் பாதுகாக்க ஆறு விமானங்களை அனுப்பிப உள்ளதாக வந்த செய்தியை துருக்கி பாதுகாப்பு அமைச்சர் மறுத்திருக்கிறார் . ஒரே ஒரு விமானம் மட்டும்தான் refuelling காக அனுப்பினோம் என்றார் . 

இப்போது பங்களாதேஷ், சவுதி  மூலமாக பிரச்னையைத் தீர்க்கும்  முனைப்பில் இருக்கிறது பாகிஸ்தான் .

(மேலே குறிப்பிடப்பட்டவை, காஷ்மீரில் உள்ள நடுநிலை பத்திரிகையாளர்களிடம் திரட்டிய சேதிகள் .  அவர்கள் தங்கள் பாகிஸ்தான் நண்பர்களிடமும்   பெற்ற தகவல்கள் .  இந்தச் செய்திகள்  நமது நாளிதழ்களில் வராது ).

  • நன்றி: திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் முகநூல் பதிவு.

$$$

2. பித்தலாட்ட நாயகர்கள்

-ராஜசங்கர் விஸ்வநாதன்

இலங்கை நாடு ஒரு நல்ல நாடு;

இலங்கையின் ராணுவமே மோசமானது அல்ல. 

எல்லா சிங்களவர்களையும் குற்றம் சாட்டக் கூடாது;

சிங்கள பொதுமக்களை தாக்கக் கூடாது. 

குற்றம் செய்தவர்களைப் பிடித்து தண்டிக்க வேண்டும். 

இலங்கை கிரிக்கெட் குழுவுடன் விளையாடி நல்லுறவு பேண வேண்டும். 

இப்படி ஏதாவது ஒரு ஆள், இலங்கையிலே போர் நடந்து கொண்டிருக்கும்போது சொன்னதா? 

அல்லது  இப்போது சொல்லுமா? 

.

இலங்கை என்றால், சிங்களவர் என்றால் – கண் மண் தெரியாமல் உருளுவது.

அதே அந்த தீவிரவாத நாடு என்றால் – அஹிம்சை, அமாவாசை என பேசுவது. 

இந்த அஹிம்சை, அமாவாசை எல்லாம் ஏன், சிங்களவர்கள் மீதும் இலங்கை மீதும், வர மாட்டேன் என்கிறது? 

.

இதையே யூதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் சொல்லலாமா? 

எல்லா யூதர்களும் மோசமானவர்கள் கிடையாது; இஸ்ரேல் நாடு நல்ல நாடு. 

ஒருவர் தவறு செய்தால் அவரை தண்டிக்க வேண்டும். 

ஒரு நாட்டின் அப்பாவி மக்களை தண்டிக்கக் கூடாது.

ஏன் யூதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இந்த அப்பாவி உருட்டு வர மாட்டேன் என்கிறது? 

ஏன்? என்ன காரணம்? 

.

அவ்வளவு தூரம் போவானேன்? 

இங்கே பிராமணர்கள் மீது சொல்லலாமா? 

எல்லா பிராமணர்களும் கெட்டவர்கள் கிடையாது;

ஒரு பிராமணன் குற்றம் செய்தால் அவரை மட்டும் தண்டிக்க வேண்டும். 

ஏன் எல்லாரின் மீதும் அப்பாவிகள் மீது வெறுப்பைக் கக்க வேண்டும்? 

என இதுவரைக்குமோ அல்லது, இப்போது சொல்லுமா? 

ஏன் இந்த மானங்கெட்ட பொழைப்பு? 

.

இங்கே இருக்கும் பிராமணர்கள் என்றால் வரும் வெறுப்பு…

பக்கத்து நாடான இலங்கை என்றால் சிங்களவர்கள் என்றால் வரும் வெறுப்பு…

எங்கேயோ இருக்கும் நாடான யூதர்கள் என்றால் இஸ்ரேல் என்றால் வரும் வெறுப்பு… 

ஏன் ஒரு தீவிரவாத நாடு நம்முடைய நாட்டின் குடிமக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் நாட்டின் மீது வரமாட்டேன் என்கிறது? 

.

தொடர்ந்து வெறுப்பைக் கக்கிவரும் ஆட்கள்,

அந்த குறிப்பிட்ட நாடு என வந்துவிட்டால் உடனே-

ஆகா அஹிம்சை, ஆகா நேர்மை, ஆகா வெறுப்பு கூடாது  என,

அதற்கு மட்டும் ரொம்பவும் நல்லவனாக ஏன் ஆகிவிடுகிறதுகள்? 

.

இலங்கை கிரிக்கெட் குழு என்றால் ஆகாது.

ஆனால் அந்த தீவிரவாத நாட்டின் கிரிக்கெட் குழு என்றால் ஆகுமா? 

இதிலே வேறு ஒரு அல்லைக்கை முண்டம் அந்த நாட்டின் ஆட்களுடன் படம் எடுத்துப் போட்டு, ‘நோ ஹேட், சவுத் ஈஸ் டிபரென்ட் ப்ரோ’ என உருண்டது. 

அதையே ஒரு இலங்கை கிரிக்கெட் குழுவுக்கு செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்? 

.

ஏன், அந்த தீவிரவாத நாட்டிலே இருந்து ஏதாவது பணம் வருகிறதா?

அல்லது, இங்கே இருக்கும் குறிப்பிட்ட மர்மான மனிதர்களே இப்படிப் பேசினால் பணம் கொடுக்கிறார்களா? 

இதை அரசு விசாரிக்க வேண்டும். 

.

அன்பை போதிக்க வேண்டும் என்றால், எல்லோரிடமும் போதிக்க வேண்டும். 

மதம் பார்த்துத் தான் அன்பு வரும் என்றால், அதுவும் தீவிரவாதம் தான். 

மனிதர்களிடத்தே அன்பு காட்டுங்கள் என நாடகமாடும் ஆட்களின் வேஷத்தைக் கலைப்போம். 

  • நன்றி: திரு. ராஜசங்கர் விஸ்வநாதன் அவர்களின் முகநூல் பதிவு

$$$

Leave a comment